இலங்கை செல்லும் புலம் பெயர்ந்த இளையோர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை

சிறிலங்காவிலிருந்து வரும் போது உயிர் ஆபத்து திரும்பிச் சென்றால் கொன்றுவிடுவார்கள் , சித்திரவதை செய்வார்கள் என்று அகதி கோருவதும் கடவுச்சீட்டு வந்தவுடன் ஏதாவது ஒரு சாட்டு வைத்து சிறிலங்காவுக்கு விசிட் செய்வதும் பலரும் செய்யும் ஒரு பித்தலாட்டம் ,,,,,,

தாய்ப்பாசம் காரணம் என்று நாம் ஒத்து கொள்ளுகின்றோம்

சரி உங்களுக்கு அகதி அந்த அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு , கடவுச்சீட்டு கிடைக்காத ஒருவராக இருந்தால்

நீங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு தாய்ப்பாசம் என்று சிறிலங்காவிற்கு போவீர்களா ?

சிறிலங்காவின் அரசபயங்கரவாத்தை தெரிந்தும் சிறிலங்காவிற்கு செல்லும் தமிழர்களுக்காக அழுவதில் அர்த்தமில்லை
-----------------------------

புலனாய்வுத்துறையால் கடத்தப்பட்ட மாணவன் சாட்சியம்: Report

விடுமுறைக்கு இலங்கை செல்லும் மற்றும் அவசர தேவை கருதி இலங்கை செல்லும் இளையோர்கள் இலங்கை புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு விசாரணை என்ற பெயரில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதை நாம் பல இணையத்தளங்களில் படித்திருக்கிறோம். அவ்வாறு நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் தாமே முன் வந்து அதிர்வு இணையத்திற்குத் தெரிவித்த தகவலை நாம் இங்கு பிரசுரிக்கிறோம்.

சபேசன் என்னும் இளைஞர் பிரித்தானியாவில் கல்வி கற்றுவருபவர். இவர் தாயார் உடல் நிலை மோசமடைந்ததன் காரணமாக இலங்கை செல்லவேண்டி நேர்ந்தது. வவுனியா சென்ற இவரை மறுதினமே இலங்கை புலனாய்வுத்துறையினர் கடத்தியுள்ளனர். இலக்கத் தகடு அற்ற வாகனத்தில் வந்த புலனாய்வுத்துறையினர், இவர் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்து இவரை வாகனத்தில் ஏறுமாறு அச்சுறுத்தி பின்னர், இவரை பலவந்தமாக இழுத்து வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.



இலக்கத்தகடற்ற வாகனம் கறுப்புக் கண்ணாடிகளால் ஆனது, வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாது. இவரது கண்கள் கட்டப்பட்ட நிலையில், கைகளையும் கட்டிய புலனாய்வுத்துறையினர், இவரை மதவாச்சியில் அமைந்துள்ள சித்திரவதை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். வாகனம் பயணித்தவேளை பல சோதனைச் சாவடிகள் இருந்தும் எந்தச் சோதனைச் சாவடியிலும் இவர்கள் வாகனம் நிறுத்தப்படவில்லை எனக் கூறுகிறார் சபேசன்.

மதவாச்சியில் உள்ள சித்திரவதை முகாமில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர் தொங்கவிடப்பட்டு, ஆணுறுப்பில் சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் இவரை விசாரணைசெய்ய வந்த அதிகாரிகள் வேறு ஒரு நபரைப் பற்றி இவரிடம் கேட்டுள்ளனர். சபேசனுக்கு அந்தக் குறித்த நபரைப் பற்றி எத் தகவலும் தெரிந்திருக்கவில்லை. மாறாக அவர் யார் என்றே தெரியவில்லை. எதற்காக தாம் தாக்கப்படுகிறோம் என்று கூட தெரியாத நிலையில் சபேசன் இருந்திருக்கிறார்.

தான் வெளிநாட்டில் கல்வி கற்பதாகவும், அம்மாவை பார்ப்பதற்காக வந்ததாகவும் அவர் பல தடவை கூறியும் பலன் இல்லை. சபேசன் கைகளை கட்டி அவரின் முதுகில் பழுக்கக் காய்ச்சிய கம்பிகளைக் கொண்டு சூடுகாட்டியுள்ளனர் புலனாய்வுத்துறையினர். பின்னர் அப் புண் ஆறாதவாறு நீரை ஊற்றி சில நாட்கள் கழித்து ஆறாத அப் புண் மீது மிளகாய் தூளை தடவி மேலும் சித்திரவதைக்கு உள்ளாக்கியும் உள்ளனர்.

இவ்வாறு அல்லலுற்ற சபேசனை மீட்க அவர் பெற்றோரும் உறவினர்களும் மனித உரிமைக்கழகத்தில் முறைப்பாடு செய்தும் எதுவித பலனும் இல்லை. பின்னர் அவர் உறவினர்கள் பெருந்தொகையான பணத்தை கப்பமாகச் செலுத்தி அவரை விடுவித்துள்ளனர். திரும்பவும் 5 நாட்களில் வந்து சரணடையவேண்டும் என்ற கட்டளையில் அவர் விடுவிக்கப்பட்டார். அச் சமயத்தில் அவர் அங்கிருந்து தப்பி திரும்பவும் கொழும்பு வந்து தற்போது பிரித்தானியாவில் கல்வி கற்று வருகிறார்.

தனக்கு நடந்ததைப் போலவே பல இளைஞர்களுக்கும் இவ்வாறு நடந்து வருவதாக அவர் அதிர்வு இணையத்திற்குத் தெரிவித்தார். மதவாச்சியில் உள்ள இராணுவ தடுப்பு முகாமில் பல காணாமல் போனவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பல சித்திரவதை சிறைச்சாலை அறைகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தமிழ் இளையோர்கள் விடுமுறை மற்றும் அவசிய தேவைக்களுக்காக இலங்கை செல்வது எவ்வளவு ஆபத்தான விடயம் என்பதை அவர் அதிர்வு இணையமூடாகத் தெரியப்படுத்த விரும்பியதன் பேரில் நாம் அவர் குறித்த இச் செய்திகளை பிரசுரித்துள்ளோம்.

போர் முடிவுற்றது. இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்கள், இலங்கை சென்று வந்தேன் அங்கு ஒரு பிரச்சனையும் இருக்கவில்லை எனப் பலர் கூறிவருகின்றபோது, தமிழ் இளைஞர்கள் நாளாந்தம் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர் என்பதே உண்மை நிலையாகும். இதனையே சபேசனின் சம்பவமும் நினைவுபடுத்தி நிற்கிறது.




comments by: Aja

He shloud report this to the relevant British authorities.
---------------------------------------------
comments by: Saratha

ஆம் இப்படி நடக்குது எண்டு தெரிஞ்சும் இன்னும் ஆக்கள் ஏன் போறீங்கள், முதலில நீங்கள் ஏர் லங்காவை புறக்கணியுங்க, இலங்கை போகவேண்டாம், வேற நாட்டுக்கு போங்க. இலங்கை பொருட்களை பாவிக்கவேண்ட்டம்..
---------------------------------------------
comments by: Ranjan

Sabesan have to take this incident to further in england and also he can claim asylum in this country or have to claim asylum. if he go back to sir lank again he may be taken by them again and he won't come back,and also these kind of incidents will stopping our peoples sending back from Australia and other country s where sir lankan government taking their false propaganda against our people. This matter have to brought up to the human rights organizations attention immediately is well.

Comments