![https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqeYd29pVCIAUjreD9rbxeTUjODtW9xG25acBLflRA-Kfrsl7xILlfPAukyXiQOkVx1tXhZAprLyP-vJLNQWh_7lWGrMhHClOqgjED_L48JCdP7Tw1QkS2DL4OIYJbUfrcJ4iAeemxipI/s1600/newspic1.jpg](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqeYd29pVCIAUjreD9rbxeTUjODtW9xG25acBLflRA-Kfrsl7xILlfPAukyXiQOkVx1tXhZAprLyP-vJLNQWh_7lWGrMhHClOqgjED_L48JCdP7Tw1QkS2DL4OIYJbUfrcJ4iAeemxipI/s1600/newspic1.jpg)
![http://www.spur.asn.au/LTTE_Training_in_January_2006_Mark0102_11%5B1%5D.jpg](http://www.spur.asn.au/LTTE_Training_in_January_2006_Mark0102_11%5B1%5D.jpg)
அவர்களுக்குள் இருந்த விடுதலை உணர்வு ஒடுங்கவேயில்லை. போர் ஆளுமையின் அடையாளங்கள், ஆனந்தபுரச்சமரில் பதியப்பட்டன. கிளியின் கழுத்தைப் பார்த்து, அர்ச்சுனன் குறிவைத்த பண்டைய போர்க்காலக்கதையாடல்கள் இங்கு நிகழவில்லை.
செயற்கைக் கோள் கண்கள் அகலத்திறந்திருக்க, சீனத்து எறிகணைகள் மழைபோல் பொழிந்தனவாம். மே 18, காலை 7.30 மணிவரை, ஓயாமல் சன்னதம் கொண்டு ஆடியது சிங்களத்தின் துப்பாக்கிகள். மரண ஓலங்கள், சிதறியோடிய மக்கள் மீது விழுந்து வெடித்துச் சிதறிய எறிகணைகள், பிணக்காடாளிணி காட்சியளித்தது நந்திக்கடலை அரவணைத்து நின்ற மண் மேடுகள்.
விழுப்புண்ணடைந்த மறவர்களையும், குற்றுயிராளிணி கிடந்த பொதுசனத்தையும் சூழ்ந்து நின்று, பாதுகாப்பு அரண் அமைத்தார்கள். கந்தகத்தை சுமந்த ‘கறுப்பு' மனிதர்கள். சிங்களத்தின் பாதுகாப்பு வலயங்கள், படுகொலைக் களமாக மாறியதை, உலகம்வேடிக்கை பார்த்தது. புதுமாத்தளன் உடைந்து, ஒருபகுதி,சிங்கள தேச வெறிப்படையின் ஆக்கிரமிப்பில் வீழ்ந்து விட, அகப்படாதோர், கைகளில் ஊசி, நூலுடன் வெள்ள முள்ளிவாக்கால் நோக்கி விரைந்தனர்.
பதுங்கு குழி வெட்ட, மண்வெட்டிகளைகாவிச் செல்லமுடியாததொரு நிலை. உணவு விநியோகத் தடையால், உடல் அளவில்சோர்வுற்ற மக்கள், பெற்ற குழந்தைகளைத்தவிர தம்மோடு எதனையும் கொண்டுசெல்லவில்லை. காதுள்ள ஊசிகளும், கனமில்லா நூல்களும், துண்டுச் சேலைக்குள் நிரப்பப்பட்டமண்ணை, பாதுகாப்பு காப்புக் கவசங்களாக்கின.நெருப்பாற்றில் நீந்தினர் மக்களும் மறவர்களும். ஐ.நா சபையில் சந்திப்புக்கள், சர்வதேசமனித உரிமைச் சபைகள் கண்டனம் தெரிவித்து தமது கடமையை முடித்துக்கொண்டன.
சர்வதேச இராஜதந்திர கயிறிழுப்புக்கள், பலப்பரீட்சையில் ஈடுபட்டன. ஆயினும் பிராந்திய வல்லரசாளர்கள், சிங்களத்தைச்சுற்றி பாதுகாப்பு வலயம் அமைத்து, பக்கபலமாக நிலையெடுத்தனர்.நம்பியார்கஷீமீ, ஐ.நா.சபையின் தலைவாசலில் நந்தி போல் குந்தி, இன சங்காரத்தை தடுத்து நிறுத்தும் முயற்சிக்குத்தடுப்பரண் அமைத்தனர். எழுச்சி கொண்ட புலம்பெயர்ந்த ஈழத்தமிழினத்தின் குரல்தனை, உலகம் செவிமடுக்கவில்லை. இலங்கையில் காலூன்றியவர்களும்,அடி வைக்கத் தருணம் பார்த்து நின்றவர்களும், சொந்த நலன் கருதி, மனித உரிமைகளையும், நீதி நியாயங்களையும் ஒருபுறம்உட்காரவைத்து விட்டனர்.
பிராந்திய ஆதிக்கப் போட்டியில், இனஅழிவுகளுக்காகக் குரல்கொடுத்தால், அரசியல் நலனிற்கு ஆபத்து வந்து விடுமென்பதை இப்புனிதர்கள் நன்கறிவர். உடல் வருத்தும் உண்ணாநிலைப் போராட்டங்களோ, உயிர்ப்பூவை தீயில் சங்கமமாக்கும் தீவிர வெளிப்பாடுகளோ, இவர்களுள் அகநிலையான மாற்றத்தினை ஏற்படுத்தவில்லை. சர்வதேச அரங்கில், அரசியல் பலமற்றமக்கள் கூட்டத்தின் விடுதலைக் குரல்,உள்வாங்கப்படுவதில்லை என்கிறயதார்த்தம் அன்று உணரப்பட்டது.
இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்ட அம்மக்கள் மீது, சிங்களம் புரிந்த வதைகளை, போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கும், அதற்காக ஒரு ஆணைக்குழுவினை அமைப்பதற்கும் இந்த வல்லரசாளர்களால் முடியவில்லை. வெறும் அறிக்கைகளே, பாதிப்புற்ற மக்களை ஆசுவாசப்படுத்து மென எண்பகிறார்கள். புலம்பெயர் மக்களின் அடுத்தகட்டப்போராட்ட நகர்வுகளே, சிங்களத்தை இந்தசர்வதேச அரங்கிலிருந்து தனிமைப்படுத்தும். போர்க் குற்றங்களிலிருந்து, சிங்களப்பேரினவாத அரசு தப்பிச் செல்லாதவாறு,சரியான அரசியல் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும்.
எமது மூலோபாயக் கோட்பாட்டின் முதன்மைக் கருத்தான ‘தாயகம்' என்கிற பிறப்புரிமையைச் சிதைப்பதற்கு, சிங்களம் தனது சதி நகர்வுகளை மேற்கொள்ளப் போகிறது. சட்டத்தின் துணையோடு, சர்வசனவாக்கெடுப்பொன்றை கிழக்கில் நடாத்தி, தாயகத்தைப் பிரிப்பதற்கு சிங்களம் முயற்சிக்கிறது. அதேவேளை தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்கள் மீதும், தமது அடிவருடிகளைக்கொண்டு, அச்சுறுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
இதில் என்னைப்பற்றிய சேறடிப்புக்கள்‘புலிகள் இயக்கத்தின் இணையத்தளங்கள் போன்று செயற்படும்' சில மாயாவிகள் ஊடாக தீவிரமாக கட்டவிழ்த்து விடப்படுகின்றன. எழுத்தின் வலிமை பெரியது என்பதனை இந்த ஊடுருவிகள் இப்போதுதான் புரிந்துகொண்டுள்ளார்கள். மக்கள் எப்போதும் தெளிவாக உள்ளார்கள் என்பது குறித்து இவர்களுக்குப் புரியவில்லை. மறுபடியும் ஒரு மக்கள் எழுச்சி உருவாகி விடாமல் தடுப்பதற்காக, இவர்கள் ஆடும் சதியாட்டம், முறியடிக்கப்படுமென்பதை இனிவரும் நாட்கள் உணர்த்தும்.உள்ளிருந்தே கொல்லும் வியாதிதான்மிகவும் ஆபத்தானது. உறுதியும், நேர்மையும், விடுதலையின் மீது ஆழ்ந்த பற்றுறுதியைக்கொண்டவர்களை மக்கள் சரியாக இனங்கானுவார்கள்.
- இதயசந்திரன்
Comments