புலிகளின் உறுப்பினர் அடித்துக்கொலை: நேரடிச் சாட்சியாக புகைப்படங்கள்

புலிகள் உறுப்பினர் ஒருவரை இலங்கை விமானப்படையினர் உறுப்பினர்கள் அடித்தே கொண்றதாக தற்போது புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளது. இப் புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது, அல்லது எங்கே எடுக்கப்பட்டது என்ற தகவல்கள் சரியாகத் தெரியவில்லை என்றாலும், உயிரோடு இருக்கும் புலிகளின் உறுப்பினர் ஒருவர் பின்னர் கொலைசெய்யப்பட்டு பிணமாக இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

தென்னை மரத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கையிலும் நெற்றியிலும் காயங்களுடன் காணப்படும் இந்த நபர் அருகில் விடுதலைப் புலிகளின் கொடி காணப்படுவதோடு, அவர் சித்திரவதைக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.


இது குறித்து மனித உரிமைக்கழகங்களிடமும், ஜ.நாடுகளிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.









Comments