"த.தே.மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள் - பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு

"தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" என்ற தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைத்து தேர்தலில் களமிறங்கியுள்ள சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என, பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்..

உறவுகளே...

சைக்கிள் சின்னத்தில் இலட்சியத்தை நோக்கிய பாதையில் பயணிக்கின்ற தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு தாயகத்தில் வாழும் உறவுகள் ஆதரவளித்து, வெற்றி பெற வைத்து, உறுதியான அரசியல் அணியாக உருவாக்க முன்வர வேண்டும். அவர்களை எமது பிரதிநிதிகளாகப் பராளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் என, பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு வேண்டுகின்றது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments