சுயநலமான அரசியல் தலைமைகளை புறக்கணித்து தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் – வைத்திய கலாநிதி திருலோகமூர்த்தி



அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மக்களின் பெரும் ஆதரவை பெற்று வருகின்றது.இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்ட வேட்பாளர் வைத்திய கலாநிதி கந்தசாமி திருலோகமூர்த்தி கொக்குவில் பொற்பதி இந்து விளையாட்டு கழகத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அரசு பலவேறு இடையூறுகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு விளைவித்து வருகின்றது. மக்களை சந்திக்க முடியாத நிலையில் இராணுவம் தடை செய்து வருகின்றது ஆதலால் மக்கள் இந்த தேர்தலில் எம் சூழ்நிலை அறிந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் எம் மக்கள் எதற்காக எவ்வளவு காலமும் போராடிகொண்டிருக்கின்றார்களோ அதிலிருந்து விலகாது அந்நிய சக்திகளுக்கு விலை போகாது மக்களின் பெரும் ஆதரவுடன் உருவாகி இந்த போது தேர்தலை சந்திக்கின்றது.

சுயநலமான அரசியல் தலைமைகளை புறக்கணித்து அனைத்து மக்களும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களித்து பெரும் வெற்றியை தேடித்தர வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை விளக்க மக்கள் சந்திப்புக்கள் தமிழர் தாயகத்தில் பரவலாக இடம் பெற்று கொண்டிருக்கின்றன.அதன் ஒரு பகுதியாக கொக்குவில் பொற்பதி இந்து விளையாட்டு கழகத்தின் ஏற்பாடில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.

இந்த நிகழ்வினை பி.பாலமகிந்தன் தலைமை தாங்கி நடத்தினார். இதன்போது கழகத்தின் செயலாளர் பிரேம்குமார்,விளையாட்டு வீரர்கள் உட்பட பெரும் தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் மக்களுடன் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். பொற்பதி இந்து விளையாட்டு கழகத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்கள் அத்துடன் இத் தேர்தல் உட்பட எதிர் வரும் காலங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயல்படுவார்கள் என தெரிவித்தனர்.பொற்பதி இந்து விளையாட்டு கழகம் யாழ் மாவட்டத்தில் தலை சிறந்த வீரர்களை உருவாக்கி வரும் கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments