பதினோராயிரம் இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்கம் மறுவாழ்வு அளித்து வருவதாகவும், இவர்கள் பற்றிய தகவல்கள் குறித்த அமைச்சின் இணைய தளத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளதாகவும் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் கரிட்டாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மதகுருமார், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இதன்போதே இந்த அதிர்ச்சியான தகவலை பசில் ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார். எனினும் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட மே மாதம் அளவில் இலங்கை அரசாங்க ஊடகங்கள் அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் பாதுகாப்பிற்கான ஊடக மையம் என்பன விடுத்த பல செய்திக் குறிப்புக்களில்
ஆரம்பத்தில் 17500 வரையான விடுதலைப் புலிகள் அரசாங்க படைகளால் கைது செய்யப்பட்டனர் அல்லது சரணடைந்தனர் எனக் குறிப்பிடப்பட்டது.
பின்னர் 15000 வரையான புலிகள் தம்மிடம் இருப்பதாக கூறப்பட்டது. தொடர்ச்சியாக வந்த செய்திகளில் இந்தத் தொகைகள் 13500, 12500, 11500 என குறைக்கப்பட்டு தற்போது 11 ஆயிரம் என்ற கணக்கு பசில் ராஜபக்ஸவால் வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வாறாயின் விடுதலைப் புலிகளின் உயர்மட்ட மற்றும் நீண்டகால அல்லது தீவிர செயற்பாட்டுப் போராளிகள் என 2 ஆயிரம் வரையானவர்கள் தனியான முகாமிலும் 4 ஆயிரம் வரையிலான போராளிகள் தனியான முகாமிலும் இரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாக பலராலும் அறியப்பட்டு இருந்தது.
இவ்வாறு இரகசியமான முறையில் விசேட முகாம்கயில் தடுத்து வைக்கப்பட்ட 6 ஆயிரம் விடுதலைப் புலிகளுக்கு என்ன நடந்தது என்ற ஐயம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் அரசாங்க படைகளால் கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது தொடர்ந்தும் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Comments