பிரித்தானியாவில்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ''தேர்தல் ஆணைக்குழு'' அங்குரார்ப்பணம்


பிரித்தானியாவில் இலண்டன் மாநகரில் 28 -மார்ச்- 2010 அன்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 'தேர்தல் ஆணைக்குழு' அங்குரார்ப்பண நிகழ்வு நடந்தேறியது. லண்டனின் கீத்துரூ விமான நிலையத்திற்கு அண்மையாக அமைந்துள்ள "Olympus Hall" The Concorde Club மண்டபத்தில் நேற்று முன்நாள் காலை 11:00 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் இந்த நிகழ்வு ஆரம்பமானது.

எமது இலட்சியத்தை அதாவது தமிழீழ தாகத்தை, அந்த  இலட்சிய தீபத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச்சென்று தமிழீழ விடுதலையை  வென்றெடுக்க வேண்டிய தேவையும், பொறுப்பும் புலம் பெயர்ந்து வாழும்  தமிழ்மக்கள் முன் உள்ளது.

எமது இலட்சியத்தை அதாவது தமிழீழ தாகத்தை, அந்த  இலட்சிய தீபத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச்சென்று தமிழீழ விடுதலையை  வென்றெடுக்க வேண்டிய தேவையும், பொறுப்பும் புலம் பெயர்ந்து வாழும்  தமிழ்மக்கள் முன் உள்ளது.


மங்கள விளக்கை கப்டன் வாசுவின் சகோதரன் திரு. சேகர் (மாவீரர் குடும்பம்) அவர்களும், திரு. விஜயசிங்கம் (நாடுகடந்த தமிழீழ அரசிற்கான பிரித்தானிய தேர்தல் சபை), திரு. ஸ்கந்ததேவா (பிரித்தானிய தமிழர் பேரவை), திரு. முருகானந்தன் (பிரித்தானிய தமிழர் செயற்பாட்டு அமைப்பு), திருமதி. சசிகலா சுரேஸ் (தமிழ் நகரசபை உறுப்பினர் குழு-பிரித்தானியா), திரு. சுரேன் (நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தல்குழு - பிரித்தானியா), ஆகியோர் ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் போராடி வீரமரணமடைந்த மாவீரகளுக்காகவும், போரினாலும், இரண்டகர்களினாலும் கொலப்பட்ட பொதுமக்களுக்காகவும் இரண்டு நிமிட அகவாக்கம் இடம்பெற்றது.

அகவணக்கத்தினை தொடர்ந்து நிகழ்வை ஆரம்பித்து வைத்து உறையாற்றிய கலாநிதி திரு. வசந்தகுமார் அவர்கள் கூறுகையில்,

தமிழர்களின் சரித்திரம் பல ஆயிரம் வருடங்களானது ஆகும். ஒரு உலகின் பழமையும் ஆழமான சரித்திரமும் கொண்ட இந்த இனம் இன்று இன அழிவையும், அடக்குமுறைகளையும், வேதனையையும் எதிர்நோக்கியுள்ளது. இலங்கை அரசானது இலங்கையின் இறைமையும், சுதந்திரமும் சிங்களத்திற்கே உரியது என்றும் இதை பங்குபோட முடியாது என்றும் சொல்லிக்கொண்டும் இருக்கும் இவ்வேளையில், உலக நாடுகள் தமக்கிடையே இருக்கும் முரண்பாடுகளை தங்களின் சொந்த நலங்களை கருதி சிங்களத்தோடு சமரசம் செய்து வருகிறது. இலங்கையில் தமிழ் அரசியல் தளம் சிங்களத்தின் பிளவுபடுத்தும் சூழ்ச்சியில் அகப்பட்டு அழிவை நோக்கிப் போகின்றது. இந்த நிலையில் எமது இலட்சியத்தை அதாவது தமிழீழ தாகத்தை, அந்த இலட்சிய தீபத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச்சென்று தமிழீழ விடுதலையை வென்றெடுக்க வேண்டிய தேவையும், பொறுப்பும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் முன் உள்ளது.

இதன் அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசின் அடித்தளம் அமைக்கப்பெற்றுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடையே உள்ள அரசியல் மற்றும் இராஜதந்திர மதிநுட்பத்தினூடும், பொருளாதார பலத்தினூடும் இந்த நாடு கடந்த அரசை நிறுவி எமது மக்களுக்காகவும், எமது மண்ணின் விடுதலைக்காகவும் போராட வேண்டிய ஓரு கட்டாயத்தில் இருக்கிறோம். அதன் அடிப்படையில் இந்த நாடு கடந்த தமிழீழ அரசை சர்வதேச விதிமுறைகளுக்கேற்ப ஜனநாயக வழியில் தேர்தல் ஒன்றினை நடாத்தி அதனூடாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களைக் கொண்ட உலகளாவிய அரசாகவும், தமிழர்களின் அதி உயர் அரசியல் பிரதிநிதிகளாகவும், தனது செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளது.

எதிர்வரும் மே 2 ஆம் திகதி உலகின் பல நாடுகளிலும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பிரித்தானியாவின் நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தல் ஆணையாளர் சபை இன்று (28-03-2010) தமது பொறுப்பினை அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கின்றது. இந்த சபையானது சர்வதேச தேர்தல் ஆணையாளர் தரத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது எனக் கூறினார்.

அதனைத்தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானியாவுக்கான ஊடகத்துறைப் பொறுப்பாளர் திருமதி. அபர்ணா சஞ்ஜீவன் அவர்கள் தேர்தலுக்கான நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானியாவுக்கான நிரந்தர ஒன்பது தேர்தல் ஆணையாளர்களை (தமிழர்களும், தமிழர்களும் அல்லாதோரும்) அறிமுகம் செய்து வைத்தார்.

தேர்தல் ஆணையாளர்கள் விபரம்:

திரு.விஜயசிங்கம்

  • - முன்னாள் ஆலோசகர் - ஐரோப்பிய ஒன்றியம் - புதுடெல்லி, இலங்கை தொளிலாளர் காங்கிரஸ், உள்நாட்டு இறைவரித் திணைக்களம்-கொழும்பு (Mr. N. Vijayasingam - A former adviser to the European Union, New Delhi , A former adviser to Ceylon Workers Congress, Sri lanka. A former governing councillor, University of Jaffna)

திரு.குளோட் மொறேஸ்

  • ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் - லண்டன் 2009, பிரித்தானிய தொழில்கட்சியின் உப தலைவர், சோசலிச ஜனநாயக கட்சியின் மனிதநேயம், நீதித்துறை, மற்றும் உள்துறை பேச்சாளர் (Mr. Claude Moraes - Member of European parliament, was re-elected to the European Parliament for London in 2009, where he also led the London Labour list. He is Deputy Leader of the European Parliamentary Labour Party, and is Socialist and Democrats Group Spokesperson for Civil Liberties, Justice and Home Affairs)

திரு. இவான் பேதுருப்பிள்ளை

  • செல் எரிபொருள் உற்பத்தி நிறுவனத்தின் முன்னாள் நிதித்துறை உயர் அதிகாரி (Mr. Ivan Pethurupillai - Retired Senior Executive with Royal Dutch Shell Oil Group in London. Retired Chairman, Tamil Writers guild)

திரு.கெய்த் சொனெட்

  • பிரித்தானியாவின் மிகப்பெரும் சங்கமான யுனிசன் சங்கத்தின் உப தலைவர் (Mr. Keith Sonnett - Deputy General Secretary unison, extensive experience in election arrangements and verification of process both home and abroad)

திரு. சிறீஸ்கந்தராசா

  • சட்டத்தரணி - பிரித்தானியா (Mr. S. Sriskandarajah, Solicitor and Human Activist)

ஆன் ஹொக்

  • பிரபல நிறுவனமான பொப்புலறீஸ் நிறுவனத்தின் முகாமையாளர் (Ms. Anne Hock, MD for Popularis, A specialist company in the management of ballots and elections)

திரு.பாலசுந்தரம்

  • (ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் - இலங்கை (Mr. Balasuntharam, Retired AGA, Srilanka)

திரு.மைக் கிறிவ்த்ஸ்

  • தொழில்கட்சியின் முன்னாள் தலைவர், தொழில்கட்சியின் தலைமை தேர்ந்தெடுக்கும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் (Mr. Mike Griffiths - Former CHair Labour Party and National political officer Amicus/Unite. He was chair and oversaw the leadership election for Leader and Deputy Leader of the Labour party)

திரு.சின்னையா பதி

  • (Mr. Chinniah Pathy - Engineer presiding officer for Bexley Council at a number of local and parliamentary elections)

அங்கு நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் ஆணையாளரில் ஒருவரான திரு.விஜயசிங்கம் அவர்கள் உரையாற்றுகையில்

  • ஏன் நாடு கடந்த தமிழீழ அரசு?

  • இதனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு பார்க்கிறது?

என்று ஆரம்பித்த அவர் "நாடு கடந்த தமிழீழ அரசானது" சிங்களத்துக்கோ, அன்றி பெளத்தத்திற்கோ எதிரானது அல்ல. இது தமிழர்களின் இருப்பையும், தேசிய நலனையும், சுதந்திரமான வாழ்வையும் உறுதிப்படுத்த புலம் பெயர் தமிழர்களால் உருவாக்கப்படும் தமிழர் அரசு. இலங்கைத் தீவில் சிங்கள பேரினவாதிகளிடம் மண்டியிட்டு சலுகைக்களுக்காக கையேந்தும் நிலையில் இராமல் சம உரிமையுள்ள பிரஜைகளாகவும், தேசிய இனமாக, கெளரவத்தோடும் வாழ வழிசமைத்துக்கொடுக்கும் ஓர் தமிழர் அரசாக அமைய இருக்கிறது.

எனவே இந்த உள்ளார்ந்த கருத்தை அனைவரும் புரிந்து கொள்வதோடு மட்டுமன்றி, நாடுகடந்த தமிழீழ அரசின் உருவாக்கத்தின் முக்கியத்துவத்தை சர்வதேச ரீதியில் அரசியல் கருத்தோட்டத்தினூடாக முன்னகர்த்தி செல்லவேண்டும். இந்த வரலாற்றுக் கடமையை ஊடகங்களும் தங்கள் ஆளுமையினை கொண்டு மக்கள் மத்தியிலும், சர்வதேச மட்டத்திலும் கருத்துக்களை கொண்டு செல்லவேண்டும். எனக் கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய,

திரு.மைக் கிறிவ்த்ஸ் கூறுகையில் தான் இந்த தேர்தல் ஆணையாளர் சபையில் ஒரு ஆணையாளராக பொறுப்பேற்பதில் பெருமையடைவதாகவும், அத்தோடு இந்த தேர்தல் சர்வதேச தரத்தில் நடாத்தப்படும் என்பதையும் உறுதிப்படுத்துவதாகவும் கூறினார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்...

இந்த நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் உலகில் பல நாடுகளிலும் ஒரே நாளில் நடாத்தப்படுவதன் மூலம், தமிழர்களின் ஒருங்கமைக்கும் தன்மையையும், தமிழர்கள் இலக்கில் கொண்டிருக்கும் பற்றுறுதியையும், வெளிப்படுத்தும் என்பதோடு இதை சரியாக கையாள்வதன் மூலம் வெற்றிபெறும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை உண்டு. உங்கள் இறுதி இலட்சியமான தமிழீழம் அமையும் வரை உங்களுக்கான எனது ஒத்துழைப்பும், ஆதரவும் இருக்கும். அதே நேரம் தமிழர்களாகிய நீங்களும் இராஜதந்திர, மற்றும் பொருளாதார வளர்ச்சியினூடாக உங்கள் இறுதி இலக்கான தமிழீழத்தை அடைய வாழ்த்தி விடைபெறுகிறேன். என நிறைவுசெய்தார்.

அதனைத்தொடர்ந்து பிரித்தானிய தமிழர்களின் பிரதிநிதிகளாக இயங்கும் பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் நிகழ்வில் கலந்துகொண்ட திரு.ஸ்கந்ததேவா அவர்கள் உரையாற்றுகையில்...

இன்று நாம் திரும்ப திரும்ப கூறும் சொல் ஒற்றுமை... ஒற்றுமை... ஒற்றுமை. ஆனால் ஒற்றுமை எங்கு தேவைப்படுகிறதோ அங்கு அதை காட்டாமல் இருப்பது உண்மையிலேயே கவலையளிக்கிறது என ஆரம்பித்த அவர் மிகவும் முக்கியமான இந்த நாளில் தமிழீழத்திற்காக அனைத்து முக்கிய நபர்களும் வந்திருக்க வேண்டும். இனியாவது வரும் நாட்களில் அனைவரும் ஒன்றுபட்டு தமிழீழத்திற்கான செயற்பாடுகளில் முன்னின்று ஒற்றுமையோடு செயலாற்ற வேண்டும். எமக்குள் நாமே பிளவடைந்து கொண்டு செல்வது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழர் நலன்களுக்கும், சரியான ஒன்றல்ல. அது மேலும் தமிழர்தரப்பை பலவீனப்படுத்தவே உதவும். எனவே அனைவரும் இந்த நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தலுக்கான அனைத்து விடையங்களிலும் ஒருங்கிணைந்து செயற்படுவார்கள் என நம்புகிறேன். என மனம் திறந்து உரையாற்றியிருந்தார்.

இந்த நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தல் நடைமுறையும், அதற்கான விதிமுறைகளும் தெளிவான முறையில் அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டு விளக்கமும் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் இருந்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விரிவான விளக்கங்களும் அளிக்கப்பட்டது.

காலை 11:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வு மாலை 3:00 மணிவரை நடைபெற்றது. இந்த தேர்தல் ஆணையாளர் அறிமுக நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments