இத்தாலி தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் சைக்கிள்சின்னத்திற்கு வாக்களியுங்கள்

தாயகத்தில் சிங்களஅரசின் கொடுங்கோல் ஆட்சியில் சிக்கித்தவிக்கும் எமது உறவுகளிற்கு இன்று இருக்கும் ஒரேயொரு தெரிவு, இலட்சியப்பாதையில் இன்றுவரை தேசிய உறுதியுடன் பயணிக்கும் கட்சியான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியினை ஆதரித்து வெற்றி செய்வதுதான்.

இவர்கள் மட்டும்தான் புலத்தில் மட்டுமல்லாது சர்வதேசத்திலும் எமது உரிமைகளுக்காக குரல் கொடுப்பார்கள்.

எனவே எமது தாயகத்து உறவுகள் உணர்வு பூர்வமாக செயற்பட்டுசைக்கிள்சின்னத்திற்கு தமது வாக்குகளையிடும்படி இத்தாலி தமிழ் அமைப்புகளின் ஒன்றியமும் வேண்டுவதுடன், தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சகல தொகுதிகளிலும் அதி பெரும்பான்மையுடன் வெற்றியீட்ட வாழ்த்துகின்றது.

Comments