புலம்பெயர் நாடுகளில் இருந்து சென்ற 9 பிரதிநிதிகள் யார் – அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழ் சமூகம்

சிறீலங்கா அரசின் உதவியாளராக செயற்பட்டுவரும் செல்வராஜா பத்மநாதனின் ஏற்பாட்டின் அடிப்படையில் புலம்பெயர் நாடுகளில் இருந்து சென்று சிறீலங்கா அரசுக்கு தகவல்களை வழங்கி விருந்துண்டு வந்த குழுவினர் யார் என்பது தொடர்பில் பல விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்கா அரசுடன் செல்வராஜா பத்மநாதன் இணைந்து செயற்பட்டுவருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரின் ஏற்பாட்டின் அடிப்படையில் பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் சுவிற்சலாந்து ஆகிய நாடுகளில் இருந்து 9 பேர் அடங்கிய குழு ஒன்று சிறீலங்கா சென்று சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரீஸ் ஆகியோரை சந்தித்து வந்துள்ளனர்.

சிறீலங்கா சென்ற இந்த குழுவினர் யாழ் மற்றும் வன்னிப் பகுதிகளுக்கு சென்று அந்த மாவட்டங்களின் இராணுவ கட்டளை அதிகாரிகளையும் சந்தித்துள்ளதுடன், சிறிலங்கா அரசுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்கள் தொடர்பான தகவல்களையும் வழங்கியுள்ளதாக பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

போர்க் குற்றவாளி என அனைத்துலக சமூகம் புறம்தள்ள முயற்சிக்கும் கோத்தபாயாவுடன் விருந்தில் கலந்துகொண்ட இந்த குழுவின் செயற்பாட்டின் பின்னனியில் யாழ் மற்றும் கொழும்பில் இருந்து செயற்படும் பல ஊடகங்களின் பங்களிப்புக்களும் இருக்கலாம் என்ற அச்சங்களும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ளது.

-----------------------------------------------------------------------
சிறீலங்கா அரசுக்கு உதவி வருகிறார் விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கிய பிரமுகர் பத்மநாதன்-ஏ.எஃ.ப்.பி செய்தி நிறுவம்


விடுதலைப்புலிகளின் வெளிவிவகார செயற்பாட்டுக்கு பொறுப்பாக விளங்கிய விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கிய பிரமுகரான செல்வராஜா பத்மநாதன் சிறிலங்கா அரசுக்கு உதவிகளை வழங்கி வருவது அம்பலமாகி உள்ளதாக பிரான்ஸ் நாட்டை தளமாக கொண்ட ஏ.எஃ.ப்.பி செய்தி நிறுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் போருக்கு பின்னரான நடவடிக்கைகளில் அரசுக்கு உதவுவதற்கு விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கிய பிரமுகர் செல்வராஜா பத்மநாதன் முன்வந்துள்ளார். அதனை சிறீலங்கா அரசின் ஊடகம் ஒன்று அம்பலப்பாடுத்தி உள்ளது.

முன்னர் விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோகஸ்த்தராக பணியாற்றிய அவர் பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். புலம்பெயர் நாடுகளில் உள்ள பல தமிழ் பிரதிநிதிகள் அரசின் நடவடிக்கைகளை புரிந்து கொண்டுள்ளதாக பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

அரசுடன் இணைந்து செயற்படுபவர்களில் புலம்பெயர் நாடுகளில் உள்ள பல புத்திஜீவிகளும், விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆதரவாளர்களும் அடங்கியுள்ளதாகவும், எல்லோரும் சிறிலங்கா அரசுடன் இணைந்து கடுமையாக உழைக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பத்மநாதனை தாம் மலேசியாவில் வைத்து கைது செய்திருந்ததாக சிறீலங்கா அரசு அறிவித்த போதும், அவரை இனந்தெரியாத இடம் ஒன்றிற்கு அது அழைத்து சென்றிருந்ததாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே செல்வராஜ பத்மநாதன் சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படுவதை சிறிலங்கா அரசு உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அதற்கு அனைத்துலக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளது தமிழ் மக்களிடம் பலத்த அதிர்வலைளை தோற்றுவித்துள்ளது.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களே பத்மநாதனை காட்டி கொடுத்ததாக தமிழ் சமூகத்தை தொடர்ந்து முட்டாளாக்கும் முயற்சியில் சில புலம்பெயர் ஊடகங்கள் பொய்யான தகவல்களையும், புலனாய்வுத் தகவல்களையும் (??) வெளியிட முயன்று வருகையில் பத்மநாதனின் விடயத்தை சிறிலங்கா அரசு அம்பப்படுத்தி உள்ளது, இந்த போலிக் கும்பலின் முகத்திரையை கிழித்துள்ளதாக புலம்பெயர் தமிழ் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
---------------------

http://www.sundayobserver.lk/2010/06/20/sec01.asp

Tamil intellectuals, ex-militant sympathisers to assist Govt

by Ananth PALAKIDNAR

A group of nine Tamil intellectuals including former prominent militant sympathisers who had been operating internationally for the militant outfit along with Pathmanathan (Kumaran), the former head of the LTTE’s activities abroad said they would assist in the post conflict rehabilitation and reconstruction activities in the country.

The delegation of sympathisers of former militants domiciled in Canada, Switzerland, Germany, United Kingdom, France and Australia met Defence Secretary Gotabaya Rajapaksa and Minister of External Affairs Prof. G. L. Peiris in Colombo with regard to the Sri Lankan Government’s peace building efforts.

Pathmanathan who played a key role in bringing down the nine-member delegation to Colombo was also present at the meetings held with the Defence Secretary and the Minister of External Affairs.

Pathmanathan, known as `K.P’ commenting on the change of heart of Tiger sympathisers abroad and the delegation’s visit to Colombo told the Sunday Observer that several Tiger activists living abroad had now begun to understand the ground realities.

The Tamil diaspora have been observing the situation in the country since the conflict came to an end in May last year.

At the early stages there were misunderstandings due to adverse campaigns carried out by certain organisations which did not seem to like the country enjoying peace. However, during the past one year there was a vast change in the minds of the Tamil diaspora, particularly those who remained supporters of the LTTE, according to Pathmanathan. Apart from their key meetings in Colombo, the delegation from abroad also received first-hand information on the post-conflict humanitarian activities by visiting Vavuniya, Kilinochchi and Jaffna.

The delegation pointed out certain shortcomings in the resettlement process which the Government agreed to look into.

The Security Forces Commanders in Vavuniya and Jaffna briefed them on the progress made with regard to the resettlement and reconstruction activities carried out in the North. They also met representatives of civil societies. They were impressed with the construction of houses by the Army in Chavakachcheri for Internally Displaced Persons (IDPs). The Security Forces are in the process of building 400-500 houses in the North for those who had lost their dwellings.

Elaborating on the collection of funds from the Tamil diaspora, Pathmanathan said that an understanding has been reached to set up a Non Governmental Organisation (NGO) to streamline the financial assistance for the post-conflict humanitarian programs from abroad. The NGO is expected to be called North and East Development Program.

Apart from receiving assistance from abroad, the NGO will also work towards creating awareness among the Tamil diaspora on the post-conflict humanitarian programs.

This will go a long way to counter the adverse campaigns carried out by organisations abroad against the peace building efforts in the country. Detailing the Tiger assets, the former international chief of the Tiger outfit said that the assets are worth several million dollars. Those who are handling the funds collected by the LTTE abroad are now willing to transfer them for humanitarian programs in the country. Welcoming the TNA’s new stance to cooperate with the Government in the peace-building process the ex-Tiger stalwart said that there should not be room for petty differences and all must work towards stabilising the hard earned peace.

Comments