முள்ளிவாய்க்காலில் சிங்களம் மூட்டிய தீ தென்னிலங்கையில் வெள்ளமாகப் பெருக்கெடுப்பு!

தென்னிலங்கையில் தொடர்ச்சியாகப் பொழிந்து வரும் கன மழையின் விளைவாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக் காரணமாக பல இடங்களில் சிங்களவர்கள் இடப்பெயர்வுக்கு ஆளாகியிருக்கின்றனர். கொழும்பு, கம்பஹா உட்பட தென்னிலங்கையின் பல்வேறு இடங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பல சிங்களக் குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதோடு, சில இடங்களில் உயிரிழப்புக்களும் சம்பவித்துள்ளன.

பல இடங்களில் தமது வீடுகளில் தங்கியிருக்க முடியாத நிலையில் உயர்வான பகுதிகளில் காணப்படும் பௌத்த விகாரைகளில் சிங்களவர்கள் அடைக்கலம் புகுந்திருப்பதாக தென்னிலங்கைத் தகவல்கள் கூறுகின்றன.

இதேபோன்று வெள்ளப்பெருக்கு அபாயம் காரணமாக சிங்கள தேசத்தின் நாடாளுமன்றமும் முடங்கும் நிலை தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களைக் கொன்றுகுவித்து நரபலி வேட்டையாடியதன் ஓராண்டை வெற்றிவிழாவாகக் கொண்டாடுவதற்கு சிங்களம் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், தமிழீழ மக்களின் கண்ணீர் வெள்ளம் சிங்கள தேசத்தை சுட்டெரித்தமைக்கு ஒப்பாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாக தமிழீழ மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.





















Comments