போராட்ட வரலாற்றின் அழியாத சுவடுகள்

ஊடக நண்பன், எழுத்துச் சமராடி, ஊடகப் போராளி ‘தராகி'சிவராம், மரணித்த நாள் ஏப்ரல் 29. உலகின் மீதான நம்பிக்கையும், ஊடகப்பரப்பின் உயர் விழுமியங்களும் மரணித்தநாள் அது. ஆண்டுகள் பல கடந்தாலும், கணப்பொழுதில், நெஞ்சைக் கனமாக்கிவிடும் அவர்நினைவு.வாழ்க்கையின் வசீகரமான விசாரணைகளை, உலகின் இராஜதந்திர மறைப்புக்களை, அவர் எவ்வாறு கற்றுக் கொண்டார் என்பதனை, இப்போது நாம் தெரிந்து கொள்கிறோம்.

‘காற்றையும் மீறி வலியது என் சொல். நெருப்பையும் மிஞ்சிச்சுடும் என் விழிகள்'

என்றுரைத்தான், ‘காற்றுவெளிக்' கிராமக்கவிஞன் சு.வில்வரெத்தினம். வலியது எழுத்து, காலத்துயரங்கள், நினைவுகள் மீது படிந்து, போலி மதிப்பீடுகளை,பொளிணிமையின் பூச்சுக்களை மறைத்தாலும்,எழுத்துப் பதிவுகள், உறங்காமல் விழித்திருக்கும். எட்டாத சிகரங்களைச் சற்று குனிந்துபார்க்க வைத்தது சிவராமின் எழுத்து. ஆங்கிலக் கட்டுரைகளில் ஆரம்பமாகி, வீரகேசரி வரை, அவர் எழுதிய அரசியல் விமர்சனங்கள் யாவும், மானசீக உரையாடல் பலவற்றை எம்முள் நிகழ்த்தியிருந்தது. மாட்டீன் விற்றிகளுக்கும், அரசியல் பாடம் நடாத்தியுள்ளார் சிவராம்.

இந்தியாவைச் சுற்றி, சீனா கோர்க்கும்முத்துமாலை வியூகத்தின் தந்திரங்களை,தமிழ் ஊடகப் பரப்பில், முதன்முறையாக உலாவ விட்டவரே எமது தராகி. அவர் வாழ்ந்த காலத்து அரசியல் நிலவரங்களை துல்லியமாக ஆராளிணிந்து, பல எதிர்வு கூறல்களை முன்வைத்தார். சர்வதேச வல்லரசாளர்களின் ஆடுகளமையமாக இலங்கை மாறி வருவதனை,அவர் எழுதிய பெரும்பாலான கட்டுரைகளில் காணலாம்.

2005ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில்,அமெரிக்காவின் இராஜதந்திர செல்வாக்கு இலங்கையில் அதிகமாகக் காணப்பட்டதால்,அது குறித்த அரசியல் விமர்சனங்கள், அவரது எழுத்துக்களில் அதிகமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கை மீது இந்தியாவும், ரஷ்யாவும்பிரயோகிக்க முற்படும் ஆதிக்கத்தை, எவ்வாறுஅமெரிக்கா தடுக்க முற்படுகிறது என்கிறஆழமான புரிதல், அவருக்கு இருந்தது. இத்தகைய பிராந்திய நலன் சார்ந்த,வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டிகளை எதிர்கொள்ளும், தாயக விடுதலைக்காகப் போராடும் ஈழத் தமிழினம், தமது பூர்வீக மண்ணின் அரசியல் இருப்பினை தக்க வைப்பதில், மிக அவதானமான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டு மென்பதனையே சிவராமின்எழுத்துக்கள் எச்சரிக்கின்றன.

பாரசீக குடாவிற்கும், கிழக்கு ஆசியாவிற்கும், மையப்புள்ளியாகவிருக்கும் இலங்கை என்கிற நாட்டின் கேந்திர முக்கியத்துவத்தில்,அமெரிக்கா கொண்டிருக்கும் அதீத ஈடுபாட்டினை, டியாகோகாசியா - திருமலை தளம்குறித்த ஒப்பீட்டாளிணிவுகளின் ஊடாக, அவர்வெளிப்படுத்த முயன்றுள்ளார். இவைதவிர, பிலிப்பைன்சிலுள்ள இராணுவத் தளத்தோடு, தென் சீனக் கடல் பிரதேசத்திற்கு அப்பால், ஒரு பெரும் தளமொன்றினை அமைக்க அமெரிக்கா முற்படுவதாகவலியுறுத்தும் சிவராம், இப்போது உயிரோடு இருந்திருந்தால், அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்துவதற்கு சீனா மேற்கொள்ளும் நகர்வுகளையும் எழுதியிருப்பார்.

தொடர்ச்சியாக, பூகோள அரசியல் மாற்றங்களை அவதானித்து, ஆளிணிவு செளிணிபவரின் இழப்பு, கனதியானதுதான். கேந்திர முக்கியத்துவமிக்க, மையத் தரிப்பிடத்தில் நிலை கொண்டுள்ள நாட்டொன்றின் மீது, தமது முழுமையான ஆதிக்கம் வரும்வரை, அங்கு பதட்ட நிலைமையும், வன்முறை அரசியலையும், ஏகாதிபத்தியங்கள் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் என்பதனைதராகி நம்புகிறார். கொங்கோ, ஈராக், ஆப்கானிஸ்தான்போன்ற நாடுகளில், மதப்பிரிவுகளையும், இனக்குழுமப் பிளவுகளையும், தமக்குச்சாதகமாக, இந்த மேற்குலக சக்திகள் எவ்வாறு கையாள்கிறது என்பதனையும் ஒப்பீட்டாளிணிவிற்கு உட்படுத்துகிறார்.

அதேபோன்று, பெரும் சக்திகளின் காலடியில், எமது நியாயமான உரிமைப் போராட்டம், நசிந்துவிடக்கூடாது என்கிற ஆதங்கமும்,அவதானிப்பும் இவரது எழுத்துக்களின் அடிப்படையாக இருப்பதைக் காணலாம். ஈழவிடுதலைப் போராட்டத்தில், இந்தியத்தலையீடு குறித்த சிவராமின் பார்வை, சரியானது என்பதை தற்போதைய நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இலங்கையில் கால்பதிப்பதற்கும், தமது பிடிக்குள் அதனைக்கொண்டு வருவதற்கும்,ஈழப் போராட்டத்தையரு அழுத்தம் கொடுக்கும் கருவியாக, இந்தியா பயன்படுத்தியது என்பதனை விளக்கி, இலங்கை - இந்தியஒப்பந்தத்தினை அதற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டுகிறார்.

பிரித்தானியர் நிர்மாணித்த எண்ணெளிணிசேமிப்பு குதங்கள், புத்தளத்திலுள்ள ‘அமெரிக்காவின் குரல்' (Voice of America) போன்றவற்றால், இந்தியா - ரஷ்யாவின் இந்து சமுத்திர பிராந்திய ஆதிக்கத்திற்கு ஆபத்து உருவாகுமென்று குறிப்பிடும் சிவராம், அமெரிக்காவின் காலூன்றலை தடுப்பதற்காகவே, பிரிவினை கோரிய தமிழ் போராளிகளை இந்தியா அரவணைத்ததாக உறுதிபடக் கூறுகின்றார். ஈழப்போராட்ட இயக்கங்களுக்கு, இந்தியாஆயுதப் பயிற்சி அளித்தவேளையில், அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளை மையமானது, இலங்கையின் அதிரடிப்படையினருக்கு பயிற்சி வழங்குவதில் முனைப்புடன் ஈடுபட்டது.

இலங்கையில், இந்தியாவும் அமெரிக்காவும் நிகழ்த்திய பனிப்போரின் எதிர்விளைவாக உருவாகியதே, மேற்குலகின் அனுசரணையோடு உருவாக்கப்பட்ட ரணில் - தேசியத்தலைவர் சமாதான ஒப்பந்தமாகும். 87 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை -இந்திய ஒப்பந்தமும், 2002இல் உருவானரணில் - பிரபா ஒப்பந்தமும், இலங்கையில்,இந்தியா மற்றும் அமெரிக்காவின் வல்லாதிக்கப்பிடி, இடம் மாறிய நிகழ்வினை வெளிப்படுத்துவதாக மாமனிதர் சிவராம் புரிந்துகொள்கிறார். இவ்விரு ஒப்பந்தங்களின் சதிவலை வியூகம் குறித்து மிகுந்த அதிருப்தி, அவருடைய கட்டுரைகளில் தெளிவாக வெளிப்படுகிறது.

ஆனாலும் தராகியின் மறைவிற்குப் பின்னால் நிகழும், அரசியல் மாற்றங்களில், பூதாகரமான வளர்ந்துவரும் சீனாவின் பங்களிப்பு உள்வாங்கப்படுகிறது. சிங்களத்தின் ஒருதலைப்பட்ச சமாதான ஒப்பந்த முறிவினால், அமெரிக்கப்பிடி தளர்ந்து, இந்திய சீன பிடிமானம் அதிகரிப்பதைக்காணலாம். ஆகவே இப்புதிய உலக ஒழுங்கினால் ஏற்படும் தாக்கங்கள், அணி மாற்றங்கள் குறித்தஆழமான புரிதலை, ஆளிணிவு செளிணியக்கூடிய நுண்ணரசியல் புரிந்த சிவராமை, தமிழ்பேசும்மக்கள் இழந்திருப்பது ஈடுசெளிணியப்பட முடியாத விடயமே.

ஆதலால் ஆயுதப்போரிலும், ஊடகச்சமரில் தன்னை இணைத்துக்கொண்ட அந்த ஈரூடகப் போராளியை என்றும் நினைவிற்கொள்வோம். மாமனிதர் தராகி, சிவராம் விட்டுச் சென்ற அந்த ஊடகப் பணியை, முன்னெடுத்துச்செல்வோம். தமிழின விடுதலைப் போராட்ட வரலாற்றில், மறக்க முடியாத பல பக்கங்களை அவர் எழுதிச் சென்றுவிட்டார். எவ்விடர் வரினும், போராட்ட உணர்வினைஇழக்கக் கூடாது என்கிற சிவராமின் சிந்தனையை மறவோம்.

- இதயசந்திரன்

Comments