துரோகத்தால் வெடிக்காத குண்டுகளுடன் புறப்பட்ட வான் கரும் புலிகள்

வெடிக்காத குண்டுகளுடன் புறப்பட்ட வான் புலிகள்: அதிர்ச்சித் தகவல்




இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது என்பதை சிந்திக்க முதலில், நாம் ஒரு விடையத்தை முதலில் கவனிக்கவேண்டும். அன்றைய தினம் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் எக் குண்டுகளும் வெடிக்கவில்லை என்பதேயாகும்.





இதனிடையே குண்டுகளைத் தான் வீச முடியவில்லை, தான் கட்டிடம் ஒன்றில் மோதினால் அக்குண்டுகள் வெடிக்கும் என நினைத்த விமானி அருகில் இருந்த வருமான வரி திணைக்களக் கட்டிடத்தின் மேல் மோதியுள்ளார்.

இருப்பினும் அக் குண்டுகள் வெடிக்கவில்லை. அதனால் விமானம் கட்டிடத்துடன் மோதும் போது ஏற்பட்ட தீ விபத்தைத் தவிர வேறு எந்த வெடிப்புகளும் அங்கு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



வழமையாக புலிகளின் தாக்குதல் விமானம் ஒன்று 4 குண்டுகளை சுமந்து செல்ல வல்லது. அவை ஒவ்வொன்றும் சுமார் 25KG எடையுள்ளவை. அவற்றில் ஒன்று வெடித்திருந்தாலே, கட்டிடத்திற்கு கணிசமான சேதம் உண்டாகியிருக்கும். விமானத்தில் சுமார் 200KG வெடிபொருட்கள் இருந்திருக்கிறது, அவை வெடித்திருந்தால், வருமான வரி திணைக்கள அலுவலகம் முற்றாக இடிந்திருக்கும். ஆனால் கட்டிடத்தில் பெரும் தீ மூண்டதே அன்றி ஒரு பாரிய வெடிப்பு எதுவும் நிகழவில்லை என்பது உண்மையாகும். அதே போல கட்டுநாயக்க விமான நிலையத் தாக்குதலிலும் போடப்பட்ட குண்டுகள் வெடிக்கவில்லை என இராணுவம் கூறியுள்ளது. அக் குண்டுகள் வெடித்திருந்தால் விமான எதிர்ப்பு நிலையம் சேதமடைந்திருக்கும். பின்னர் விமானத்தை சுட்டு வீழ்த்த முடியாத நிலை தோன்றியிருக்கும்.

அதாவது பல காட்டிக் கொடுப்புகளாலும் துரோகங்களாலும், எமது போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்திருக்கிறது. தற்போது அவை மெல்ல மெல்ல வெளிவந்தவண்ணம் உள்ளன. இத் தகவல்களை நாம் பரபரப்புக்காக பிரசுரிக்கவில்லை. மாறாக என்ன நடந்தேறியுள்ளது என மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம்! இனி இவ்வாறான நிகழ்வுகள் எமது சமூகத்தில் நடப்பதை தடுக்க விரும்புகிறோம். அரசியல் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள எம்மை இதுபோல எதிரி ஆழ ஊடுருவி அளிக்கக்கூடும், யாரையும் தரக்குறைவாக எடைபோடாமல், எம்மில் ஊடுருவியுள்ள சிங்கள சக்திகளை இனம் கண்டு, அவர்களைக் களைந்து நாம் எமது போராட்டத்தில் வெற்றிபெறவேண்டும்,

இது ஒரு தோல்வியல்ல, இது எமக்கு ஒரு பாடம், இந்த தடைக்கல்லை நாம் படிக்கல்லாக மாற்றவேண்டும்.

முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய பல துரோகச் செயல்கள் குலை நடுங்கவைக்கும் சம்பவங்களாக இருக்கின்றன. இதை நாம் திரும்பத் திரும்ப ஏன் பேசவேண்டும் எனச் சிலர் எண்ணுவர். இது குறித்து நாம் அறிந்துவைத்திருப்பது நல்லது. நடந்து முடிந்த சில சம்பவங்கள் எமக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும்.

நடந்தேறிய துரோகங்கள் அனைத்தையும் அறிந்து தெளிவுபெறவேண்டும், எதிரி எவ்வடிவில் வந்தாலும், நாம் தற்போது அறிந்தவை, எமது கடந்த கால அனுபவங்களை பயன்படுத்தி எமது போராட்டத்தில் நாம் வெற்றிவாகை சூடவேண்டும்,

இதனையே அதிர்வு இணையமும் மக்களிடம் வேண்டி நிற்கிறது.













comments by: Rajan

இந்த துரோகிகளை தான் வம்பிலை பிறந்த துரோகிகள் என்று சொல்வார்கள் !sorry for the language unfortunately some time we have to behave like this otherwise our heart will blowup.
Our people have to setup an organization to find out these kind of animals from our community and we should not show any mercy for these kind of peoples,we have to k** them straightaway.
---------------------------------------------
comments by: Kalatharan
நீங்க சொல்வதை நம்பாமல் இருக்க முடியவில்லை! இருந்தாலும் முல்ளிவாக்கால் தேல்வியில்ல அது ஒரு பாடம் என்று குறிப்பிட்டுள்ளது வைர வரிகள் அதிர்வு !
---------------------------------------------
comments by: Arun
எத்தனையே பேரளிவுகளை நாம் சந்தித்துள்ளோம், எல்லாத்தையும் உடைத்து பீனிக்ஸ் பறவைபோல மீன்டு எழுவோம்
---------------------------------------------
comments by: Pamaran

திரும்பவும் திடுக்கிடும் உண்மைகளோடு அதிர்வு இணையம். வாசிக்கவே நடுங்குது. ஏன் இந்தக் காட்டிக்கொடுப்புகள் பணத்தில் என்ன அவ்வளவு ஆசையா ? என்ன உலகம் இது
---------------------------------------------
comments by: Govartanan

தயவு செய்து எல்லா துரோகங்கள் அதை செய்த துரோகிகள் எல்லாவற்றையும் அம்பலப் படுத்துங்கள்

Comments