(YOUTUBE) யூட்டியூப்பிலிருந்து MIA இன் வீடியோ நீக்கப்பட்டுள்ளது

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட உலகப் புகழ் பெற்ற பாடகியான எம்.ஐ.ஏ (M.I.A.) வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோ ஆல்பமான 'போர்ன் ஃபிரீ' ('Born Free') என்பதை யூட்டியூப் (YouTube) தளமானது நீக்கியுள்ளது.

இந்தப் புதிய வீடியோவை எம்.ஐ.ஏ இம்மாதத்தில்தான் தனது வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். ஒன்பது நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் குறித்த வகை மக்களுக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

மேற்கத்தைய சமூகத்திலும் இவ்வாறான பாகுபாடுகளால் மக்கள் துன்பப்படுகிறார்கள் என்ற கருத்தை எம்.ஐ.ஏ நீண்ட நாட்களாகக் கொண்டுள்ளார்.

அதை அவர் தனது ஆல்பத்திலும் வெளிக்காட்டியதால் அது உடனும் பெருமளவு சர்ச்சைகளைக் கிளப்பியதை அடுத்து, அந்த வீடியோவை யூட்டியூப் தனது இணையத்திலிருந்து நீக்கியுள்ளது.

இதேவேளை சில நாடுகளில் இந்த வீடியோவைப் பார்ப்பதற்கு வயது வரம்பு இடப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து யூட்டியூப் தளத்தின் பேச்சாளரைக் கேட்டபோது, தனிப்பட்ட ஒரு நிகழ்வு தொடர்பாக தாம் கருத்துக் கூற முடியாது என்று தெரிவித்ததோடு, பெருந்தன்மையான இந்த வன்முறைகளைக் காண்பிக்க தமது இணையம் மறுத்துள்ளதையும் உறுதிப்படுத்தினார். யூட்டியூப்பில் ஆபாசப் படங்கள் மற்றும் வக்கிரச் சம்பவங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்று கூறும் அவர்கள், இவ்வீடியோ 18 வயதுக்குக் குறைந்த பயனர்களுக்குப் பொருத்தமற்றது எனவும் தெரிவித்துள்ளனர்.

கண்டிப்பாக வயது வந்தவர்கள் மட்டும் 18+

Comments