நாடு கடந்த தமிழீழ அரசிற்காக பிரித்தானியாவில் மே 2 இல் தேர்தல்!!

நாடு கடந்த தமிழீழ அரசிற்காக பிரித்தானியாவில் 20 பிரதிநிதிகள் தெரிவு! ஏப்ரல் 5 முதல் வேட்புமனு - மே 2 இல் தேர்தல்!! : வி.ருத்ரகுமாரன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்கு பிரித்தானியாவில் இருந்து தெரிவுசெய்யப்பட வேண்டியுள்ள 20 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மே மாதம் 2 ஆம்திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

நாளை 5ம் திகதி முதல் வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ளது.
இத் தேர்தல்தலுக்காக பிரித்தானியா 5 தேர்தல் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:

1.வட கிழக்கு இலண்டன் (North East London) – 5 பிரதிநிதிகள்
2.வட மேற்கு இலண்டன் (North West London) – 5 பிரதிநிதிகள்
3.தென் மேற்கு இலண்டன் (South West London) – 5 பிரதிநிதிகள்
4.தென் கிழக்கு இலண்டன்(South East London) – 2 பிரதிநிதிகள்
5. ஏனைய பகுதிகள் (Out site London) – 3 பிரதிநிதிகள்

இத் தேர்தலைப் பொறுப்பேற்று நடாத்துவதற்காக 10 உறுப்பினர்களைக் கொண்ட சுயாதீனமானதேர்தல் ஆணையகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28 ஆம் திகதி இலண்டனில் நடைபெற்றஅங்குரார்ப்பண நிகழ்வில் தேர்தல் ஆணையக உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு:

Mr. Nadarajah. Vijayasingam - Election CommissionerFormer Adviser to the European Union New Delhi, Former adviser to Ceylon Workers Congress, SriLanka and former governing councilor University of Jaffna.
Mr. Claude Moraes - Member of European parliament, Deputy Leader of the European ParliamentaryLabour Party, Socialist and Democrats Group Spokesperson for Civil Liberties, Justice and HomeAffairs.
Mr. Ivan Pethurupillai - Retired Senior Executive with Royal Dutch Shell Oil Group in London.
Mr. Keith Sonnett - Deputy General Secretary Unison. Extensive experience in election arrangementsand verification of process both home and abroad.
Mr. Sellathamby. Sriskandarajah - Solicitor and Human Rights Activist.
Ms. Anne Hock - Managing Director for Popularis, A specialist company in the management ofBallots and Elections.
Mr.Sinnaiah Balasundaram - Retired AGA, Sri Lanka
Mr. Mike Griffiths - Former Chair of Labour Party and Member of National Executive Committee
Mr. Chinniah Thanigasapapathy - Presiding officer for Bexley Council at a number of local andparliamentary elections.
Mr.Paul Kenney-General Secretary -GMB

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை நாளை (05.04.2010) காலை 9 மணி முதல்நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலை பொறுப்பேற்று நடாத்தும் பிரித்தானியத் தேர்தல் ஆணையகத்திடம் தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்கள் எதிர்வரும் 14.04.2010 அன்றுமாலை 6 மணி வரை தேர்தல் ஆணையகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படும்.
இத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தகைமைகள், வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான

தொடர்பு விபரங்கள்:

“Election Commission”Transnational Government of Tamil EelamSuite 28, Westgate House, Westgate Road, Ealing, London, W5 1 YYTel: +44 208991 3345Website address :

www.tgte.uk.nete-mail: ECUK@govtamileelam.org


விசுவநாதன் ருத்ரகுமாரன்

இணைப்பாளர்தொடர்புகளுக்கு: info@govtamileelam.org

Comments