கூட்டமைப்பு தலைமைத்துவம் விரைவில் தூக்கி எறியப்படும்!

சுதந்திர போராட்டம் வீழ்த்தப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் சுயரூபம் தெரிகின்றது. இவரைப்பற்றி நீங்கள் விரைவில் நன்கு அறிவீர்கள். உப்பில்லா பண்டம் குப்பையிலே இது பழமொழி. அதுபோன்று கொள்கையில்லா கட்சியும் குப்பையிலே. இவ்வாறாக கொள்கை இல்லாத தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமைத்துவமும் விரைவில் தூக்கி எறியப்படும். இவ்வாறு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் திருக்கோணமலை முதன்மை வேட்பாளர் ச.கௌரிமுகுந்தன் தெரிவித்தார்.

கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும். கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு கோட்பாடுகளை கைவிட்டுவிட்டு உரிமை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். இரா.சம்பந்தனுக்கும் எமக்கும் எவ்வித தனிப்பட்ட விரோதங்கள் கிடையாது. இவ்வாறு தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் திருக்கோணமலை முதன்மை வேட்பாளர் ச.கௌரிமுகுந்தன் தெரிவித்தார்.திருக்கோணமலை வடக்கு மூன்றாவது மைல்கல்லில் ஆனந்தபுரி என்னும் இடத்தில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் வரதராஜா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தலைவரும், வேட்பாளருமான த.காந்தரூபன், திருக்கோணமலை நகர சபை உறுப்பினரும் வேட்பாளருமான திருமதி கண்மணி அம்மா இரத்தினவடிவேல் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

உரையை கேட்க

கௌரிமுகுந்தன் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சுதந்திர போராட்டம் வீழ்த்தப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் சுயரூபம் தெரிகின்றது. இவரைப்பற்றி நீங்கள் விரைவில் நன்கு அறிவீர்கள். உப்பில்லா பண்டம் குப்பையிலே இது பழமொழி. அதுபோன்று கொள்கையில்லா கட்சியும் குப்பையிலே. இவ்வாறாக கொள்கை இல்லாத தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமைத்துவமும் விரைவில் தூக்கி எறியப்படும்.

தமிழ் தேசியத்திற்கு ஆதரவானவர்ளைப் பார்த்து சம்பந்தன் நேரடியாகவே கேட்டுள்ளார், நீங்கள் எல்லாம் விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று, புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் இத்தலைவர்கள் தங்களது சுயரூபத்தை வெளிக்காட்டத் தொடங்கி விட்டார்கள். போராட்டத்தில் மரணித்த வீரர்;களின் தியாகங்களை மறந்து பிரதிநிதித்துவம் கேட்கின்றார்கள். கொள்கையை விட்டுவிட்டு பிரதிநிதித்துவம் எமக்குத் தேவையில்லை. இதனால் நாம் எதனை சாதிக்கப்போகின்றோம்.இதன் காரணமாகவே தமிழ் தேசியக் கொள்கைளை முன்நிறுத்தி நாம் தனித்து தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தோம்.

அரசாங்கத்துடன் இணைந்து நான் செயற்படுவதாகவும். அவர்களிடம் இருந்து பெருந்தொகையான பணத்தை நான் வாங்கியுள்ளேன் என்று இவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். அப்படி நான் அரசாங்கத்திடம் இருந்து பணம் வாங்கியிருந்தால், தமிழ் மக்களை நான் நன்றாக வைத்திருப்பேன். இதனை அவர்கள் நிரூபிக்கட்டும். அப்படி நிரூபிக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் நான் தேர்தல்களில் பங்கெடுப்பதை விடுகின்றேன். அத்துடன் அரசியல் வாழ்வில் இருந்தும் ஒதுங்கிக் கொள்கின்றேன்.

கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும். எனவே எதிர்வரும் பொதுத்தேர்தலில் கொள்கையில் பிடிப்புள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும எங்களுக்கு உங்கள் வாக்குகளை அளித்து தமிழ் தேசியத்தின் கொள்கையினை எடுத்துகாட்டுஙகள் என்று கௌரிமுகுந்தன் தெரிவித்தார்.

பிரதேசசபை உறுப்பினர் காந்தரூபன்

பிரதேச சபையின் தலைவர் த.காந்தரூபன் அங்கு உரையாற்றுகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் திருக்கோணமலை மாவட்டதில் தமக்கென்று ஒரு அலுவலகத்தை வைத்துக் கொள்வதற்கு தவறி விட்டனர். ஆனால் அயல்நாடான இந்தியாவின் தலைநகரில் அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவின் கொள்கைப்படி இவர்கள் செயற்படுகின்றார்கள்.

தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொள்வதைக் காட்டிலும் இந்தியாவின் நலனில் அக்கறை கொள்பவர்களாக செயற்படுகின்றார்கள். எமது மக்கள் அல்லபடும்போது வந்து கவனியாதவர்கள், இப்போது தேர்தல் காலத்தில் முகாமிட்டு மக்கள் முன் வந்து செல்கின்றனர். நாம் அல்லல் படும்போது பாதுகாப்பு இல்லை என்று சொன்னவர்களுக்கு இப்போது மட்டும் எப்படி பாதுகாப்பு கிடைத்துள்ளது.

எமது முதன்மை வேட்பாளர் அரசின் பக்கம் சார்ந்துள்ளார் என்று தெரிவித்து வருகின்றார்கள். ஈழமக்ள் புரட்சிகர விடுதலை முன்னணியிள் தலைவர் சுரேஷ் பிரேமசந்தரன் மீன்பிடி அமைச்சின் ஆலோசகராக அரசுடன் இணைந்து செயற்படுகின்றார். திருக்கோணமலை அபிவிருத்தி பற்றி ஜனாதிபதியின் கூட்டத்தில் கலந்து கொண்ட எமது தலைமை வேட்பாளரை அரசின் பக்கம் சார்ந்து போய்விட்டார் என்று சொல்வது எவ்வளவு பொருத்தமானது ஏன்று அவர் கேள்வி எழுப்பினார்.

பிரதேசசபை உறுப்பினர் கண்மணி அம்மா



மற்றொரு வேட்பாளரான கண்மணி அம்மா உரையாற்றுகையில், நகர சபைத் தலைவராக இருந்து இதுவரை காலமும் எந்தவொரு தலைவரும் செய்திராத அபிவிருத்தி பணிகளை கண்டு பொறுக்காதவர்கள் அவதூறு பேசிவருகின்றனர். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த அகதி முகாம்களில் தங்கியுள்ள எமது உடன்பிறப்புக்களை சந்திக்க முடியாதவர்கள் தமிழ் மக்களுக்காக தேசியம் பேசி வருகின்றார்கள். திருக்கோணமலை பொது வைத்தியசாலைக்கு காயமடைந்தவர்கள் அழைத்து வரப்படும்போது அதனை கண்டு கொள்ளாதவர்கள் இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்கள்.

மக்கள் பிரச்சனைகளை சந்திக்கும்போது இங்கு வராதவர்கள் தேர்தல் காலத்தில் இங்கு வந்து மக்களிடம் தீர்வு பற்ற-pப் பேசுகின்றார்கள். இவர்களை நீங்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும் என கண்மணி அம்மா தனதுரையில் கூறினார்.

Comments