3 மில்லியன் பவுன்ஸை தமிழர்கள் மாதம் தோறும் இலங்கை அரசுக்கு கொடுக்கிறார்கள்

பிரித்தானியாவில் இருந்து மட்டும் சுமார் 3 மில்லியன் ஸ்டேலிங் பவுன்களை தமிழ் மக்கள் இலங்கை அரச வங்கியூடாக அனுப்புகிறார்கள் என இலங்கை வங்கி அறிவித்துள்ளது. நம்பமுடிகிறதா? ஆம் இது உண்மை. போர் நடைபெற்ற காலத்திலும் அதற்கு முன்னதாகவும் சுமார் தமிழர்கள் பிரித்தானியாவில் இருந்து தமது உறவுகளுக்கு இலங்கை வங்கியூடாக அனுப்பும் தொகை சுமார் 50,000 ஸ்டேலிங் பவுன்களாக இருந்ததாக அதன் வங்கி மேலாளரான காமினி விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் புலிகள் யுத்தரீதியாக வெற்றிகொள்ளப்பட்ட பின்னரே தமது வங்கியின் பணப்புழக்கம் மிக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதாவது பிரித்தானியாவில் வசிக்கும் சுமார் 3 லட்சம் தமிழர்கள் இலங்கையில் வசிக்கும் தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்பி வருகின்றனர். இதில் பலர் இலங்கை வங்கியைப் பயன்படுத்தி வருவது பெரும் ஆச்சரியத்தையும், மனவருத்தத்தையும் தருகிறது. இலங்கை வங்கியைப் பாவித்து தமிழர்கள் பணம் அனுப்புவதன் மூலம் மட்டும் தமது பிரித்தானிய வங்கியின் பணப்புழக்கம் சுமார் 3 மில்லியன் ஸ்டேலிங் பவுன்களை எட்டியுள்ளதாக மார் தட்டுகிறது சிங்களம். இதனால் இலங்கை வங்கிக்கு பெரும் அன்னியச் செலாவணி கிடைப்பது மட்டுமல்லாது, கமிஷனாக பெரும்தொகைப் பணமும் கிடைக்கிறது.

இதனை தமிழர்களாகிய நாமே செய்வது வெட்கக் கேடான செயலாகும். நாணிக் கூனிக் குறிகவைக்கும் செயலாகும். லண்டனில் பல தமிழ் பலசரக்கு கடைகள், நாணய மாற்றுக் கடைகள், மற்றும் நகைக்கடைகள் தமிழர்களால் நடாத்தப்பட்டு வரும் நிலையில் நாம் ஏன் சிங்கள அரச வங்கிகளிடம் சென்று எமது பணத்தை இலங்கைக்கு அனுப்பவேண்டும்? தமிழர்களால் தமிழனுக்காக நடாத்தப்படும் எவ்வளவோ வணிப நிலையங்கள் இங்கு குவிந்து கிடக்கின்ற நிலையில், நாம் ஏன் சிங்களவனை நாடிச் செல்லவேண்டும். தமிழர்களை நம்புவதை விடுத்து இன்வெறிகொண்ட சிங்களவனை நம்புவதா? அதோடு இந்த வணிக நிலையங்களைவிட சிங்கள இலங்கை வங்கி கொடுக்கும் பணப்பரிமாற்ற வீதம் குறைவு என்பதைக் கூட ஏன் எமது தமிழ் மக்கள் புரிந்து கொள்கிறார்களில்லை?

முள்ளிவாய்க்காலில் 40,000 தமிழர்களைக் கொன்ற ராஜபக்ஷ அரசு கடனாக வாங்கிய ஆயுதங்களுக்கு, தற்போது நீங்கள் பணம் சேர்த்துக் கொடுக்கிறீர்களா? இவ்வாறு இலங்கை அரச வங்கியூடாக நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு சதமும், இனக் கொலை புரிந்த ராஜபக்ஷ அரசுக்கு நீங்கள் உதவுவதற்குச் சமன். அங்கு கொல்லப்பட்ட மக்களின் ஆன்மா உங்களை ஒருபோதும் மன்னிக்காது. இவ்வாறான பிழைகளை நீங்கள் தெரிந்தோ அல்லது தெரியாமல் செய்தாலோ, இதனை உடனே நிறுத்துங்கள்!

தமிழர்கள் நடாத்தும் வாணிப நிலையங்களூடாக இலங்கைக்கு பணத்தை அனுப்புங்கள், இல்லை வேற்றின மக்கள் நடத்தும் நிறுவனங்களூடாக அனுப்புங்கள், ஏன் சிங்கள அரச வங்கிகளை நாம் நாடவேண்டும். இலங்கை அரசின் பொருட்களை நாம் நிராகரிக்கவேண்டும், இலங்கை செல்லும் போது இலங்கை அரசின் விமான சேவையை உபயோகிக்கவேண்டாம், இலங்கையில் உற்பத்தியாகும் ஆடைகளை புறக்கணிக்க வேண்டும், அவை ரத்தக் கறை படிந்த ஆடைகள் என நாமே சொல்லிவிட்டு, இப்போது இலங்கை அரசின் வங்கிகள் ஊடாகப் பணத்தை அனுப்பினால், எங்களை எள்ளி நகையாட மாட்டான சிங்களவன். நாமும் ஒரு மானமுள்ள தமிழன் தான்???

பிரித்தானியாவில் உள்ள சில வேற்றின மக்களே, இலங்கையில் உற்பத்திசெய்யும் ஆடைகளை, அங்கு நடந்த இனப்படுகொலை காரணமாக வாங்காமல் புறக்கணித்து வரும் நிலையில், தமிழர்களாகிய நாம் இப் பிழையைவிடலாம? சிந்தியுங்கள் தமிழர்களே ஒரு கணம்! இனியாவது ஒன்றுபடுவோம்!. தமிழர்கள் என்றுமே தமிழர்களால் நடாத்தப்படும் வாணிபங்களையே பலப்படுத்தவேண்டும், சிங்கள வாணிபர்களை அல்ல என்பதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும், இன்று முதல் இதனை ஒரு சபதமாக, எடுத்து திட சந்தர்ப்பம் பூண்டு நாம் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்...

தமிழால் ஒன்றுபடுவோம் !





comments : சசி கலா

அதிர்வுக்கு ஒரு சலீயூட், நல்ல தொடக்கம், சமீப காலமாக நல்ல ஒரு இணையமாக நீங்க மாறி இருக்கீங்க. தமிழ் கடைகளை தமிழரே பயன்படுத்தவேனும் என்டு அடிச்சு சொன்னதற்கும் நன்றி. உங்களை மாதிரி 4 ஊடகம் இருந்திருந்தா எப்பவோ ஈழம் கிடைச்சிருக்கும் !
---------------------------------------------
comments by:Nanda Canada

Its Nice article, and Tamils should think
---------------------------------------------
coments by: Sutha

Wow what an article. i like the way its written
---------------------------------------------
comments by: முகிலன்

காலத்தின் தேவை, அதிர்வின் சேவை, நல்ல தரமான கட்டுரை. தமிழர்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்திருப்பது நல்லது. முதலில் சிறிலங்கா அரசை நாம் பொருளாதாரரீதியாக நசுக்க வேண்டும்.
---------------------------------------------
comments by: Suthan

Well said , and its shocking news.First of all Tamils should limit the money only to the family and stop thinking about investing in the country until they allow Tamils to live with deginity in the home land.
Well done Athirvu to find out this info. Don't get the curse of those killed Tamils by sending money to Sri Lanka!
---------------------------------------------
comments by: Nilavan

verry good...hary on
---------------------------------------------
comments by: Ravis Kumar

அதிர்வுக்கு வணக்கம்!
பிரித்தானியா வாழ் தமிழர்கள் இலங்கை வங்கியூடாக
பணம் அனுப்பும் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி
அடைந்தேன்,அதிர்வு சுட்டிக்காட்டிய பின்பாவது தமது
தவறை உணர்ந்து தமிழ் மக்கள் செயற்படவேண்டுமென்பதே
எனது வேண்டுகோளுமாகும்.
---------------------------------------------
comments by: mandapam viswanathan

athirvu sirappaka ullathu.thodarattum unkal tamil inap pani.-mandapam viswanathan, muuttha patthirikkayalaar.
chennai.
---------------------------------------------

Comments