பலமடையும் சிங்களப் பொருண்மியம்! புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களால் தடுக்க முடியுமா?

கடந்த ஓராண்டு காலப்பகுதியில் சிறீலங்காவின் பொருண்மிய வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பன்னாட்டு நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் பன்னாட்டு நாணய நிதியம், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் சிறீலங்காவிற்கு அனுப்பப்படும் பணமும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுமே அதன் பொருண்மியம் வளர்ச்சி நிலையை நோக்கி நகர்வதற்கான காரணிகளாக அமைந்திருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது.

அண்மைக் காலங்களில் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக செல்லும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, புலம்பெயர் தேசங்களில் இருந்து பெரும் தொகையில் இலங்கைக்கு பணமும் அனுப்பப்பட்டு வருகின்றது.

தமிழீழ மக்களுக்கு எதிராக இனவழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிங்கள தேசத்தின் பொருண்மியத்தைப் பலப்படுத்தும் வகையில் இவ்வாறான செயற்பாடுகள் அமைந்திருப்பதையே பன்னாட்டு நாணய நிதியத்தின் அறிக்கை சுட்டிக் காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

-அதியமான்-

Comments