நாடுகடந்த தமிழீழ அரசாங்கமே விடுதலையை வேண்டிநிற்கும் தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வை பெற்றுத்தரும். இந்த புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துவதோடு அதற்கான எனது பூரண ஒத்துழைப்பும், ஆதரவும் என்றும் இருக்கும் என பரிக் காடினர் தெருவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஜி.ரி.வி யில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக பேசுகையிலேயே அவர் இதனை தெருவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெருவிக்கையில்…
ஜனநாயக வளியில் மேற்கொள்ளப்படும் இந்த நாடுகடந்த அரசாங்கத்தின் உருவாக்கம் வரவேற்கத்தக்கது. மக்களின் முழு ஆதரவோடு உருவாகும் இந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது மேற்கொள்ளும் சரியான இராஜதந்திர நகர்வினூடாக இதுவரைகாலமும் விடுதலைவேண்டி நிற்கும் தமிழர்களுக்கு விடுதலையை பெற்றுத்தரும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
பிரித்தானியாவை பொறுத்தவரையில் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் இதற்கான ஆதரவை தெருவித்துள்ளார். தொழில்கட்சியைப் பொறுத்தவரையில் இந்த ஜனநாயக வளியில் உருவாக்கப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற தயாராகவே உள்ளது.
கடந்த காலங்களிலும் தமிழர்களின் பிரச்சனைகள், வேதனைகள், போராட்டங்கள் என்பவற்றோடு பிரித்தானிய தொளில் கட்சியினராகிய நாங்கள் பங்கேற்றதோடு தமிழர்களுக்காக பகிரங்கமாக குரல்கொடுத்தும் வந்துள்ளோம்.
உரிமைகளுக்காக போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அதிலும் ஒரு பாரம்பரிய இனமாக, தனித்துவமான கலை, கலாச்சாரங்க்களோடு வாழும் தமிழர்களுக்கு அவர்களின் உரிமைகளுக்காக போராடுவதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு.
என்னைப் பொறுத்தவரையில் இன்றைய சூழ்நிலையில் தமிழர் தரப்பால் மேற்கொள்ளப்படும் அதியுயர் இராஜதந்திர நகர்வாகவே இந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை பார்க்கிறேன். இதில் அனைத்து தமிழ் மக்களும் இணைந்து ஒரு வலுவான கட்டமைப்பாக, மக்களின் பிரதிநிதிகளாக இந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செயற்படும் பொழுது சர்வதேசங்களும் இதனுடன் இணைந்து ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களை கொடுக்க முன்வரும். அவ்வாறு கடுமையான அழுத்தங்களை ஸ்ரீலங்கா அரசு சர்வதேசங்களிடம் இருந்து எதிர்கொள்ளும் போது வேறு வளியின்றி சர்வதேசங்களின் நியாயமான கூற்றை நிராகரிக்க முடியாது அதற்கு இணங்கவேண்டிய இக்கட்டான நிலை நிச்சயம் ஸ்ரீலங்கா அரசிற்கு ஏற்படும். அப்போது ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்களுடனான நீண்டகால பிரச்சனையை தீர்த்துவைக்கவேண்டிய கட்டாயகும் எழும்.
எனவே பிரித்தானியாவில் வாழும் அனைத்து தமிழ்மக்களும் இந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் பங்கேற்று வாக்களித்து ஒரு பலமுள்ள தமிழர்களின் அரசாங்கமாக உருவாக்கவேண்டியது மிக மிக முக்கியம். ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளோடு சர்வதேசங்கள் பேசுவதற்கு எந்த தடையும் இல்லை, சட்டச்சிக்கலும் இல்லை.
எனவே எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் மக்கள் அனைவரையும் வாக்களிப்பதோடு அவ்வறு வாக்களிக்கும் போது சரியானவர்களை தேர்ந்தெடுப்பதும் உங்களின் பொறுப்பும் ஆகும்.
கடந்த 13 ஆண்டுகளாக தமிழர்களோடு இணைந்து செயலாற்றிவந்துள்ளேன். எதிர்வரும் காலங்களிலும் தொடர்ந்தும் செயற்படுவேன். எனது குரல் தமிழர்களுக்கானது. உங்களின் விடுதலைக்காக நானும் ஜனாநாயக வளியில் உங்களுடன் இணைந்து போராடுவேன்.
நீங்கள் எதிர்வரும் தேர்தலில் எனக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பும் பட்சத்தில் அந்த குரலும் போராட்டமும் பிரித்தானிய பாராளுமன்றத்தினூடாக ஒலிக்கும். அப்போது அதற்கு வலிமை அதிகம். இதனை கருத்திற்கொண்டு எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் தொளில்கட்சிக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும் என உரிமையோடும், உங்களுக்கான பணியை இதுவரை சரிவர செய்துள்ளேன் என்ற திருப்தியோடும் கேட்டுக்கொள்கிறேன். என்றார்.
Comments