துரோகியின் காரியம் முடிந்ததும் சுட்டுக்கொலை



யுத்தம் முடிந்ததை தொடர்ந்து முகாமிலிருந்து தப்பி வந்த போராளிகள், யாழ்ப்பாணம் வவுனியா பகுதியில் முன்னமே நடவடிக்கைகளுக்காக அனுப்பபட்ட போராளிகள் என பலரை சிநேகபூர்வமான பேசி, ஆசைவார்த்தைகாட்டி இராணுவத்திடம் சரணடையவைக்கவும் அவர்களை இலங்கை புலனாய்வு துறையுடன் இணைக்கும் வேலையையும் நேற்றுவரை கச்சிதமாக செய்து வந்தார் இவர்.

இறுதியாக நெல்லியடிப்பகுதியில் இராணுவத்திடமிருந்து பெற்றுகொண்ட பலகோடி ரூபாயில் ஒரு புகைப்பட நிலையமொன்றை திங்கட்கிழமை ஆரம்பிக்க இருந்தார். இன்நிலையில் இன்று அதிகாலை தனது புதிய வர்தக நிலையத்துக்கு செல்லும்வழியில் இடைமறிக்கப்ட்ட சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது சடலத்தில் எட்டு கைத்துப்பாக்கி ரவைகள் சல்லடை பேடப்பட்டிருந்ததாக வைத்தியசாலைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய இவரை இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே சுட்டுக்கொன்றுவிட்டு, இப் பழியை புலிகள் மீது சுமத்த தற்போது எத்தணிக்கின்ற அதேவேளை இதனை ஒரு காரணமாகக் காட்டி, யாழில் சோதனைச் சாவடிகளை மீண்டும் உருவாக்கவும், இராணுவம் நிலைகொள்ளவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்த முயல்கிறார்கள் பொய்யாக.

இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் அனைவருக்கும் இது ஒரு நல்ல பாடமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Comments