றேமூண் வாசிங்கரனுடன் டென்மார்க் தமிழர் பேரவையின் அங்கத்தவர்களான சுகேந்தினி நிமலநாதன் 2626 வாக்குகளுடனும் மகேஸ்வரன் பொன்னம்பலம் 2550 வாக்குகள் பெற்றும் டென்மார்க் தமிழர்களின் பிரதிநிதிகளாக நாடுகடந்த தமிழீழ அரசில் அங்கம்வகிக்கவுள்ளனர்.
மருத்துவராக கடமையாற்றும் டென்மார்க் தமிழர் பேரவையின் பேச்சாளர் றெமூண் வாசிங்ரன் கடந்த சனவரி மாதம் நடைபெற்ற பேரவையின் நிர்வாகத்திற்கான தேர்தலிலும் அதிகப்படியான வாக்குகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டென்மார்கில் கடந்த ஞாயிற்றுகிழமை 31 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் 3102 ஈழத்தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.
தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்ற குறிக்கோளுடன் அமைக்கப்பட்டு செயலாற்றிவரும் டென்மார்க் தமிழர் பேரவை கடந்த பெப்ரவரி மாதம் 28ம் நாள் தமிழீழ தனியரசை வலியுறுத்தி நடாத்திய வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் 4147 ஈழத்தமிழ் மக்கள் பங்குபற்றி 98;.2 வீதத்தினர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
1977ம் ஆண்டு தமிழீழ மக்கள் வழங்கியதும் கடந்த பெப்ரவரி 28ம் நாள் டென்மார்க் தமிழீழ மக்கள் மீள் வழங்கியதுமான ஆணையான தமிழீழ தாயகமே தமிழீழ மக்களுக்கான ஒரேயொரு தீர்வு என்பதை தெரிவுசெய்ப்பட்ட பிரதிநிதிகள் அணைத்துலக சமுகத்தின் மத்தியில் வலியுறுத்தி செயல்படவேண்டும் எனகோரி அவர்களின் வெற்றிக்கு வாழ்த்துகின்றோம்.
முக்கிய குறிப்பு: தமிழீழ மக்கள் அவைகளின் அனைத்துலக செயலகத்தால் போர் குற்ற நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மே 18ம் நாள் டென்மார்க் தமிழர் பேரவை தலைநகர் கொப்பன்காகனில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியை நடாத்த ஒழுங்குசெய்துள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.
Med Venlig Hilsen/With Kind Regards
Dansk Tamilsk Forum / Denmark Tamils Forum
CVR-nr.32610447
Telefon: +45 52173671
Comments