தள்ளாடும் வயதிலும் இந்தியாவிடம் மண்டியிடாத வீரத் தமிழ்தாய் (படங்கள் இணைப்பு)

விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு.பிரபாகரனின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் அவர்கள் நேற்று யாழப்பாணம் சென்றுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உதவியுடன் ஏ9 வீதியுடாக நேற்று மாலை அழைத்துவரப்பட்ட இவர், வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறியப்படுகிறது.

சிகிச்சைக்குச் சென்ற பார்வதி அம்மளை ஈவு இரக்கம் இன்றி திருப்பி அனுப்பிய இந்திய, மற்றும் தமிழ்நாடு அரசுகள், தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற பல நிபந்தனைகளை விதித்துள்ளது. ஏதோ பார்வதி அம்மாள் அங்கு அரசியல் நடத்த வருவது போல இந்திய அரசு, தனது சாக்கடை அரசியல், நயவஞ்சகத்தை வெளிக்காட்டியுள்ளது. இதேவேளை அவர் இந்திய அரசு வழங்கிய நிபந்தனைகளை நிராகரித்துவிட்டு அவர் தனது சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு வந்திருக்கிறார். இது கருணாநிதி மற்றும் இந்திய மத்திய அரசுக்கு ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறது. நான் உங்கள் கால்களில் மண்டியிடமாட்டோம் என்பதே அச் செய்தியாகும். கேவலமான பிழைப்புவாத குடும்ப அரசியல் நடாத்திவரும் கருணாநிதிக்கு இது எங்கே புரியப்போகிறது.

நேற்றையதினம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உதவியுடன் கொழும்பில் இருந்து அம்புலன்ஸ மூலம் அவர் அழைத்து வரப்பட்டு வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிர்வின் யாழ் நிருபர் தெரிவித்தார். இது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடகவியாலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், பத்து வருடங்களுக்கு மேலாக பார்வதியம்மா பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றார் என்றும், இந்த நிலையில் எவ்வித மனிதாபிமானமற்று இந்திய அரசு சிகிச்சை பெறுவதற்கு கடும் நிபந்தனைகளை விதித்திருக்கிறது.

இந்த நிபந்தனைகளை பார்வதி அம்மாவும் அவருடை உறவினர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.இதே வேளை கொழும்பில் இருந்து சிகிச்சை பெறுவதற்கு பாதுகாப்பு காரணங்களும் பொருளாதார காரணங்களும் இடையூறாக இருக்கின்றது. இதனால் பார்வதி அம்மா தனது சொந்த ஊரில் வந்து சிகிச்சை பெற முடிவெடுத்தார். மலேசியாவில் இருந்து கொழும்புக்கு திரும்பிய பார்வதியம்மாவின் வருகை தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய புலனாய்வாளர்கள் அவதானித்து விட்டு பார்வதியம்மாவின் வருகைக்கான காரணம் என்ன? மே18 நெருங்குகையில் அவர் வந்தது ஏன்? என்று என்னை தொலைபேசி மூலம் வினாவினார்கள். கொழும்பில் இருந்து யாழப்பாணம் வரும்போது எல்லா சோதனைச்சாவடிகளிலும் நாம் வருவது உறுதிப்படுத்தப்பட்டு மேலிடத்துக்கு தகவல் அனுப்பட்டது.

தன்னுடைய பராமரிப்பில் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பார்வதி அம்மாவின் உடல்நிலை விசேடமாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்றும் அவர் மேலும் தெரிவத்தார்.

"""தேசத்தின் தாய்""" அன்னை பார்வதி அம்மாள் கொடிய நோயில் இருந்து மீண்டெழவேண்டும், புத்துயிர்பெற்று நீண்ட நாழ் வாழவேண்டும் என அதிர்வு இணையம் பிராத்திக்கிறது.









Comments