நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கைது – சீமான் கண்டனம்

நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமாரை தமிழ்நாடு காவல்துறை தமிழீழ விடுதலைப்புலிகளூக்கு மருந்துப்பொருட்கள் சப்ளை செய்ததாகக் கூறி திட்டமிட்டு நேற்றுபொய் வழக்கில் கைது செய்துள்ளது.

தமிழக அரசின் இந்தச்செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.இந்த வழக்கு ஒரு வருடத்திற்கு முன்பு புனையப்பட்ட பொய் வழக்காகும்.அந்த வழக்கில் திடீரென்று கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?லட்சக்கணக்கான தமிழர்களைக் கொல்ல நவீன ரேடார்களையும் ஆயுதங்களையும் ராணுவத்தினரையும் இந்திய அரசு அனுப்பும் பொழுது அதனைக் கண்டிக்கத் துப்பில்லாது கள்ள மவுனம் காத்து தமிழின அழிப்பிற்குத் துணை நின்ற தமிழக அரசு இன்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மருந்து சப்ளை செய்ததாகக் கூறி ஒரு வருடத்திற்கு முன்பு போடப்பட்ட பொய் வழக்கில் எம் இயக்கத்தைச்சேர்ந்த முத்துக்குமாரைக் கைது செய்துள்ளது.

அதுவும் எம் இயக்க கொடியறிவிப்பு மாநாடு நடந்து கொண்டிருக்கும் வேளையில் அவரைக்கைது செய்யக் காத்திருப்பதும் மாநாடு நடந்து முடிந்த உடன் அவரைக் கைது செய்வதும் எந்த நியாயம்?இது தமிழின விடியலுக்காகப் போராடும் எம் இயக்க வளர்ச்சியைத் தடுக்கும் செயலன்றி வேறென்ன?வரும் மே 18 ல் நடைபெற இருக்கும் தமிழின அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு முன் தொடர்ச்சியாக எம் இயக்கத்தமிழர்களைத் தொடர்ச்சியாகக் கைது செய்து இயக்க மாநாட்டினை முடக்க நினைக்கும் தமிழக அரசின் எண்ணம் நிச்சயம் நிறைவேறாது.

எம் இன எழுச்சிக்காகப் போராடும் எங்களை எந்தச் சட்டம் கொண்டும் அடக்க முடியாது. என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
முத்துக்குமார் மீதான வழக்கினை எம் இயக்கம் சட்ட ரீதியாக எதிர் கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.



சீமான்

நாம் தமிழர் இயக்கம்

Comments