கூட்டமைப்பை உடைக்க வேண்டும் என்ற முடிவு புலத்தில்தான் எடுக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் தான் கஜேந்திரகுமாருக்குத் தலைப்பா கட்டி களத்தில் இறக்கியுள்ளார்கள். : நக்கீரன்கனடாவில் இருந்து கனடிய தமிழ்ப் படைப்பாளிகள்[ குழுமம் ]கழகத்தின் தலைவர் திரு நக்கீரன் அவர்கள் வழங்கிய நேர்காணலில் உள்ள சில விடயங்கள் தொடர்பாக வீரகேசரி வாரஏட்டின் பத்தி எழுத்தாளரும், அரசியல் ஆய்வாளருமான திரு இதயச்சந்திரன் அவர்கள் எழுதியுள்ள பதிலை இங்கு தருகிறோம்.
நக்கீரன் அண்ணன் வணக்கம்.
1. எமது தீர்விற்கான திறவுகோல் டில்லியிடம் உள்ளதென கூறுகிறீர்கள். நல்லது. எமதுவிடுதலைக்கான வாசலை பூட்டி வைத்துள்ளது இந்தியா ,என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? தமிழ்நாடு- இந்தியா- உலகம் என்கிற பாதை 80 களோடு மாறிவிட்டது. புதிய உலக ஒழுங்கில், இந்துசமுத்திர பிராந்திய ஆதிக்கப்போட்டியில், சீனா-பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வகிபாகத்தை புறக்கணிக்க முடியாது. இலங்கையில் தற்போது நடைபெறும் முதலீட்டுப்போட்டிகளே , இதனை உணர்த்தும். இந்தியாவை மீறி, இலங்கையில் ஓர் அணுவும் அசையாது என்கிற குறுகியவாதங்கள், சரியான பார்வையை வெளிப்படுத்தாது.
”நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும், இந்துசமுத்திர பிராந்திய வல்லரசு இந்தியாதான்” என்கிற உங்கள் வாதம், சீனாவின் ஆசியபிராந்திய வல்லரசு ஸ்தானத்தை மலினப்படுத்துகிறது. சிங்கள தேசமானது, சீனாவையும், இந்தியாவையும் எவ்வாறு தந்திரோபாயமாக கையாள்கிறது என்பதையும், தனியே இந்தியாதான் ஆசிய வல்லரசு, என்று கருதாமல் , சிங்களம் தமது நகர்வுகளை மேற்கொள்கிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
2 . தமிழ் மக்களின் பேரம்பேசும் ஆற்றலின் அடிப்படையான கோட்பாடு , சமஷ்டியில் இருந்து செயற்படுமா? இங்குதான் சமஷ்டி குறித்த சிக்கல் எழுகிறது.
2 .1 இறைமையுள்ள சமஸ்டியா? அல்லது சிங்கள தேசத்தின் இறைமை, எமக்கு வழங்கும் அதிகார பகிர்வில், நாம் உருவாக்கும் சமஷ்டி கட்டமைப்பா? அதாவது, சிங்களம் ஆணித்தரமாக கூறும் ,முழு இலங்கைக்குமான சிங்கள இறைமையை நாம் ஏற்றுக் கொண்டால், தமிழ் தேசிய இனத்தின் இறைமை- அதன் தனித்துவத்தை, நாமே கைவிட்டது போலாகிவிடும்.
2 .2 கஜேந்திரகுமார் கூறும் ஒரு நாடு- இரு தேசங்கள் என்பது, தனித்துவமான இறைமை கொண்ட இரு தேசங்களின் [NATION ] கூட்டு ஆட்சியின் [confederation ] அடிப்படையில், தீர்வொன்றை வலியுறுத்துகிறது.
2 .3 Federation இற்கும் Confederation இற்குமிடையே உள்ள பாரிய வேறுபாட்டினை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
political solution3 . நீங்கள் நம்பும் இந்தியா, இணைந்த வட-கிழக்கு மாகாணத்தில், சமஷ்டி [ சிங்கள இறைமையின் கீழ்] கட்டமைப்பில் தீர்வொன்றை ஏற்கும்படி சிங்களத்திடம் வலியுறுத்தும் அல்லது அச்சுறுத்தும் என்று எதிர்பார்க்கிறீர்களா? எனது பார்வையில், தமிழ் மக்களின் உரிமைக்காக ,சிங்களத்துடன் இந்தியா பகைத்துக்கொள்ளாது என்பதுதான் உண்மை.
4 . 6 வது திருத்த சட்டத்தின் கீழ், தனித்துவமான இறைமையை பேணும் கூட்டாட்சி முறைமையை மட்டுமே, தற்போதைய நிலைமையில், இலங்கையில் முன் வைக்க முடியும். அதைதான் கஜேந்திரகுமார் முன் மொழிகிறார்.
5 . புவிசார் அரசியல் [geopolitics ] மிக வேகமாக மாறிவருகிறது. ஆசியாவில் இலங்கை என்கிற உணர்திறன்மிக்க மையம் , உலக வல்லாதிக்க சக்திகளின் ஆடு களமாக உருமாறுகிறது.
இவர்களுக்கிடையே நிகழும் ஆதிக்கப் போட்டியினையும், முரண் நிலை நகர்வுகளையும் , எமக்கு சாதகமாக கையாளும் நிலை ஏற்படும்வரை , அடிப்படை கோட்பாடுகளில் இருந்து விலகாமல், அதேவேளை, சிங்களத்தை இந்த சர்வதேச சமூகத்திலிருந்து தனிமைப் படுத்தும் வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுப்பதே சரியானதாகும்.
6 . இறுதியாக ஒரு விடயம் , தாயக கோட்பாட்டை கைவிட்டு, மகிந்தர் நடத்தவிருக்கும் ”வட மாகாண சபை தேர்தல் ” இல் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கு கொள்ளுமா என்பதை தெரியப்படுத்துங்கள்.தாயகம்-தேசியம்-தன்னாட்சி என்று சம்பந்தர் கூறுவது பொய் என கஜேந்திரகுமார் அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு, நீங்கள் கூறும் பதில் பல விளக்கங்களை அளிக்குமென நம்புகிறேன்.
மாகாண சபைக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை முடக்குவதுதான் இந்தியா வகுத்திருக்கும் தந்திரோபாயம். தமிழ் மக்களின் பேரம்பேசும் வலு, வட மாகாணசபைக்குள் புதைக்கப்பட்டு விடும்.
எமது விடுதலைக்கான வாசலை இந்தியா பூட்டி வைத்துள்ளது என்பதே உண்மையானது
– இதயச்சந்திரன்-
மேலும் சில கேட்கப்படாத கேள்விகள்
கூட்டமைப்பை உடைக்க வேண்டும் என்ற முடிவு புலத்தில்தான் எடுக்கப்பட்டது. புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் தான் கஜேந்திரகுமாருக்குத் தலைப்பா கட்டி களத்தில் இறக்கியுள்ளார்கள். : நக்கீரன்
அப்படியானால் நீங்கள் புலம் பெயர்ந்தவர் இல்லையா ? அல்லது புலன் பெயந்தவரா ?
நீங்கள் குற்றம் கூறும் சமூகம் எங்கிருக்கின்றது ?
நீங்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர் ?
பிச்சை கேட்பதற்கு மட்டுமா புலம்பெயந்தவர்கள் வேண்டும் உங்களுக்கு ?
நீங்களும் உங்கள் குழுமமும் தான் இப்போது தேசியத் தலைவர்களா ?
புலம்பெயர் தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகள் என்ற உரிமத்தை படைப்பாளிக் குழுமத்திற்கு யார் வழங்கியது ?
தேர்தலைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டைக் கைவிடுமாறு கஜேந்திரகுமாரோடு மணித்தியாலக் கணக்கில் பேசியும் அவர் தனது முடிவை மாற்ற மறுத்துவிட்டார்.அப்போதும் உங்கள் முடிவைத் திணிக்க முற்பட்டிருக்கின்றீர்கள் இப்போதும் அதையே செய்கின்றீர்கள்
சரி நக்கீரரே அப்போது உங்கள் குழுமம் எடுத்த முடிவால் எதைச் தமிழ்ச்சமூகம் பெற்றிருக்கின்றது ? சாதித்திருக்கின்றது ?
அப்போது நீங்கள் எடுத்த முடிவு தவறானது தானே சிங்களவர்களை உசுப்பேத்தி மகிந்தா வென்றார் என்று சொல்லுகின்றார்களே இதுவும் இந்தியாவின் தந்திரம் என்றும் சொல்கின்றார்களே ?
செல்வராசா கஜேந்திரன் கூட்டமைப்பு எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வண்ணம் தேர்தல் முடிந்த பின்னர்
யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களில் 75 விழுக்காட்டினர் தேர்தலைப் புறக்கணித்ததாக ஒரு பாமரத்தன்மையான அறிக்கையை விட்டார்
கயேந்திரனுடைய பார்வை சரியாகத்தானே இருக்கின்றது நக்கிரரே ??
75 % மானவர்கள் வாக்களிவில்லைத் தானே அவர்கள் புறக்கணித்தார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம் தானே ?
இதில் பாமரத்தன்மை என்பது அவரவர் பார்வையில் தங்கியுள்ளது நக்கிரரே
அப்படியானால் 2005 புலிகள் சிங்களத்தின் ஜனாதிபதியைச் சிங்களவர்களே தெரிவு செய்யட்டும் என்று மறைமுக புறக்கணிப்பை பாமரத்தன்மை என்று அன்று அறிக்கை விடவில்லையே அது ஏன் ?
பொதுவாக மக்களாட்சி முறைமை நடைமுறையில் உள்ள நாடுகளில் தேர்தல் புறக்கணிப்பு எந்த நன்மையையும் பெற்றுத்தராது. இதற்கு எமது வரலாற்றில் நிறைய சான்றுகள் இருக்கின்றன.
இது குறித்து நீங்கள் இதுவரை வாய் திறக்காது ஏன் ? ஒரு தமிழ் ஊடகங்களிலும் அப்படி ஒன்றும் வரவுமில்லையே ? சரி நீங்களாது கண்டித்து ஒரு அறிக்கை விடவில்லையே ?
நாடு திரும்பி கையோடு பத்மினி அலரிமாளிகையில் மகிந்த இராசபக்சேயோடு அருகிருந்து விருந்துண்டு மகிழ்ந்தார்.
கயேந்திரன் கட்சியின் கொள்கையும் ஒன்று என்றால் கயேந்திரனை துரோகியாக காட்ட முற்படுவது ஏன் ?
நான் ஆட்களைப் பார்க்கவில்லை. ஆட்டத்தைத்தான் பார்க்கிறேன். சம்பந்தர் இடத்தில் கஜேந்திரகுமார் இருந்திருந்தாலும் எனது நிலைப்பாடு இப்போதுள்ளது போலவே இருந்திருக்கும்
இரு கட்சிகளது கொள்கையில் வேறுபாடு இருப்பதாக எனக்குப் படவில்லை
நிலத்தில் உள்ள தமிழர்களும் புலத்தில் உள்ள தமிழர்களும் சமாந்தரமான பாதையில் பயணிக்க வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் கருத்துக்களை வலியுறுத்த உரிமையுடையவர்கள்.இப்படிச் சொன்ன நக்கீரரே உங்கள் கருத்தை ஏன் கயேந்திரன் மீது திணிக்க முயலுவது மட்டுமல்லாமல் அவர்களை துரோகிகளாகவும் காட்ட முற்படுகின்றீர்கள்
ஆனால் அவர்கள் தங்கள் கருத்துக்களை நிலத்தில் உள்ளவர்கள் மீது திணிக்க முடியாது. வற்புறுத்தவும் முடியாது.
அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை. தேர்தல் அறிக்கையை மட்டும் அது வெளிவரும் முன்னர் கேட்டுப் பெற்றுக் கொண்டேன்.பேச்சுப் பல்லக்கு தம்பி கால் நடை என்பது போலிருக்கின்றது
இளைஞாகள் தான் நாளைய தலைவர்கள் ஆக வரவேண்டும் என்பதே எனது விருப்பம். கூட்டணியின் விருப்பமும் அதுவாகவே இருந்ததை நான் அறிவேன்.
இதற்காகவா இந்த பாடுபடுகின்றது கூட்டமைப்பு அதற்கு ஏன் தேர்தல் வரை காத்திருப்பான் ?
மகிந்த இராசபக்சே வட – கிழக்கில் வெற்றி பெற்று வரும் கட்சியோடு பேசப் போவதாக அறிவித்துள்ளார்
இப்போதும் அலரிமாளிகையில் விருந்து படைப்பார்களே ?
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி அடித்து உடைக்கப்பட்டதை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பொ.ஐங்கரநேசனும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியை சேர்ந்த கஜேந்திரனும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழர்கள் நிலைப்பாட்டை சிங்கள மக்கள் உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள்” எனச் சம்பந்தன் பேசியிருக்கிறார்.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சொல்லப்படும் இரா. சம்பந்தன் அவர்கள் இதுவரை இதுபற்றி எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை.
தமிழீழ தேசிய தலைவரின் தந்தை சாவடைந்தபோதும் ஏனைய தலைவர்கள் அஞ்சலி அறிக்கை வெளியிட்டபோதும் சம்பந்தன் அவர்கள் அதுபற்றி அறிக்கை எதனையும் வெளியிடாததுடன்
தலைவரின் தந்தையாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு அன்று திட்டமிட்டபடி தனது கட்சி கூட்டத்தை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments