நாடுகடந்த தமிழீழ அரசு தேர்தல் வேட்பாளர் 92 - Departement Hauts de Seine


நாடுகடந்த தமிழீழ அரசு தேர்தல் வேட்பாளர்

92 - Departement Hauts de Seine

திருச்சோதி திருக்குலசிங்கம்

முள்ளிவாய்காலில் எல்லாவற்றையும் முடித்துவிட்டோம் என்று சிங்கள அரசு ஒரு புறமும், உலகநாடுகள் மறுபக்கமும் கூறிக்கொண்டீருந்த நேரத்தில் புலம்பெயர் நாடுகளில் எம்மக்கள் மனத்தளர்வுடன் தாம் செய்த போராட்டங்கள் மூலம் எம் தாய் மண்ணை காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலைகளுடன் இருந்த போது அங்கே முகாம்களிலும், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் வாடும் எம்மக்களுக்கு குரலாகவும் அங்கே அழிக்கப்பட்ட அரசை மீண்டும் கட்டியயெழுப்பவும் புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் தமிழீழ தேசியக்கட்டமைப்புகளை உருவாக்கி அதன் முலமாக நாம் வாழும் நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் எமது அரசியல் வேலைத்திட்டங்களை செயல்படுத்தும் முகமாக மே 26ம் திகதி முதல் தமிழீழ மக்கள் பேரவை (La Maison du Tamil Eelam) என்ற அமைப்பை உருவாக்கும் செயற்பாட்டை துவக்கி, இங்கு பிரான்சில் பாரளமன்றம் முன்பாக எமது போராட்டத்தை தொடர்ந்தோம்.



























அதே நேரத்தில் பாராளமன்றத்திலும், ஐரோப்பிய பாரளமன்றத்திலும் எமது தேசத்தில் ஒரு மாபெரும் இனப்படுகொலையை செய்த சிறீலங்கா அரசுக்கெதிராக போர்க்குற்றங்கள் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களை செய்தமைக்காக சட்ட நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல்வாதிகள் கட்சிகளுடாக வலியுறுத்துகின்றேம்.

போர் குற்றங்களுக்காக குற்றப்பத்திரிகை தயாரிக்கும் செயற்திட்டங்களையும் புலம் பெயர்ந்து வாழும் அத்தனை தமிழ் அமைப்புகள் ஊடாக செய்தோம். சிறீலங்காவுக்கெதிரான பொருளாதார தடையை ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறீலங்காவுக்கான பலகோடி வருமானத்தை தேடிக்கொடுக்கும் GSP+ என்ற விசேட சலுகையை ரத்து செய்ய கோரி ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை ஆணையாளர் ஊடாக் அதற்காக ஆதாரமாக சிறீலங்காவில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கான ஆதாரங்களை சான்றுகளாக கொண்டு சென்று வலியுறுத்தியதுடன் சர்வதேச மக்கள் நிதீமன்றம் டப்லினில் (Dublin) சிறீலங்காவுக்கு எதிராக நடைபெற்ற விசாரணை அமர்வுகளிலும் முழுமையான பங்களிப்பை கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் 2009 யூன் மாதம் உலக்தமிழர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டத்தில் பல நாட்டு தமிழ் அமைப்புகளுடன் நாமும் கலந்து பங்கு பற்றினோம். அதன் முதல் அமர்வும் அந்த அமைப்பின் வேலைத்திட்டங்களின் யாப்பு பாரிஸ்ல் ஓகஸ்ட் மாதம் ஐந்து கண்டங்களில் இருந்தும் மலேசியா மொறிசியஸ், அவுஸ்ரேலிய, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா நேர்ர்வே, சுவீடன் கொலன்டஇ Nஐர்மனி, பிரான்சு, இத்தாலி, சுவிற்சலாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தமிழ் அமைப்புக்கள; அறிவியல் ஆய்வாளர்களின் முன்னிலையில் உலகத்தமிழர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கவும் அதன் ஆரம்ப உறுப்பினர்களாக நாமும் இருக்கின்றோம.

அந்த உலகத்தமிழர் அமைப்பின் ஊடாக தாயகத்தில் வாழும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் நிவாரணங்களை செய்து வருகின்றோம். இந்த உலகத்தமிழர் பேரவை ஆரம்பமாகி பல செயற்திட்டங்களை கொண்டு சென்ற நாம் அதன் இரண்டாவது அமர்வு பிரித்தானியா பாராளமன்றத்தில் நடாத்தியிருந்தோம்.

அந்த அமர்வில் அமெரிக்கா, நோர்வே அரசியலவாதிகள், விசேட பார்வையாளர்களாக வந்தது மட்டுமல்லாது பலநாட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து செய்திகளையும் கூறியிருந்தனர். அதற்கு மேலாக இங்கிலாத்தின் வெளிநாட்டமைச்சமைச்சர் மிலிபிரான்ட் இந்த அமர்வை ஆரம்பித்து வைத்து எமது போராட்டம் நியாயமானது சிறீலங்காவில் தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப்படவேண்டும் அங்கே நடைபெற்ற போர்க்குற்றங்களுக் விசாரணை நடைபெறவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அன்று அங்கே பிரித்தானியாவின் அனைத்து கட்சிகளும் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது. முற்றும் பிரான்சு மற்றும் ஏனைய புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழரின் தனித்தமிழீழ என்ற கோரிக்கை மீள்வலியுறுத்து கருத்துக்கணிப்பை தான் வரவேற்பதாகவும் கூறினர்கள்.

அந்த கருத்துக்கணிப்பை நாம் பிரான்சில் 2009 டிசெம்பர் 12, 13ம் திகதிகளில் செய்து 32000 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் தனித்தமிழீழம் என்ற கோரியை ஏற்று வாக்களிப்பு மூலம் வலியுத்தினார்கள்.

இந்த கருத்துக்கணிப்பை மக்களின் தீர்ப்பை பிரான்சு நாட்டு அரசும், ஐரோப்பிய பாரளமன்றத்தினரும் ஏற்றுக்கொண்டனர். இன்று நாம் புலம்பெயர் நாடுகளில் பலமான கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில், முள்ளிவாய்க்காலில் எமக்கு ஒரு பேரழிவு ஏற்பட்டதேயொழிய எமது தாயகத்திற்கான போராட்டம் நின்று விடவில்லை. அதனையே நாம் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து பலவழிகளில் செய்து வருகின்றோம்.

இன்று பிரான்சில் ஒரு தேசியக்கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் நாம் இதுவரைகாலமும் செய்த செயற்பாடுகளை நாடுகடந்த அரசாங்கம் மூலமாக சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புகின்றோம.

தமிழீழத்தை நோக்கி பயணத்தை ஒரு தேசிய கடமையாக எடுத்து சென்று கொண்டிக்கும் எம் மேல் நம்பிக்கை கொண்டு எம்மை ஆதரித்து நாடுகடந்த அரசின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யும்படி அனைத்து புலம்பெயர் தமிழ்மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம்.

திருச்சோதி திருக்குலசிங்கம்

நாடுகடந்த தமிழீழ அரசு தேர்தல் வேட்பாளர்

92 - Departement Hauts de Seine

Comments