பிரித்தானிய நா.க. அரசாங்கம் தனது வேட்ப்பாளர்களை வெளியிட்டுள்ளது

லண்டன் வெம்பிளியில் உள்ள கிரவுன் பிளாசா விடுதியில் இன்றைய தினம் நாடு கடந்த அரசானது தனது தேர்தலில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 20 பேர் பிரித்தானியாவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், சுமார் 40 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 2 வரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, மீதமுள்ள 38 பேர் வேட்ப்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் ஆணையாளர்கள் இன்று உத்தியோக பூர்வமாக வேட்ப்பாளர்களுக்கு அவர்கள் போட்டியிடுவதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து வேட்ப்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. இத் தேர்தலில், இலங்கை முன் நாள் எம்.பி எஸ்.ஜேயானந்தமூர்த்தி இத் தேர்தலில் போட்டியிடுவது மிக முக்கியமான விடையம். அத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் விஞ்ஞாபனமுன் அதிர்வு இணையத்திற்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்டது. அதன் தமிழ் வடிவம் விரைவில் பிரசுரமாகும் என்பதையும் இங்கு நாம் அறியத்தர விரும்புகிறோம்.











பிரித்தானியாவில் போட்டியிடும் வேட்ப்பாளர் பட்டியல்

வட கிழக்கு பிராந்தியம் (ஐந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்)
1. மணிவண்ணன் பத்மநாபன்
2. செல்லத்துரை செல்வராசா
3. ஆறுமுகம் கந்தைய்யா மனோகரன்
4. கரன் முருகவேல்
5. ஆர்த்தி ஆறுமுகம்
6. செந்திநாதன் சுந்தரம்பிள்ளை
7. முருகதாஸ் வாசுகி
8. கவிராஜ் சண்முகநாதன்
9. சசிதர் மகேஸ்வரன்

தென் கிழக்கு பிராந்தியம் (இரண்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்)
1. தவசீலன் சிதம்பரப்பிள்ளை
2. நிக்கொலஸ் மனோரஞ்சன்
3. ஜனார்த்தனன் புலேந்திரன்

தென் மேற்கு பிராந்தியம் (ஐந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்)
1. ஜெயசங்கர் முருகைய்யா
2. நமசிவாயம் சத்தியமூர்த்தி
3. பரமசிவம் கார்த்திகேசன்
4. அப்பாத்துரை வைரவமூர்த்தி
5. டேவிட் யோசப்
6. வாசுகி சோமாஸ்கந்தா
7. தணிகாசலம் தயாபரன்
8. உருத்திராபதி சேகர்
9. வடிவேலு சுரேந்திரன்

வடமேற்கு பிராந்தியம் (ஐந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்)

1. நிமலன் சீவரத்தினம்
2. ஜெயவாணி அச்சுதன்
3. பாலாம்பிகை முருகதாஸ்
4. சொக்கலிங்கம் யோகலிங்கம்
5. சுகந்தமாலா இராதாகிருஸ்ணன்
6. லலிதசொருபினி பிரதீப்ராஜ்
7. சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி
8. சிவபூசம் சுகுமார்
9. சுகிர்தகலா கோபிரத்னம்
10. சிவசம்பு சிவராஜா
11. டிலுக்சன் மொரிஸ்

லண்டன் பெரும்பாகத்திற்கு வெளியிலான பிரதேசங்கள் (மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்)

1. சின்னத்துரை சிறிரஞ்சன்
2. வன்னியசிங்கம் குணசீலன்
3. லோகேஸ்வரன் சிவசுப்பிரமணியம்
4. ஆறுமுகம் விவேகானந்தராஜா
5. நவரத்னம் பரமகுமாரன்
6. ரெஜினோல்ட கிங்ஸ்ரன்

Comments