யாழ்ப்பாணத்தில் தம்மை நிலைநாட்டப் பாடுபடும் சீனா, இந்தியா, அமெரிக்கா

போருக்குப் பின்னான அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் யாழ் குடாநாட்டில் தமது பிரசன்னத்தை இந்தியாவும் சீனாவும் வெளிப்படையாகவே படிப்படியாக பலப்படுத்தி வருகின்றன. இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பியுள்ள மஹிந்த கைச்சாத்திட்டுள்ள 7 ஒப்பந்தங்களில் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை விருத்தி செய்வது, உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள தொலைத்தொடர்பு வசதிகளை மீளக்கட்டி எழுப்புவது ஆகியனவும் உள்ளடங்குகின்றன.

இந்திய அரசாங்க மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் ஏராளமாக வடபகுதிக்குப் படையெடுத்துள்ளன. ரயில் பாதைகளை மீளக்கட்டமைப்பது, பலாலி விமானநிலைய மீள்கட்டுமானம், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி அனைத்தும் இந்தியாவின் பிடியில் உள்ளன.

இதேவேளை உயர் பாதுகாப்பு வலயம் எனப்படும் பகுதியில் தமிழர்களை அனுமதிக்காத படைகள் தென்பகுதி சிங்களவர்களைத் தாராளமாக அனுமதித்து வருகின்றன. இவர்கள் அங்குள்ள முருகைக்கற்களை அகழ்ந்து செல்வதால் கடல் நீர் நாட்டுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. குடாநாட்டுக் கிணறுகளில் உப்புத்தண்ணீர் புகக்கூடிய ஆபத்தில் உள்ளது. அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையையும் இந்தியா மீள் அபிவிருத்தி செய்யவுள்ளதாம். வீசா அலுவலகம் ஒன்றையும் யாழில் இந்தியா ஆரம்பித்துள்ளது.

இதேபோல சீனா யாழ் குடாநாட்டின் மிக முக்கிய ஐந்து சாலைகளை விஸ்தரிப்பதில் இறங்கியுள்ளது. சீன நிறுவனமே யாழ் குடாநாட்டுக்குரிய மின்சாரத்தை வழங்கும் சுன்னாகம் மின்சார நிலையத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்த இரு நாடுகளும் தவிர அமெரிக்காவும் படிப்படியாக குடாநாட்டில் தன்னை நிலைநாட்டத் தொடங்கியுள்ளது. கொழும்பிலுள்ள அமெரிக்கன் செண்டருடன் தொடர்பான அமெரிக்கன் கோர்னர் என்பதை யாழ் நகரில் திறப்பதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது. அண்மையில் குடாநாட்டுக்கு விஜயம் செய்த அமெரிக்கத் தூதுவர் இதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

யாழ் குடாநாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொறுப்பு பசில் ராஜபக்ஷவிடம் உள்ளது. இந்நிலையில் யாழ் குடாநாட்டில் தமிழர்களுக்குரிய உரிமைகள், அதிகாரங்கள் அனைத்தையும் வேறு நாடுகளும் சிங்களங்களும் பங்குபோடுகின்றன. இந்நிலையிலாவது தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களும், புலம் பெயர் தமிழர்களும் ஈழத் தமிழர்கள் தமது சொந்த அபிவிருத்தியைப் பெறும்பொருட்டு குரல் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

Comments

k selvaprabhu said…
ஒவ்வொரு நாடும் இலங்கையை துண்டாடும் சிங்களன; அப்பம் ப்றிகொடுத்த பூனையாகி நிற்பான்.தன்நிலை உயர்த்த எல்லா குரங்குகளும் இலங்கை வந்தாயிற்று.உலகிலேயே தான் ஒரு மொக்கை இனம் என்பதை ராசப்ச்சே தலைமையில் நிரூபிக்கப்படுகிறது