கனடிய தமிழர் தேசிய அவை தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன

யூன் 20ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை கனடா தழுவி நடைபெற்ற கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தலின் உத்தியோகபூர்வமான முடிவுகளை தேர்தல் ஆணையகமான தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

தேர்தல் விதிகளுக்கமைய பெறப்பட்ட தேர்தல் முறைப்பாடுகளை கவனத்தில் கொண்ட தேர்தல் ஆணையகம் அவற்றிற்கான பதில்களை வழங்கியதன் பின் தனது முடிவுகளை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

தேர்தல் பெரும்பாலும் நீதியாகவும், நேர்மையாகவும் நடந்துள்ளமையை உறுதிப்படுத்தியுள்ள தேர்தல் ஆணையகம், சில சிறிய முறைகேடுகள் தேர்தலின் போது நடைபெற்றுள்ளமையை தாம் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வாக்களித்த மக்களின் தொகையையும் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வெற்றியின் அளவையும் கருத்தில் கொள்ளுமிடத்து நடைபெற்ற சிறிய முறைகேடுகள் இறுதி முடிவுகளை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

வரலாறாக, வெற்றிகரமாக நடந்து முடிந்த தேர்தலுக்கு காரணியாக அமைந்த அனைத்து வேட்பாளர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்த தேர்தல் ஆணையகம், தேர்தலில் எதிர்கொண்ட சவால்களையும் அதனை சாதுரியமாக எதிர்கொண்ட விதங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது.

வரலாறாக 29035 கனடியத் தமிழர்கள்; தேர்தலில் வாக்களித்ததாக தேர்தல் ஆணையகம் தேர்தல் முடிவுற்றவுடன் அறிவித்திருந்தது. ரொரன்ரோ பெரும்பாகத்தில் 26,842 வாக்காளர்களும், மொன்றியலில் 1712 வாக்காளர்களும், ஒட்டாவாவில் 65 வாக்காளர்களும், கோன்வலில் 189 வாக்காளர்களும், குவெல்வில் 165 வாக்காளர்களும், எட்மிண்டனில் 62 வாக்களுர்களுமாக 29035 வாக்காளர்கள் வாக்களித்தனர். கனடியத் தமிழர் தேசிய அவைக்கு வெற்றி பெற்று தெரிவானவர்களாக கீழ்வருவோரை தேர்தல் ஆணையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


தேசியப்பட்டியல் உறுப்பினர்கள்

தேசியப்பட்டியல் - பொது

திவா பரம்சோதி

மோகன் இராமகிருஷ்ணன்,

கவிதா செந்தில்முருகன்

நீதன் ஷான்

ராஜ் சுப்பிரமணியம்

தேசியப்பட்டியல் - பெண்கள்

தர்ஷிகா செல்வசிவம்

சாகரி செந்தில்குமார்

தேசியப்பட்டியல் - இளையோர்

கிருஷ்ணா சரவணமுத்து

சிவா விமலச்சந்திரன்

ஒன்ராறியோ மாகாணம் உறுப்பினர்கள்

ஒன்ராறியோ மாகாணம் - பொதுப்பட்டியல்

மகேந்திரன் மாணிக்கம்

பிரபா நல்லையா

தேவா சபாபதி

ஒன்ராறியோ மாகாணம் - பெண்கள்

லக்ஸ்மிலா சிறிதரன்

நந்தினி விஜயபவன்

ஒன்ராறியோ மாகாணம் - இளையோர்

நான்சி கமலநாதன்

அசோக் நித்தியானந்தன்

கிழக்கு கனடா மாகாண உறுப்பினர்கள் கிழக்கு கனடா - பொது

செல்வத்துரை தெய்வேந்திரம்

செபஸ்ரியாம்பிள்ளை தோமஸ்

கிழக்கு கனடா - பெண்

சுபிதா தர்மகுலசிங்கம்

கிழக்கு கனடா - இளையோர்

மயூரன் மனோகரன்

மேற்கு கனடா மாகாண உறுப்பினர்கள்

சுரேகா செல்வரட்ணம்

செல்வன் சின்னத்துரை

ரோரன்ரோ மேற்கு பிரதேசசபை உறுப்பினர்கள்

சேளந்தரராஐா கணபதிப்பிள்ளை

பாலசிங்கம் சுப்பிரமணியம்

சேந்தில்குமார் வேலுச்சாமி

ரோரன்ரோ கிழக்கு பிரதேசசபை உறுப்பினர்கள்

ரொபேட் ஞானப்பிரகாசம்

குமார் ஞானசேகரம்

கோபி முத்துலிங்கம்

குகன் இராசலிங்கம்,

விக்கிசீவரட்ணம்

வரதன் சோமசுந்தரம்,

சாந்தி தேவராஜாபீல்;

பிரதேசசபை உறுப்பினர்கள்

டெமிசன் அல்வின்

கென் கேதீஸ்வரன்

ஜேம்ஸ் மரியநாயகம்

பவநீதன் நடராஐா

கோகிலதாஸ் சண்முகம்

யோர்க் பிரதேசசபை உறுப்பினர்கள்

பற்றிக் ஜேயரட்ணம்

தவம் கிருஸ்ணராஐ

மெய்யழகன் பேரம்பலம்

திரு பொன்னுத்துரை

ரூபன் ராம்

சாந்தினி சிவகுமாரன்

ரங்கன் தேவராஐா

Comments