மகிந்த வருகைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் - தலைவர்கள், தொண்டர்கள் கைதாகி தடுத்துவைப்பு

மகிந்தவின் பயணத்திற்கு எதிராக தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் சீமான், வை.கோ, திருமாவளவன் ,பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானவர்கள் தமிழக காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
http://meenakam.com/wp-content/gallery/nt06082010/nt08062010001.jpg
இந்தியாவுக்கு இசன்ற மகிந்தவிற்கு எதிர்புத்தெரிவித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கண்டன ஆர்பாட்டங்களும் மகிந்தவின் கொடும்பாவி எரிப்புக்களும் நடைபெற்றுள்ளன.

தமிழகத்தின் திருப்பூரிலும், தேனியிலும், மயிலாடு துறையிலும், நாகர்கோவிலிலும் மகிந்தவின் கொடும்பாவிகள் தமிழ் அமைப்புக்களினாலும் கட்சிகளினாலும் எரிய+ட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தின் சென்னை - ஆழ்வார் பேட்டையில் உள்ள சிறீலங்கா தூதரகத்தினை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வை.கோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், இலட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தன் மற்றும் நல்லக்கண்ணு, மகேந்திரன் உள்ளிட்ட அமைப்பின் தலைவர்களும் அதன் ஆதாரவாளர்களும் சென்னையில் ஆர்பாட்ட பேரணிகளை நடத்தியுள்ளார்கள்.

இன்நிலையில் இவர்கள் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டகாரர்கள் என ஆயிரக்கணக்கானவர்களை தமிழக காவல்துறையினர் இன்று கைதுசெய்துள்ளார்கள். நாம் தமிழர் கட்சியினரால் சென்னை சாஸ்திரிபவன் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதன்போது கட்சி தலைவரும் தமிழ் உணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான செந்தமிழ் சீமான் உள்ளிட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.சென்னை மயிலாப்பூர் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இவர்கள் அனைவரையும் தமிழக காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள். மகிந்தவின் டில்லிபயணத்தினை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் மகிந்தவின் கொடும்பாவியை எரியூட்டி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

கோவை மாவட்டத்தில் புகையிரதமறிப்பு ஆர்பாட்டம் நடத்த முற்பட்ட கட்சி ஆதரவாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். மயிலாடுதுறை திருவண்ணாமலை, திருச்சி, மதுரை போன்ற இடங்களிலும் மகிந்தவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

சென்னையின் ஆழ்வார்பேட்டையில் உள்ள சிறீலங்கா தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுவருவதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை பெங்களுரில் பல்வேறு தமிழ் அமைப்புக்கள் இணைந்து கருப்புக்கொடி ஆர்பாட்டங்களை நடத்தியுள்ளார்கள்.

கர்நாடகத்தை சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புக்களும் மகிந்தவின் பயணத்திற்கு எதிர்பு இன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments