சோணியாவின் கொளுத்த விருந்துபசாரத்தில் திகைத்த மகிந்த.

இந்தியா சென்ற இலங்கை அரசுத் தலைவர் மகிந்தவுக்கு இம் முறை பலத்த மரியாதை கொடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங், சோணியா காந்தி, உட்பட ஜனாதிபதி பிரதீபா பாட்டிலையும் மற்றும் பல இந்திய கொள்கைவகுப்பாளர்களையும் மகிந்த சந்தித்துள்ளார். பாரிய ராப்போசன விருந்துபசாரமும் நடைபெற்றுள்ளது. இதில் குறிப்பாக சோணியா அம்மையார் கொடுத்த விருந்துபசாரத்தால் திகைத்துப்போனாராம் மகிந்த. அனைத்தும் ஏன் ? சீனாவுடன் இலங்கை கைகோத்துவிடக் கூடாது என்பதற்காகவே.

ஆனால் நாடு திரும்பிய மக்ந்த சும்மா இருப்பாரா ? இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள சீன உப பிரதமர் சியாங்க் டிஜியாங்க்கை இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். பலத்த கவனிப்பின் பின்னர் நாடு திரும்பியுள்ள மகிந்த சீன உதவியில் இலங்கையில் பல அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட இருப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பது, இந்தியாவின் வயிற்றில் புழியைக் கரைக்கும் என்பதில் ஜயமில்லை.

Comments