ஈழத்தமிழ் மக்களின் தொப்புள்கொடி உறவுகளான தமிழ்நாடு உறவுகள் இன்று முதல் அமிதாப் பச்சனின் வீட்டின் முன்பாக போராட்டம் மேற்கொண்டு வருவருவதுடன், சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கை செய்துள்ளனர்.
சீமானின் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த உறவுகளே முன்பையிலுள்ள அமிதாப்பின் வீட்டின் முன்பாக இன்று மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 50 பேர் வரையில் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன.
ஜூன் 3ஆம் நாள் முதல் 5ஆம் நதள்வரை கொழும்பில் நடைபெறவுள்ள இந்திய பன்னாட்டு திரைப்பட விழாவில் பங்கேற்கக்கூடாது எனக் கோரிக்கை விடுத்து கடந்த ஏப்ரல் 25ஆம் நாள் இவர்கள் போராட்டம் மேற்கொண்ட போதிலும், அமிதாப் இந்த விழாவில் கலந்துகொள்வார் என சிறீலங்காவின் அமைச்சர் யாப்பா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமிதான் அவரது மகன், மற்றும் மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கொழும்பு செல்லக்கூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் இயக்கத்தின் ஏற்பாட்டில் மீண்டும் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடரும் என சீமான் அறிவித்துள்ளார்.

Comments
http://ulavan.net/?p=2228