இத்தாலி ஈழத்தமிழர் மக்கள் அவையின் அங்குரார்ப்பண வைபவம்

எமிலியா நகரில் கடந்த 01.05.2010 இல் இத்தாலி ஈழத்தமிழர் மக்கள்

அவையின் அங்குரார்ப்பண வைபவம் இடம் பெற்றது.

இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய தமிழர் ஒன்றிய தலைவரும்,
உலகத்தமிழர் பேரவையின் உப தலைவருமான திரு.நடராஜா கிருபானந்தன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந் நிகழ்வானது சிறப்பு விருந்தினரால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு,
அகவணக்கத்துடன் ஆரம்பமானது, தொடர்ந்து தலைமை உரை இத்தாலி
ஈழத்தமிழர் தேர்தல் குழத்தலைவரால் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

ஈழத்தமிழ் மக்களின் அபிலாஷையான வட்டுக்கோட்டை தீர்மானத்தின்
அடிப்படையில் இத்தாலிய நாட்டில் ஜனநாயக முறையில், இத்தாலிய சட்டதிட்டங்களுக்கு அமைவாக, அரசியல் ரீதியான பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஊடாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் பலமான அமைப்பாக இத்தாலிய ஈழத்தமிழர் மக்கள் அவை அமையப் பெறும்.


இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் ஆற்றிய உரையில் இத்தாலியில் வெற்றிகரமாக தேர்தல்களை நடாத்தி முடித்தமைக்காக பாராட்டு தெரிவித்ததுடன் மக்கள் அவையின் அவசியம் பற்றியும், மக்கள் அவையின் ஊடாக செயற்படுத்தப்படவுள்ள திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

அடுத்து முக்கிய நிகழ்வாக இத்தாலி ஈழத்தமிழர் மக்கள் அவையின் நிறைவேற்று குழு தெரிவு செய்யப்பட்டது, விபரங்கள் பின்வருமாறு.
தலைவர் :- செபஸ்தியாம்பிள்ளை டன்ஸ்ரன் ராஜ்குமார்
உப தலைவர் :- பஞ்சாட்சரம் ஜசஸ்வின் (லவன்)
செயலாளர் :- நாகேந்திரம் சிந்துஜா
உப செயலாளர் :- சாம்பசிவம் ஜெயதாஸ்
பொருளாளர் :- அருளானந்தம் ஆனந்தராஜா
பேச்சாளர்கள் :- வேலுப்பிள்ளை செந்தில்நாதன் (தமிழ்)
தவராஜசிங்கம் தக்ஷாயினி (இத்தாலி)
தொடர்ந்து எதிர்வரும் மூன்று வருடங்களுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாக
மக்கள் அவை பிரதிநிதிகளால் ஆராயப்பட்டு வரையறுக்கப்பட்டது, இறுதியாக
நன்றியுரையுடன், உறுதி மொழி எடுக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவடைந்தது.

Comments