சிங்கள மயப்படுத்தலுக்கு துணைபோகும் ‘யாப்ப பட்டுணய்’ கல்விமான்கள்???

யாழ்ப்பாணத்திற்கு ‘யாப்ப பட்டுணய்’ என்று சிங்களப் பெயர்சூட்டி, ‘யாப்ப பட்டுணய் தாகம் அமாவி’ என்ற குறியீட்டுப் பெயருடன் யாழ் குடாநாட்டில் சிங்கள அரசும் அதன் ஆயுதப் படைகளும் முன்னெடுத்த வெசாக் களியாட்டங்களுக்கு, யாழ் குடாநாட்டின் கல்விமான்கள் சிலர் துணைபோயிருப்பதை வெளிப்படுத்தும் நிழற்படங்கள் வெளியாகியுள்ளன.



முற்று முழுதாக சிங்கள – பௌத்த மேலாதிக்கத்தை குறியீடு செய்யும் வெசாக் வலயம், யாழ் நகரப் பகுதியில் சிங்களப் படைகளால் நிறுவப்பட்டதோடு, இதனை யாழ் பல்கலைக் கழக துணை வேந்தர் பேராசிரியர் ந.சண்முகலிங்கம், யாழ் மாவட்ட அரசாங்க செயலர் கே.கணேஷ் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.



இது தொடர்பான நிழற்படங்கள் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments