நோர்வேயை தளமாக கொண்ட ஊடகவியலாளர் நடராஜா சேதுரூபன் மீது அவதூறுகளை பரப்பியதற்காக த ஏசியன் ரைபூன் ஊடகத்தின் ஆசிரியர் கே ரி ராஜசிங்கம் 125,000 குரேணர்களை அபராதமாக செலுத்தவேண்டும் என சுவிஸ் மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
த ஏசியன் ரைபூன் ஊடகத்தின் ஆசிரியர் கே ரி ராஜசிங்கம் இந்த அபராதத்தை சேதுவுக்கு செலுத்த வேண்டும் எனவும், அவதூறு பரப்பும் கட்டுரைகளை இணையத்தளத்தில் இருந்து நீக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைகள் மீதான தீர்ப்பு கடந்த புதன்கிழமை (19) வெளியிடப்பட்டது. சேது விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவு உறுப்பினர் என த ஏசியன் ரைபூன் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த தகவலால் சேதுவின் குடும்ப உறுப்பினர்கள் உயிர் அச்சுறுத்தல்களை எதிநோக்கியதாக சேதுவின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

Comments