இந்தியா வசமான இரணைமடு விமானஓடுபாதைகள்


விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு விமான ஓடுபாதைகள் தற்போது இந்திய இராணுவத்தினரது உபயோகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இப்பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் இங்கு கீழ்நிலை அதிகாரிகளோ, படையினரோ செல்வதில்லை எனவும் அத் தளத்தில் இருந்து இந்தியாவிற்கு நேரடியாக பயணம் செய்து வருவதும் இந்தியாவில் இருந்து செல்லும் படையினர் இலங்கைப்படையினருக்கு பயிற்சிகளை வழங்கியும் வருவதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்டிருந்த இவ்விமான ஓடுதளம் குறித்து படைத்துறை ஆய்வாளர்கள் தமது வியப்பை வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இரணைமடுப்பகுதியில் தொலை தொடர்பு கோபுரம் ஒன்றும் அண்மையில் அமைக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இதன்மூலம் பருத்தித்துறை , குரநகர் ஆகிய இடங்களுடன் மாத்திரமல்லாது இந்தியாவிற்கான தொலை தொடர்பையும் பேண இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Comments