இன்று பிற்பகல் 5.00 மணியளவில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் மேற்படி நிகழ்வு இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் கட்சி அலுவலகத்திற்குச் சென்ற அப்பகுதி இராணுவ அதிகாரி இன்றய தினம் நடாத்த ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகளை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுச் சென்றிருந்தார்.
அத்துடன் காலை 9.30 மணி தொடக்கம் அலுவலக வாயில் பகுதியில் இராணுத்தினர் நிறுத்தப்பட்டதுடன் அலுவலகத்தினுள் எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் பிற்பகல் நிகழ்வில் கலந்து கொள்ளுவதற்காக அங்கு வந்திருந்த பொது மக்கள் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாதவாறு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந் நிலையில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் கட்சி உறுப்பினர்களில் 6 பேர் மட்டும் சென்று பிரார்த்தனையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கான அஞ்சலி நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் ஆறுபேர் கலந்து கொண்டனர்.
அவர்களது விபரம் விபரம் வருமாறு,
திரு.எஸ்.நக்கீரன்
டாக்டர் திருலோகமூர்த்தி
திரு.வி.மணிவண்ணன்
திரு.கிருபா
ஆகியோருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான
திரு.செல்வராசா .கஜேந்திரன்
திருமதி.பத்மினி சிதம்பரநாதன்
ஆகியோரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Comments