27ம் திகிதி இன்று சனிக்கிழமை பி.பகல் 15.00 மணிக்கு பிரான்சின் தலைநகரான பாரிசில் பல்லின மக்களும், அரசஅரசசார்பற்ற அமைப்புக்களும் ஒன்றிணைந்து காலனித்துவ ஆட்சிக்கெதிராக மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலமும், ஒன்றுகூடலும் இடம்பெற்றிருந்தது.
பிரபல்யமான Place de la Bourse என்னும் இடத்தில் ஒன்றுகூடல் என்று அறிவித்த போதும் இறுதி நேரத்தில் கிடைத்த காவல்துறை அனுமதியின் பிரகாரம் அவ்விடத்தில் ஒன்றுகூடிய பல்லின மக்கள் பின்னர் ஊர்வலமாக பிரான்சின் பிரதான வழியாகவும், பிரான்சின் பிரசித்தம் பெற்ற வெளிநாட்டவர்கள் அதிகளவில் வருகைதரும் கண்காட்சியகம் (Louvre Museum, rue de Richelieu , place André Malraux , pont du Caroussel , Rue des Saint Pères....) பல்கலைக்கழகம் அமைந்துள்ள வீதியின் ஊடாகவும் பிரான்சு பாராளுமன்றம் அமைந்துள்ள இடத்தில் உள்ள வெளிநாட்டவர்களுக்கான அலுவலகம் ஊடாக, தேசிய அடையாளம் எனப்படும் இடத்தில் பிற்பகல் 17.00 மணியளவில் சென்று நிறைவடைந்தது.
இவ் ஊர்வலத்தில் தமிழீழ மக்களும், இந்த ஒன்றுகூடலினை ஏற்பாடு செய்தவர்களின் அழைப்பின் பேரில் தமிழீழ மக்கள் பேரவையினரும் கலந்து கொண்டதோடு ஊர்வலத்தில் தமிழீழ தேசத்தில், சிங்கள பேரினவாதத்தால் நடந்த திட்டமிட்ட இனப்படுகொலையும், எம்மண்ணை ஆக்கிரமித்த மூன்று வெளிநாட்டவர்களின் காலனித்துவ ஆட்சியும், அதன் பின்னர் சிங்கள பெரும்பான்மை ஆட்சியாளர்கள் இன்று வரை தமிழி மக்களை காலனித்து ஆட்சியையே மேற்கொண்டு வருவதையும் உணர்த்தும், பதாதைகளும் எடுத்துச்செல்லப்பட்டதுடன் இதுவரை காலமும் இல்லாதவகையில் பிரெஞ்சுப்பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சியினரும் தமிழர்கள் பக்கம் அதிகம் கவனம் செலுத்தியுடன், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருந்தனர்.
பத்திரிகையாளர்களின் கேள்விக்கு கடந்த 319 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்மக்களாகிய நாம் அடிமைப்பட்டுத்தான் வாழ்கின்றோம். அந்நியர் ஆட்சியிலிருந்து ஆசிய நாடுகள் விடுதலையடைந்தது என்று கூறினாலும், கொண்டாடினாலும் தமிழீழ மக்களாகிய நாங்கள் இன்னும் அதிலிருந்து விடுதலையடையவில்லை என்றும் எனவே சர்வதேசம் எங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட எமது தாயகநிலத்தை எம்மிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்தக்கடமையை செய்ய வேண்டியது எம்மண்ணில் காலநித்துவ ஆட்சியை தொடக்கியவர்களுக்கும் முடித்துவிட்டு போனவர்களுக்கும், அதன் நட்புநாடுகளுக்கும், தமிழர்கள் நாம் அல்லல் பட்டு உயிர்வாழ ஓடிவந்த போது எமக்கு ஆதரவு கரம் தந்த நாடுகளுக்கும் உண்டு என்று தமிழீழ மக்கள் பேரவையினரால் தெரிவிக்கப்பட்டது.
இவ்ஊர்வலத்தில் நூற்றுக்குட்பட்ட தமிழ்மக்களே கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருந்த போதும் ஆயுதப்போராட்டத்தை சர்வதேசம் விரும்பவில்லை என்பதால் அது மௌனிக்கபபட்டது. அதேநேரத்தில் சனநாயக வழியில் போராடி உங்கள் உரிமையை பெறுங்கள் என்று சர்வதேசம் இன்று கண்விழித்து நிற்கும் நேரம் எமது மக்கள் கண்மூடித்தூக்குவது தனது இனத்திற்கும் அதற்காக உயிர்நீத்தவர்களுக்கும் செய்யும் நம்பிக்கை துரோகம் என அங்கலாயித்திருந்தனர்.
இவ் ஒன்றுகூடலுக்கும், ஊர்வலத்திற்கும் வந்திருந்த தமிழ்மக்களுக்கு தமிழீழ மக்கள் பேரவையினர் தமது நன்றியினை தெரிவித்திருந்தனர்.

Comments