சிறிலங்கா அரசு முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் சர்வதேசத்தின் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்ற அதே வேளை தமிழர் உரிமைக்கான போராட்டத்தினை நசுக்க தொடர்ந்தும் திட சங்கற்பம் பூண்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பது சர்வதேச ரீதியாக பல வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதன் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் இலட்சியத்தை அழித்துவிடலாம் என்ற சிங்கள அரசின் நோக்கம் எடுபடவில்லை.
இத்தகைய சூழலில்தான் சிறிலங்கா அரசு பல்வேறு நரித்தனம் கொண்ட தந்திரோபாயங்களை நகர்த்திவருகின்றதனை தமிழர்கள் அறிவர்.சர்வதேச ரீதியாக எழுந்துள்ள அழுத்தங்களை தணிப்பது.
சர்வதேச உதவிகளை தமிழர்களின் பேரால் பெற்று சிங்கள குடியேற்றங்களை பெருக்குவது.
இன நல்லிணக்கம் என்ற பேரிலும், அபிவிருத்தி என்ற பேரிலும் தமிழர் உரிமைக்கான போராட்டத்தினை அடியோடு இல்லாமல் செய்வது ஆகிய நீண்டகால திட்டங்களை நகர்த்தி வருகின்றது.
இத்தகைய சிங்கள பேரின வாதத்தின் சூழ்ச்சி நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் பெரும் தடையாக இருப்பதனை சிறிலங்கா அரசாங்கம் நன்கு கணித்துள்ளது.
ஆகவேதான் சிறையில் உள்ள போராளிகளையும் சில பொறுப்பாளர்களையும் பகடைக்காய்களாக வைத்து சில திட்டங்களை செயற்படுத்தி புலம்பெயர் மக்களை தம் வசப்படுத்தி, வளங்களை உள்வாங்கி, உரிமைக்கான போராட்டத்தினையும் புலம்பெயர் தேசங்களில் நசுக்க எண்ணியுள்ளது.
இதன் வெளிப்பாடாகவே அண்மைய நகர்வுகள் இருக்கின்றன. போராளிகளை விடுவிப்பதற்கும், பொதுமக்களின் துயரங்களை போக்குவதற்கும் புலிகள் இயக்கமும், புலம்பெயர் மக்களும் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கின்றார்கள் என்ற நல்ல நோக்கினை சிங்களம் கபடத்தனமாக தம்வயப்படுத்த முயற்சிக்கின்றது.
சிங்கள அரசினையும் சர்வதேசத்தினையும் கேட்பது என்னவென்றால்உண்மையாக சரணடைந்த போராளிகளை விடுவிக்க வேண்டுமெனில், தமிழர்களது துயரங்களை போக்க சிங்கள அரசு விரும்புகின்றது என்றால் அல்லது சமூக நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டுமென்றால் சிங்கள அரசாங்கம் அவசரகால சட்டத்தினை முழுமையாக நீக்கவேண்டும்.
போராளிகள் அனைவருக்கும், மனிதாபிமான பணியாளர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கவேண்டும்சர்வதேச நிறுவனங்களையும் உள்ளூர் நிறுவனங்களையும் வன்னிக்குள் பணிபுரிய முற்று முழுதாக அனுமதிக்க வேண்டும். சிறையில் உள்ள போராளிகளின் முழுமையான விபரங்களை வெளியிடவேண்டும்.
இவ் அனைத்து செயற்பாடுகளும் வெளிப்படையாக இடம்பெறவேண்டும். கூடவே மக்களால் பெரும்பான்மையுடன் வெற்றிபெற செய்யப்பட்ட தமிழர் பிரதி நிதிகளுடன் சேர்ந்து இவற்றை செய்யவேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை வெளிப்படைத்தன்மையுடன் செய்யும் போது உலகத்தமிழர்களும் அதற்கு முன் நின்று உழைப்பார்கள்.
ஆனால் சிங்கள அரசாங்கமோ மிக மிக இரகசியமாக, திரை மறைவில் இயக்க பொறுப்பாளர்கள் சிலருடனும், வெளி நாட்டில் இருந்து அண்மையில் சென்ற சில பிரதி நிதிகளுடனும் சேர்ந்து சில செயற்பாடுகளை முன்னெடுப்பது உள் நோக்கம் கொண்டவை.
ஆகவே இந்த கபட நோக்கம் கொண்ட சிறிலங்கா அரசின் முயற்சிகள் தொடர்பில் புலம்பெயர் மக்கள் மிக விழிப்புடனும் கூட்டுப்பொறுப்புணர்வுடனும் செயற்படவேண்டும். உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் மக்கள் தெளிவாகவே உள்ளனர் என்றாலும் சில குழப்பவாதிகள் தொடர்ச்சியாக இயங்குவதனால் மக்கள் உசாராக இருக்கவேண்டிய தேவையுள்ளது.
ஒரு பக்கம் நியாயம் வேண்டும் என்று உள் நாட்டிலும் வெளி நாட்டிலுல் தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் என நாம மிட்டவர்கள் மன சாட்சியற்ற விதத்தில் சிங்கள அரசுக்கு சார்பாக சாட்சியங்கள் சொல்ல புறப்பட்டமையானது எந்த காரணங்களை கூறியும் நியாயப்படுத்த முடியாது.
போராளிகளை விடுதலை செய்வதென்பது மேற்கூறப்பட்டவர்கள் தமது நியாயத்தினை நிரூபிப்பதற்கான ஓர் கருவியே தவிர உண்மையான அன்பும் அரவணைப்பும் கிடையாது அக்கறையும் கிடையாது. தவிர சிறையில் உள்ள போராளிகள் மட்டும் போராட்டம் கிடையாது அப்படியென்றால் மக்கள் வேறு மாதிரி வாக்களித்திருப்பார்கள்.
ஈழ விடுதலைப்போராட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட போராளிகள் மட்டுமல்ல மாறாக மாவீரர் குடும்பங்கள் ஆதரவாளர்கள் என 150, 000 குடும்பங்கள் தங்கள் உறவுகளை பலிகொடுத்துள்ளனர். அதனை விட கடந்த 15 வருடங்களாக ஏறக்குறைய 5000 தமிழ் இளைஞர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆகவே எல்லோரும் தமிழர்கள் எல்லோரும் விடுதலையின் பால் பாதிக்கப்பட்டவர்கள். இது இவ்வாறு இருக்க போராளிகள், போராளிகள் என முதலைக்கண்ணீர் விடுவது வேடிக்கை. நாட்டிற்காக தம்மை அர்ப்பணிக்க புறப்பட்டவர்கள் என்ற வகையில் போராளிகள் மீது மக்களிற்கு என்றுமே மதிப்பு உண்டு ஆனால் அதற்காக அனைத்தையுமே விட்டுக்கொடுப்பது சிங்கள அரசின் படுகொலைகளை நியாயப்படுத்துவது என்பதுவரை போகமுடியுமா?
புலிகளின் சமாதான காலத்தில் சிறையில் உள்ள கைதிகளையும் , போராளிகளையும் விடுவிப்பது தொடர்பில் இலங்கை அரசின் கடும் போக்குகளை புலிகள் எற்கவில்லை. மாறாக சிங்களமும் அதைத்தான் செய்தது.போராளிகளை விடுவித்தல். பொதுமக்களிற்கான புனர்வாழ்வு என்பதில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டிய பொறுப்பு உண்டுதான் ஆனால் அதற்கு வரையறை தேவை.
சர்வதேச அனுசரணையுடன் அல்லது அங்கு பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் கட்சியுடன் நேர்மையாக பேசி சிங்களம் எதையாவது செய்ய முற்படுமானால் தமிழர்கள் அதுபற்றி யோசிப்பார்கள் ஆனால் சிங்களத்தின் கருணா, டக்ளஸ் அந்த வரிசையில் குமரன் பதம நாதன் போன்ற பாணியில் எதையும் செய்ய முற்பட்டால் மக்கள் தோற்கடிப்பார்கள்.
புலம்பெயர் நாடுகளில் இருந்து சென்றவர்களிடமே சில போராளிகள் சொல்லி இருக்கின்றார்கள் அண்ணமார் இது நாங்களாக விடுதலைக்காக தேடிக்கொண்டது. ஆனால் எங்கட குடும்பத்திற்கு உங்களால முடிந்ததை செய்யுங்கோ. என்று கூறியுள்ளார்கள்.
தேவ நேசன் நேசையா போன்றோரை அரசாங்கம் முன்னுக்கு வைத்து நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதனூடாக புலம்பெயர் மக்களின் நிதியினை கொண்டு வேலை செய்வதாக கூறப்படுகின்றது. ஆனால் இங்கிருந்து சென்ற சிலரிடம் அரசாங்கம் திட்டவட்டமாக கூறி இருக்கின்றது.
அதாவது எந்த நிறுவனங்களை ஆரம்பித்தாலும் அதில் பதம நாதன் அவர்களின் இணைப்பு இருக்க வேண்டும் என்பதே. ஆகவே இந்த இணைப்பு ஏன்?
ஆகவே தெட்ட தெளிவாக விளங்குவது என்னவெனில் சிங்களம் புலம்பெயர் மக்களின் நிதிகளை வரவளைத்து தமது தமிழர்களுக்கு எதிரான அரசியலை செய்வதும்.
அதற்கு புலம்பெயர் மக்கள் எதிர்த்தால் போராளிகளை விடுவிக்க மக்களிற்கு புனர்வாழ்வு செய்ய புலம்பெயர் மக்கள் எதிர்க்கின்றார்கள் என்று பிரச்சாரம்செய்து அங்குள்ள போராளிகள், பொதுமக்கள் ஆகியோருக்கும் புலம்பெயர் மக்களிற்கும் ஓர் இடைவெளியை ஏற்படுத்துவது.
இதுதான் திட்டம்.
இதனை டக்ளஸ், கருணா போன்றோர் ஊடாகவும் செய்த சிங்களம் தோல்வி கண்டது. இப்போ பதம நாதன் ஊடாக செய்ய நினைக்கின்றது. ஆகவேதான் சம்பந்தப்பட்ட அனைவரும் புரிந்து செயற்படவேண்டும்.
மக்கள் தெளிவாகவே உள்ளனர்.

Comments