தமிழீழத்தை கைவிட்டால் ! சுட்டு விடுங்கள் ! --தேசிய தலைவர்

தமிழீழ கோரிக்கையை கைவிட்டால் என்னையும் சுட்டு விடுங்கள், என்று எங்களுக்கெல்லாம் கொள்கையில் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்று உணர்த்தி நிற்பவர் எங்கள் தேசிய தலைவர். அவரை பயங்கரவாதியாக பார்த்தவன் கூட , தங்கள் எதிரியாக பார்த்த துரோகிகள் கூட அவரது தலைமையும் உறுதியையும் கண்டு வியந்தவர்கள் தான்! . சைக்கிள் இல் தொடங்கி விமான படை வரை கட்டி அமைக்க எதனை உயிர்கள் எவ்வளவு பணம் , எத்தனை கட்டமைப்புகள் ! இவ்வளவையும் காட்டி தந்த தலைவருக்கு அதன் விலைமதிக்க முடியாத அர்பணிப்பு புரிந்து இருந்தது.

அதனாலோ என்னவோ இதை எந்த நிலையிலும் கைவிட்டால் தான் என்றாலும் பரவாயில்லை சுட்டு விடுங்கள் என்று கூறி நின்றார். இன்றைக்கு அதை நாம் மனதில் நிறுத்துவோம் . பல பேர் பல காரணங்கள் கூறினாலும் தமிழீழம் என்பது அமைக்கப்படவேண்டும் . அதை யார் கைவிட்டாலும் அவர்களை ஒதுக்கி , எங்கள் போராக , இளையோரின் ஒன்றிணைந்த சக்தியாக , ஜனநாயக வழியில் நிச்சயம் தொடர வேண்டும் , தொடர படும் ! ஒரு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் ஒரு வாக்கெடுப்பு மூலம் எங்கள் மக்கள் அதை தீர்மானிக்கும் உரிமை பெறப்படும் வரை நாங்கள் பயணிப்போம் .
இன்றைக்கு இவ்வளவு குழப்பங்கள் நிறைந்த நிலையில் , எல்லாரும் தங்கள் தான் புலிகள் என்று அறிக்கை விடும் நிலையில் , மக்கள் ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தார்கள் . தமிழீழ விடிவை நோக்கி பயணிக்கும் எல்லா அமைப்புகளையும் ஆதரித்தனர். பிரித்தானிய தமிழர் பேரவை , தமிழ் இளையோர் அமைப்பு என்பன மக்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த போதெல்லாம் மக்கள் இணைந்து நின்று தங்கள் உணர்வை காட்டினர் , வட்டுகோட்டை தீர்மானம் , தமிழீழ அரசு தேர்தல் என்றால் இணைந்து நின்று முடியுமானோர் வாக்களித்து எம்மின போராட்டத்தை நிமிர்த்த தங்கள் ஆதரவை தந்தனர்.

இதை எவர் எதிரதாலும் , எவர் கை விட்டாலும் அவர்களை தூக்கி எறிந்து விட்டு எவர் சரியான திசையில் பயணிக்கிரரோ அவருக்கு தம் ஆதரவை எப்ப்ளுதும் வழங்க மக்கள் நிச்சயமாக முன்வந்து உள்ளனர். இலங்கை அரசு வாங்க நினைக்கும் தலைவர்கள் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர்கள் என்றால் கூட தூக்கி , தமிழீழ கோரிக்கையை கை விட்டால் , நிச்சயம் அவர்களையும் தூக்கி எறிய தயங்க மாட்டோம் . தேசிய தலைவரின் வரிகள் காதில் ஒலிக்கட்டும் ! பலர் தங்கள் சொந்த இலாபத்துக்காக , உள்வீட்டு பிரச்சைனக்காக எங்கள் போராடத்தை மழுங்கடிக்க எதிரியுடன் கூட்டு சேர்வது முதன் முறையல்லவே !

கருணாவில் இருந்து டக்லஸ் வரை தங்கள் உள்வீட்டு பிரச்சனைக்காக சிங்கள அரசுடன் சேர்ந்தவர்கள் தானே. தமிழீழம் வேண்டாம் , புலிகளிடம் இருந்து எங்களை காத்தருள்க என்று சிங்கள பேரினவாதிகளின் கை பொம்மை ஆகியவர் பட்டியல் இன்னமும் முடியவில்லை.
ஆனால் இம்முறை அவர்கள் நேரடியாக சந்திக்க போவது மக்களை!. புலிகள் என்றும் எதிரிகள் என்றும் நாங்கள் பார்கபோவது இல்லை , யார் என்றாலும் எங்கள் தேசிய தலைவனின் பாதையை மறந்து , இத்தனை தமிழ் இளையோர் தங்கள் உயிரை கொடுத்த ஒரு இலக்கை அடையாமல் கைவிட்டால் மன்னிக்க போவதும் இல்லை அதுவரை நாம் தூங்க போவதும் இல்லை.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம். இதை உரக்க கூறுவோம் ! எங்கள் எதிர்களின் காதுகளில் வீழட்டும் ! புலிகளின் தலைவர்கள் சிலரை வளைத்து போட்டால் அடங்குவதற்கு இது ஒன்றும் தண்ணீரில் அடங்கும் தாகமல்ல , கண்ணீர் காய்ந்து போன கன்னங்கள் இறுகிய உள்ளத்தோடு தொடங்கிய போர் ! சிவகுமாரன் தொட்டு தீபன் வரை உயிரை கொடுத்து வளர்த்த தீ!

தெளிவாக இருப்போம் ! அறிவோடு நடப்போம் !



ராஜ் சுதன்

suthan777@yahoo.com

Comments