தமிழீழ மக்கள் பேரவைத்தேர்தலில் உங்களையும் பிரதிநிதிகளாக்குங்கள்: மக்கள் பேரவை - பிரான்ஸ்

வரப்போகும் தமிழீழ மக்கள் பேரவைத்தேர்தலில் உங்களையும் பிரதிநிதிகளாக்கி கொண்டு இந்த நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் எமது சனநாயக கட்டமைப்பின் மூலம் உருவாக்கம் பெறும் தமிழீழ தேசிய அமைப்புக்களின் மூலம் எமது தேசத்தை வலியுறுத்துவோம்.

32000 க்கு மேலான மக்கள் பிரான்சில் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்று டிசம்பர் 13- 14 ஆம் திகதிகளில் நடந்த சர்வசன வாக்கெடுப்பில் வழியுரிதினர், அதை இவ்வுலகம் மிகவும் உன்னிப்பாக பார்த்தது. அதன் விளைவாக பல மாற்றங்கள் உலக அரசியல் மன்றங்களில் நடந்தது.

இன்று நாம் அதற்கும் மேலாக எமது தமிழ்ஈழ தேசிய கட்டமைப்புக்களை மக்கள் பேரவைகலாக உலகெங்கும் உருவாகிவருகிறோம். அதன் அடிப்படையில் பிரான்சு தமிழீழம் மக்கள் பேரவைக்கான தேர்தல் இம்மாதம் நடைபெறுகிறது.13 - 14ஆம் திகதிகளில் மக்கள் இட்ட ஆணையை முன்னெடுக்க நடக்கும் தேர்தலில் நீங்கள் மக்கள் பிரதிநிதிகளாக வரவேண்டும்.

பிரான்சை பிரதேச வாரியாக பிரித்து நடக்கும் தேர்தலில் உருவாகும் பிரதேச சபையின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை கிழே தரப்படுள்ளதுதமிழீழ மக்கள் பேரவையின் தேர்தலில் வேட்பாளர்கள் பிரதேசவாரியாக தெரிவு செய்யப்படும் விபரம்

1. Paris ( 75 ) 4 பேர்

2. Seine et marne ( 77 ) 5 பேர்

3. Yvelines ( 78 ) 5 பேர்

4. Essone ( 91 ) 5 பேர்

5. Haut de Seine ( 92 ) 5 பேர்

6. Seine Saint Denis ( 93 ) 9 பேர்

7. Val de marne ( 94 ) 5 பேர்

8. Val de Oise ( 95 ) 5 பேர்

9. Oise ( 60 ) 2 பேர்

வெளிமாவட்டங்கள்

பிரான்சின் வடக்கு, வடகிழக்கு பகுதியில் வாழும் தமிழ்மக்களின் பிரதிநிதித்துவம் 03 பேர்

Alsace மாநிலத்திலிருந்து 04 பேர்

Rhone Alpes பகுதியில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் 04 பேர்

Sud West 05 பேர்
Centre 04 பேர்

• ஓவ்வொரு பிரதேச சபைகளும், தமது பிரதேசத்தில் வாழும் மக்களுடனான தொடர்புகள் மற்றும் அரசியல்கட்சிகளுடனான தொடர்பாளராகவும் இருப்பர்.

• பிரதேசசபையில் தெரிவு செய்யப்படுபவர்களில் அதிக வாக்குகளை பெற்ற ஒன்றிலிருந்து மூன்று பிரதிநிதிகள் தமது மாநிலங்களில் உள்ள தமிழீழ மக்களின் எண்ணிக்கைக் கேற்ப பிரான்சு நாட்டு தேசிய சபைக்கு தெரிவு செய்யப்படுவார்கள்

• தமிழீழ மக்கள் பேரவையின் பிரான்சு பிரதேசசபையில் 70 பேரும்,

• தேசிய சபையில் 29 பேரும் இருப்பார்கள்.

வரப்போகும் தமிழீழ மக்கள் பேரவைத்தேர்தலில் உங்களையும் பிரதிநிதிகளாக்கி கொண்டு இந்த நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் எமது சனநாயக கட்டமைப்பின் மூலம் உருவாக்கம் பெறும் தமிழீழ தேசிய அமைப்புக்களின் மூலம் எமது தேசத்தை வலியுறுத்துவோம்.

நாட்டிலே இன்று உருவாகியிருக்கின்ற புதிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாம் பிரான்சில் ஒரு பலமான அரசியல் கட்டமைப்பினை புதிய சவால்களுக்கு முகம் கொடுக்கின்ற வகையில் வளர்த்தெடுப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகவுள்ளது.

இந்த அரசியல் கட்டமைப்பு பிரான்சில் வாழுகின்ற தமிழீழ மக்களை அரசியல் வேலைத்திட்டங்களுக்கு உரிய முறையில் நிறுவனரீதியாக வளர்த்தெடுத்து தாயகத்திலே எமது மக்கள் நியாயமான போராட்டத்திற்கு தமிழர் அல்லாத மக்களின் தார்மீக ஆதரவை வென்றெடுப்பதுவும், இந்த நாட்டின் அதிகார பீடத்தோடு தொடர்ச்சியான திட்டமிட்ட வேலைத்திட்டத்தூடாக அவர்களின் ராஐதந்திர ரீதியான ஆதரவை வென்றெடுத்து செயற்படுவதற்கும் உரிய முறையில் நேர்த்தியாக திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டியுள்ளது.

சனநாயகம், வெளிப்படைத்தன்மை, சட்டத்திற்குட்பட்ட செயற்பாடு, பொறுப்புகூறும் தன்மை, அடிப்படை (மக்கள்) அரசியல் தளத்திலிருந்து கட்டியெழுப்புதல், பரஸ்பர மரியாதை கலந்து பேசி கூட்டாக முடிவெடுத்தல் போன்றவற்றை இந்தக் கட்டமைப்பு அடிப்படைவிழுமியங்களாக கொண்டிருக்கும்.

முடிவெடுக்கும் வழிமுறையை பல்வேறு மட்டத்தில் உள்ள மக்கள் கட்டமைப்புகளுக்கு பாரப்படுத்தப்படும். இந்த கட்டமைப்பினால் பிரான்ஸ் வாழ்கின்ற தமிழ் மக்களை ஒரு வலிமைமிக்க சமூகமாக வளத்தெடுப்பதற்கு தேவையான சமூக வேலைத்திட்டங்களையும் உரிய முறையில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும்.

உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களை வலிமை மிக்க சமூகமாக உயர்த்துதல். அதன் அடிநாதமாக தாயகத்தில் தேசியம் இறைமையுடன் கூடிய தன்னாட்சியை நிறுவுவது இதன் முக்கிய நோக்கமாகும்;.

எமக்கென்று ஒரு நாடும், அரசும் இருந்ததும் அங்கே எமது மக்கள் சந்தோசமாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்தார்கள் என்பதும் வரலாற்று உண்மை, ஆனால் அந்த நாடு அழிக்கப்பட்ட நிலையில் அதை பறிபோய்விடாது பாதுகாப்பது எமது எல்லோரினதும் தலையாய கடமை, இன்று எமது போராட்டம் மக்களின் கையில் வழங்கப்பட்டுள்ளது.

அதை வீரியமாக எடுத்து சென்று துன்பத்தின் எல்லையில் நின்று சுதந்திரத்தையே நம்பிக்கையோடு காத்து நிற்கும் எமது மக்களுக்கும், சிறைக்கம்பிக்குள் இருக்கும் எமது உறவுகளுக்கு கைகொடுப்பதோடு மட்டுமில்லாது எமது தேசியத்தையும் பாதுகாத்து, வளர்த்து, மீண்டும் எமது நாட்டை கட்டியெழுப்புவோம்

தேர்தல் பற்றிய மேலதிக விபரங்களுக்கு எம்முடன் தொடர்புகொள்ளவும்

Tel. 06 15 88 42 21

Email.Mte.France@gmail.com

Comments