தமிழ்த்தேசியம் "தமிழ்வின்" இன் குடும்ப சொத்தா ?

உறவினர்களுக்காக உழைக்கும் ஊடகங்கள் : தமிழ்வின்

அதிர்வு இணையம் இச் செய்தியை எழுதவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளது. தமிழ் மக்களுக்கு எம்மாலான அனைத்துச் செய்திகளையும் தெரிவித்துவருகிறோம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாகும். எனவே இதில் எவரையும் நாம் தனிப்பட்ட வகையில் சாட முற்படவில்லை.

யாழ்ப்பாணத்தில் த.தே.கூட்டமைப்போடு இணைந்து தேர்தல் களத்தில் குதித்துள்ளவர்களில் ஒருவர் சிறி வாத்தி என்று அழைக்கப்படும் சிவஞானம் சிறீதரன். இவர் லங்கா ஸ்ரீ இணையத்தின் உரிமையாளரின் சொந்த சகோதரர் ஆவார் என்பது பலருக்குத் தெரியாது. இது குறித்த வலுவான ஆதாரம் எம்மிடம் உள்ளது. எவரும் மறுக்க முடியாது. இவ் விடையத்தை நாம் பல நாட்களுக்கு முன்னரே அறிந்திருந்தும் இது குறித்து செய்திகளை வெளியிட விரும்பவில்லை, இருப்பினும் தற்போது லங்கா ஸ்ரீ க்குச் சொந்தமான மற்றொரு இணையமான தமிழ் வின் சிறி வாத்தியை, முதன்மைப்படுத்தி விளம்பரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

ஊடகம் என்பது ஒரு நடு நிலை வகிக்கவேண்டும், ஆசா பாசங்களுக்கு கட்டுப்பட்டு, உறவினர்களை வாழ்த்தியும், தனது சொந்த குடும்பத்தாருக்காகவும் நடத்தப்படக் கூடாது என்பதே எமது வாதம். அதாவது யாழ்ப்பாணத்தில் பல கட்சிகள், மற்றும் சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்ற இந்த வேளை அதிக வாசகர்களைக் கொண்டுள்ள இது போன்ற இணையங்கள் நிச்சயம் நடுநிலையைக் கையாளவேண்டும் என்பதே எமது மக்களின் விருப்பமாகும் என்பதில் சந்தேகமில்லை. அத்தோடு சிறி வாத்தியின் விளம்பரத்தைப் போட்ட இந்த இணையம் ஏன் வேறு ஒரு வேட்ப்பாளரையும் விளம்பரமாக போடவில்லை என்ற கேள்வி ஒன்றின் மூலமே எமக்கு தகுந்த விடை இங்கே கிடைத்துவிடும்.

தமிழர் போராட்டத்தில், ஈழத் தமிழர்களுக்காக உழைத்து, அல்லது அவர்களின் உரிமைகளை வெண்றெடுக்கப் போராடி, (அது அரசியல் போராட்டமாக இருக்கலாம்), மற்றும் சுய நிர்ணய உரிமைகளை லட்சிகமாகக் கொண்டேரே தற்போது தமிழ் பாராளுமன்ற உறுபினர்களாக எமக்குத் தேவை. பலர் இவ்வாறு நாட்டிற்காய் உழைத்திருக்கிறார்கள், பலர் போட்டியிடவும் கூடும் அவர்கள் யார் என்று கூட எமக்கு தெரியாத நிலையில், பிரபல்யமான ஊடகங்களை நடத்துபவர்கள் தமது உறவினர்களை முதன்மைப்படுத்தி இவ்வாறு விழம்பரப்படுத்துவது ஒரு நாகரீகமற்ற செயலாகும். அதாவது சுருக்கமாகச் சொல்லப் போனால் தமது ஊடகத்தின் பலத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

சிறி வாத்தையை முதன்மைப்படுத்தி விளம்பரம் செய்யும் தமிழ் வின் இணையம் நாளை அவர் குறித்த செய்திகளையும், த.தே.கூட்டமைப்பின் செய்திகளையும் முதன்மைப்படுத்தி வெளியிடாமல் இருக்குமா ?. அவர்கள் விடும் சில பிழைகளைக் கூட சுட்டிக்காட்ட தயங்கும் என்பதில் ஜயமில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தமிழ் தேசியத்திற்கான முன்னணி ஆரம்பிக்கப்படது, சிவாஜிலிங்கம் போன்றோர் வேறு ஒரு கட்சியை ஆரம்பித்தனர், சுயேட்சையாக பலர் போட்டி இடுகின்றனர், இதில் யார் வெண்றால் எமது சுயநிர்ணய உரிமை வெல்லப்படுமோ, யார் வெண்றால் தமிழர் மானம் பாதுகாக்கப்படுமோ, யார் வெண்றால் மாண்ட வீரரின் கணவுகள் பலிக்குமோ, மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்குமோ அவர்களே தேர்ந்தெடுக்கப்படவேண்டியவர்கள்.

ஊடகங்கள் நடாத்துபவரின் உறவினர்கள் அல்ல, இது உதயன் பத்திரிகையின் உரிமையாளர் வித்தியாதரனுக்கும் பொருந்தும். ஏனெனில் அவர் மைத்துனரும் உதயன் ஆதரவில் அரசியல் நடாத்தப்பார்க்கிறார். இந்த உறவினர் பக்கச்சார்பு நிலையை இந்த பொறுப்புள்ள ஊடகங்கள் முதலில் களையவேண்டும் என்பதே எமது வேண்டுகோள் !




அதிர்வு

விநாயகத்தின் விபரீத வலை- கறுப்பு



புலம் பெயர்ந்த தமிழ்மக்களிடையே தற்போது அதிக பிரசித்திபெற்ற செய்தித்தளங்களுள் தமிழ்வின் தளம் முதன்மையானது. புதினம் தளத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து தமிழ்வின் தளம் அதிக வாசகர்களைக் கொண்ட தளமாக இன்று விளங்குகிறது. இன்று உலாவரும் நூற்றுக்கணக்கான வலைத்தளங்கள் போலன்றி ஊடகத்தைத் தொழில்முறையாகவே நடத்தி வருகிறது இந்தக் குழுமம்.

ஊழியர்களை நியமித்து 24 மணிநேரப் பணியாக இந்த ஊடகக் குழுமம் செயற்பட்டு வருவது நாமனைவரும் அறிந்ததே. இப்படிப்பட்ட தொழில்முறை ஊடகம் தனது ஊடக தர்மத்திலிருந்து வழுவிச் செயற்படுவதைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.

தாயகத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இவ்வூடகம் முழுமையான பக்கச்சார்பை எடுத்துள்ளது என்ற தோற்றப்பாடே இப்போது தெரிகிறது. தனது தமையனார் த.தே.கூ சார்பில் போட்டியிடுகிறார் என்ற காரணத்தால் மட்டுமே இப்படியான பக்கச்சார்பை எடுப்பது நியாயமற்றது. அத்துடன் பொறுப்பான ஊடகம் என்றளவில் – அதிக தமிழ்மக்களால் பார்க்கப்படும் ஊடகம் என்றளவில் – அது தனது நியாயத் தன்மையைக் குறைந்தபட்சமாவது பேண வேண்டியது அவசியமாகும்.

செய்திகளைப் பக்கச்சார்பின்றி வெளியிடுவதையே நாம் இங்குக் குறிப்பிடுகின்றோம். ஒருதரப்பின் செய்திகளை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டு மற்றத் தரப்பின் செய்தியை முற்றாக மறைத்து வருவது ஊடக தர்மமன்று. தமிழ்வின் இப்படியான நிலைப்பாட்டிலிருந்து மாறி செய்திகளையாவது நடுநிலையுடன் கொண்டுவர வேண்டுமென்பது தமிழ்மக்கள் எல்லோரினதும் எதிர்பார்ப்பு.

‘தமிழ்த் தேசியத்துக்கான முன்னணி’ (த.தே.ம.மு) தனது உருவாக்கம் பற்றி வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலாக சுரேஸ் பிரேமச்சந்திரன் எழுதிய பதிலறிக்கை ஒன்று ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அதற்குப் பதிலளித்து த.தே.ம.மு எட்டுப் பக்க அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கை ஏனைய ஊடகங்களில் வெளிவந்தது போலவே தமிழ்வின் தளத்திலும் வெளிவந்திருந்ததைக் கண்டோம். ஆனால் பிறகு அந்தச் செய்தியைக் காணவில்லை. தாம் நடுநிலைமை வாதிகள் என்று காட்டிக்கொள்ள அச்செய்தியை வெளியிட்டுவிட்டு பிறகு அதை ஒளித்து வைத்தார்களா?

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, வெளியிட்டுவிட்டு ஒளிப்பது என்பது மாறி வெளியிடாமலே விடுவது என்ற நிலைக்கு இப்போது தமிழ்வின் தளம் சென்று விட்டதோ என்ற ஐயம் இன்று ஏற்பட்டுள்ளது. த.தே.ம.மு. ஐ ஆதரித்தும் SMS என்கிற சம்பந்தர், மாவை, சுரேஸ் ஆகியோரைக் கொண்ட அணியை விமர்சித்தும் பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையை இப்பத்தி எழுதப்படும்வரை தமிழ்வின் பிரசுரிக்கவில்லை. அவ்வறிக்கை வெளியிடப்பட்டு முப்பது மணித்தியாலங்களைக் கடந்துவிட்ட நிலையில் (இந்த defeatsms தளத்தை நடத்தும் ஒருவர் தொடர்புடைய இன்னொரு செய்தித் தளத்துக்கு அந்த அறிக்கை வந்த நேரத்தைக் கொண்டு இது கணிக்கப்படுகிறது.) இன்னமும் அந்த அறிக்கை தமிழ்வின் தளத்தில் வெளியிடப்படவில்லை.

அறிக்கையை வெளியிட்ட அமைப்பைத் தொடர்புகொண்டு விசாரித்ததில் தமிழ்வின், லங்காசிறி என்ற இரண்டு தளங்களுக்குமே தாம் அவ்வறிக்கையை சமநேரத்திலே அனுப்பியுள்ளதாக உறுதிப்படுத்தினர். இந்நிலையில் தமிழ்வின் ‘செய்தித் தளம்’ தனது நேர்மையைக் கருத்திற்கொண்டு உடனடியாக அந்த அறிக்கையை தமது செய்தித் தளத்தில் வெளியிட வேண்டுமென விரும்புகிறோம். இப்படியொரு அறிக்கை வெளிவந்துள்ளதென்ற செய்தியை மறைப்பது ‘செய்தித் தளம்’ நடத்துவோரின் நேர்மையின்மையையே காட்டுகின்றது.

தனது பக்கச்சார்பை செய்திகளில் காட்டத் தொடங்கியிருக்கும் தமிழ்வின் தன்னைத் திருத்தி மீண்டுவருமா?

அது தமிழ்வின் தளத்தின் நிர்வாகத்தின் கைகளில்தான் உள்ளது.

http://defeatsms.com/?p=6

மனிதன் , லங்காசிறி , தமிழ்வின் இவை எல்லாம் ஒரே நிர்வாகம் தான் மனிதனில் ஒட்டுக்குழுக்களுக்கு இணைப்பு கொடுத்ததிலிருந்து யாருடைய கூட்டம் என்று இவ்வளவு நாளும் தெரியாமலா இருந்தார்கள்

இவர்களுக்கு விளம்பரம் கொடுக்கும் எம்மக்களும் வியாபார நிறுவனங்களும் சிந்திக்க வேண்டும் முற்று முழுதாக மரண அறிவித்தலிலேயே இவர்கள் உழைக்கின்றார்கள்

Comments