நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமானது. மதியம் சுமார் 11.30 மணியளவில் நடந்த அமர்வுகளை பிரித்தானிய ராணி விக்டோரியா ஆரம்பித்துவைத்தார். இலங்கை நிலைகுறித்து அவர் பேசுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அது குறித்து எதுவும் பேசவில்லை. இருப்பினும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நிழல் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலபான் அவர்கள் இலங்கை அரசும், புலிகளும் போர்க்குற்றத்திலும், மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
போரில் ஈடுபட்ட பல விடுதலைப் புலிகள் இறந்து விட்டனர், இருப்பினும் குற்றமிழைத்த பல இலங்கை இராணுவத்தினர் இன்னும் உயிரோடு இருப்பதால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் பேசிய அவர் இலங்கை நிலைகுறித்து சர்வதேச அனர்த்த சபை குறிப்பிட்ட விடயங்களையும், புலத்தில் வாழும் இலங்கை பத்திரிகையாளர்கள் குறித்த சில விபரங்களையும் அங்கு தெரிவித்திருந்தார்.

Comments