இது ஒரு வரலாற்றுக் கடமை
நாடு கடந்த தமிழீழ அரசு தமிழருக்காக தமிழரால் அமைக்கப்பட்ட, கட்சி சார்பற்ற, அமைப்பு சார்பற்ற, இயக்கம் சார்பற்ற ஓர் உன்னதமான உலகளாவிய தமிழர்களின் கூட்டமைப்பு. இதன் பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளைத் தேர்வு செய்யவே இவ்வருடம் மே மாதம் 2ம் திகதி நாம் நடாத்தும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான முதல் தேர்தல். இதில் பங்குகொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழரினதும் வரலாற்றுக் கடமை ? நிலத்தில் புரளும் நம்மவர் நிமிர்ந்து நடக்க, அஞ்சிவாழும் எம்மவர் ஆடிப்பாட உங்கள் எல்லோருடைய ஒத்துழைப்பும், பங்களிப்பும் எமக்கு நிட்சயம் தேவை. உங்கள் திறமைமிக்க செயற்பாடும், அன்புமிக்க ஆதரவும் எமக்கு வலுவையும், உற்சாகத்தையும் தரும் என்பது திண்ணம். இதை உணர்ந்து, இனியும் தாமதிக்காமல், எல்லோரும் எம்முடன் சேர்ந்து செயற்படுமாறு அன்புடன் வேண்டுகிறோம், ஆவலுடன் அழைக்கிறோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழீழ நாடுகடந்த அரசின் கனடா நாட்டுச் செயற்குழுத் தலைவர் கலாநிதி ராம் சிவலிங்கம் அவர்கள்
நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது தேர்தல் எமது இறுதிப்போரின் முதற்படி என்று குறிப்பிடும் தலைவர் கலாநிதி ராம் சிவலிங்கம் அவர்கள் வேண்டுகோள் வருமாறு:
மே மாதம் 2ம் திகதி நடக்கவிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசின் உலகளாவிய ரீதியிலான தேர்தல், உலகச் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும். இதுகண்டு, மனிதாபிமானத்துக்கு மதிப்பு கொடுக்கும் அத்தனை நாடுகளும் எமது சாத்வீகப் போருக்கு ஆதரவு தரவேண்டும்.
சாமர்த்தியமான எமது நகர்வு கண்டு உலகமே எம்மை மெச்சவேண்டும், உதவவேண்டும். இவை எல்லாம் நிறைவு பெற நாம் எல்லோரும் மறவாமலும், தவறாமலும் இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
எம்மவர் உரிமைகளைப் பெற்றுத்தர, அவர்கள் வாழ்வை வளம் பட வைக்க நாம் எடுக்கும் பெருமுயற்சியின் முதற்படிதான் இந்த நாடுகடந்த தமிழீழ அரசுக்கான உலகுதழுவிய முதலாவது தேர்தல். இத்தேர்தலில் வாக்களிக்க நாம் ஒதுக்கும் நேரம் சொற்பமானதென்றாலும், நாம் போடும் ஒவ்வொரு வாக்கும் விலை மதிக்கமுடியாதவை. உயிர்களை மட்டுமல்ல எம் இனத்தின் உரிமைகளையும், உடமைகளையும் பேணவல்ல பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் வாக்குக்களின் தனித்துவத்தை உணர்ந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
அச்சமே வாழ்க்கை, வாழ்க்கையே அச்சம் என முள்வேலிக்குள் முடங்கித் தவிக்கும் எம் அன்பு நெஞ்சங்களை ஒருமுறை எண்ணிப்பாருங்கள்.
எம் இனிய உறவுகளே!
எங்கள் உறவுகளைக் காக்கும் உன்னதப்பணியை உரிமையுடன் செய்ய நாம்தானே முன்வரவேண்டும். வாக்காளர்களாக மட்டுமன்றி திறமையும், சாமர்த்தியமும், இராஜதந்திரமும் கொண்ட வேட்பாளர்களை இத்தேர்தலில் நிறுத்தி அவர்களை வெற்றிபெறச் செய்வதும் எமது கடமைகளில் ஒன்று?
தமது உயிரையே தன் இனத்திற்கு தருவதை ஓர் வரமாக எண்ணிய உங்கள் உறவுகளின் ஆசை, விருப்பம், தியாகம், சிந்தனை எல்லாம் வீணாகக்கூடாது?
*
இந்த உலகுதழுவிய வாக்குப்பதிவு ஒவ்வொரு புலம்பெயர் தமிழரின் மனதிலும்,சிந்த்தனையிலும் நன்றாகப் பதியவேண்டும், பதிந்த நினைவுகள் வாக்குகளாகமாறி எமது வாக்கின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். இத்தேர்தலில் வெற்றி பெறும் பிரதிநிதிகளின் திறமையும், நாம் அவர்களுக்கு அளிக்கும் வாக்குகளின் எண்ணிக்கையும் தான் எமது செயல்வடிவத்துக்கான வலு. இவைதானே உலகம் எம்மிடம் எதிர்பாக்கும் பலம், சக்தி.
தேர்தலுக்கான இறுதிக்கட்டதில் இன்று நாம் இருக்கிறோம். இதுவரை பங்குகொள்ளாத அமைப்புக்கள், ஊர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், கோவில்கள், தொழில் ரீதியான சபைகள் எல்லாமே இனிமேலும் பார்வையாளர்களாக இருக்காமல் பங்காளிகளாக மாறுங்கள். உங்கள் அனைவரது ஒத்துழைப்பும், பங்களிப்பும் கண்டு ஒட்டுமொத்தத் தமிழினமும் பெருமையும், மகிழ்ச்சியுமடைய வேண்டும்.
நாடு கடந்த தமிழீழ அரசு தமிழருக்காக தமிழரால் அமைக்கப்பட்ட, கட்சி சார்பற்ற, அமைப்பு சார்பற்ற, இயக்கம் சார்பற்ற ஓர் உன்னதமான உலகளாவிய தமிழர்களின் கூட்டமைப்பு. இதன் பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளைத் தேர்வு செய்யவே இவ்வருடம் மே மாதம் 2ம் திகதி நாம் நடாத்தும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான முதல் தேர்தல். இதில் பங்குகொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழரினதும் வரலாற்றுக் கடமை ?
நிலத்தில் புரளும் நம்மவர் நிமிர்ந்து நடக்க, அஞ்சிவாழும் எம்மவர் ஆடிப்பாட உங்கள் எல்லோருடைய ஒத்துழைப்பும், பங்களிப்பும் எமக்கு நிட்சயம் தேவை. உங்கள் திறமைமிக்க செயற்பாடும், அன்புமிக்க ஆதரவும் எமக்கு வலுவையும், உற்சாகத்தையும் தரும் என்பது திண்ணம். இதை உணர்ந்து, இனியும் தாமதிக்காமல், எல்லோரும் எம்முடன் சேர்ந்து செயற்படுமாறு அன்புடன் வேண்டுகிறோம், ஆவலுடன் அழைக்கிறோம். என அவர் குறிப்பிட்டுள்ளார்
Comments