தாயகத்தில் உறவுகளைத் தேடும் மக்களும் புலம்பெயர் தமிழர் போராட்டமும்

சிறீலங்காப்படையினரின் கொடிய போரின் காரணமாக காணாமல் போனோரை கண்டறியும் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று வவுனியா பேருந்து நிலையத்துக்கு முன்னால் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

காணாமல் போனோர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என்று சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமது பிள்ளைகளைக் கண்டுபிடித்து தருமாறு சிறீலங்கா அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தழிழ்தேசிய விடுதலை முன்னணி, மற்றும் இடதுசாரி முன்னணி ஆகியவற்றின் எற்றபாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறீலங்கா அரசுக்கு எதிராக,

காணாமல் போனது எங்கள் மகன்

காணமல்போனது எங்கள் மகள்

காணாமல் போனது எவ்வாறு?

கடத்தியவர் யார்யாரோ?

வெள்ளை வானும் அரசு தான் கடத்தியதும் அரசுதான் காணமல்போனது அரசாலே கடத்திச் செல்வதும் அரசாலே

அவர்களைத்தேடி நாம் வருவோம் எங்கென்றாலும் நாம் வருவோம்

அவர்கள் எங்கே சொல்லிவிடு

அழித்துவிட்டாயோ சொல்லிவிடு

வடக்கில் உள்ள வதைகூடம் கிட்லர் கட்டிய வதைகூடம் தழிழனை கொல்லும் வதைகூடம் வேண்டாம் இந்த வதைகூடம்

போன்றபல கொசங்களை எழுப்பிய வாறு ஆர்ப்பாட்த்தில் கலந்து கொண்டனர். வெய்யிலையும் பொருட்படுத்தாது கண்ணீர் மல்க மக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்ஆர்ப்பாட்டத்தின் முடியில் தழிழ்தேசிய விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் உரை நிகழ்த்தினார்.

சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக நாளுக்கு நாள் அதிர்ச்சித்தகவல்கள் வெளியாவதையடுத்து தமிழ் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ள இவ்வேளையில், சிறீலங்காவில் மேற்கொள்ளும் இப்படியான போராட்டங்கள் எந்தவகையான பயனையும் தரப்போவதில்லையென்றும், புலம்பெயர்ந்த மக்கள் ஒன்றுபட்டு சர்வதேசத்தின் மனக்கதவுகளை தட்டி எமக்கான போராட்டத்தை செய்யுமாறு வவுனியாவில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.

உறவை தேடி இந்த சிறுவன்...

Comments