கனடாவில் மே 2 இல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்!

imagesதேர்தல் ஆணையம் அறிவிப்பு – வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பம்!!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் மே மாதம் 2 ஆம் திகதி உலகளாவியரீதியில் நடாத்தப்படுகிறது.
இதற்கமைய கனடாவில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டிய 25 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மே மாதம் 2 ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இத் தேர்தல்களுக்காக கனடா 5 தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மத்திய ரொரொன்டோ பெரும் பகுதி ( Central Greater Toronto Area ), கிழக்கு ஒன்ராரியோ ( Eastern Ontario ), மேற்கு ஒன்ராரியோ ( Western Ontario ), கிழக்கு கனடா, ( Eastern Canada ), மேற்கு கனடா ( Western Canada ) ஆகிய இத் தேர்தல் மாவட்டங்களில் இருந்து தலா 5 பிரதிநிதிகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்குத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இத் தேர்தல்களைப் பொறுப்பேற்று நடாத்த சுயாதீனமான தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முதன்மைத் தேர்தல் ஆணையரையும் இரு துணைத் தேர்தல் ஆணையர்களையும் 5 தேர்தல் மாவட்டங்களுக்குமான மாவட்டத் தேர்தல் ஆணையர்களையும் கொண்ட வகையில் 10 தேர்தல் ஆணையர்கள் இவ் ஆணையத்தில் பணிபுரிகின்றனர்.

கனடா தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் விபரம் பின்வருமாறு:

முதன்மைத் தேர்தல் ஆணையர்:

Dr. Ashleigh Molloy. PhD
Director, Transformation Education Institute

துணைத் தேர்தல் ஆணையர்கள்:

Spiros Papathanasakis
Ex. Councilor - GTA

Dr. S. சிவநாயகமூர்த்தி
(முன்னாள் யாழ் மாவட்ட கல்விப்பணிப்பாளர்)

மாவட்டத் தேர்தல் ஆணையர்கள்:

தேர்தல் மாவட்டம் 1 - மத்திய ரொரன்டோ பெரும்பகுதி

வர்ணகுமாரன் கணபதிப்பிள்ளை B.Sc. (Eng.)
தலைவர் - CTA
தேர்தல் மாவட்டம் 2 - கிழக்கு ஒன்ராரியோ

விநாயகர் கந்தவனம்
தலைவர் - ஒன்ராரியோ இந்து மகாசபை
தேர்தல் மாவட்டம் 3 - மேற்கு ஒன்ராரியோ

பொன் குலேந்திரன்
முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்

தேர்தல் மாவட்டம் 4 - கிழக்கு கனடா
தேர்தல் ஆணையர்:
Shams U.L. Haque
Member Quebec Action Committee

துணைத் தேர்தல் ஆணையர்:
பேராசிரியர் சரவணமுத்து அனுக்ஷாதேவி

தேர்தல் மாவட்டம் 5 - மேற்கு கனடா
தேர்தல் ஆணையர்கள்:
மயில்வாகனம் சுப்ரமணியம்
சிவராஜன் சிவகுருநாதன்

இத் தேர்தல் ஆணையத்தினால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்களில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நாளை (04.04.2010) முதல் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இம்மாதம் 15 ஆம் திகதி வரை வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.

இத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தகமைகள், வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் தொடர்பான விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான தொடர்பு விபரங்கள்:

Commissioner
2163 Lawrence Ave East
Suite C
Toronto
M1P 2P5

Tel: 416-844-7390
கனடா இணையத்தள முகவரி: http://www.cptgte.org

Comments