விடுவிக்கப்பட்ட பெண்களை நிரந்தர பாலியல் வேலைகாரர் ஆக்கும் படையினர்!


வெளிநாட்டு உறவுகளே கொஞ்சம் இதை வெளி உலகுக்கு கொண்டு வாருங்கள் இல்லயேல் இன்னும் பத்து வருங்களில் எங்கள் ஊர் ஒரு காம களியாட்ட ஊராக மாற்றப்படும் என்பதில் ஐயமில்லை !

நீங்கள் தான் இன்று எங்கள் காவலரண் , உங்கள் குரல் தான் எங்கள் பெண்களின் கற்புக்கு கவசம் !
யாழ்ப்பாணத்தில் முக்கிய கல்வி நிறுவனம் ஒன்றில் கற்பிக்கும் நான் ஒரு முன்னாள் போராளி. இன்றைக்கு இராணுவத்தால் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள் நிலைமை குறித்து எழுத வேண்டும் , உங்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்.

எனது பெயரோ இல்லை ஈமெயில் முகவரியோ தேட முனையும் யாவருக்கும் ஒரு செய்தி, நீங்கள் என் கணணி முகவரி பற்றி தேட முயற்சித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் , ஏன் என்றால் இது வெளிநாட்டில் இருக்கும் எனது நண்பர் குலாம் ஊடாக அனுப்புகிறேன்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட விடுதலை புலிகளின் காவல் துறை பெண் உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் ஒரு இராணுவ நிலையத்திற்கு கையொப்பமிட உத்தரவிடப்பட்ட பல பெண்களில் ஒருவர். இவரை முகாமில் வைத்து சில்மிஷம் செய்ய முற்படும் பல இராணுவ வீரர்கள் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை வரை சென்று விட்டார் . இவரை பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வரும் சிங்கள இராணுவ புலனாய்வாளர், இவரை ஒரு இராணுவ சிப்பாயின் கள்ளக் காதலியாக இருக்கும்படி கேட்டு வருகிறார் . அந்த சிப்பாய் திருமணம் ஆனா ஒருவர் , ஆனாலும் தனக்கு ஒரு தமிழ் பெண் வேண்டும் என்றும் தேடி வருகிறாராம். இப்படி பல சோக கதைகள் இன்று யாழ்ப்பாணத்தில் அரங்கேறுகின்றன.

இன்றைக்கு செல்லிட தொலைபேசி மலிவாகி போனதாலும் , வெளிநாட்டில் ஆட்கள் இருக்கும் குடும்பங்கள் மிக சொகுசான வழிகயை அனுபவிப்பதாலும் பல விதமான வாழ்கை முறைகள் தொடங்கப் பட்டு உள்ளன . படையினர் இளம் பெண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவதும் , காம தேவைக்காக தேடி அலைந்த சிப்பாய்கள் யாரையாவது காப்பாற்ற துடிப்பதும் தமிழ் பெண்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்ற வேண்டிய நிலைமைக்கு எங்களை தள்ளி விட்டது .

இப்படி பெண்களை தேடி அல்லைந்த படையினர் இன்றும் எங்கள் மக்களை பெருமளவில் வேட்டை ஆடாமல் இருப்தற்ற்கு பெரும் காரணம் வெளிநாட்டு தமிழரின் குரல். நேற்றும் ஒரு கடையில் தேநீர் குடிக்க வந்த சிங்கள போலீஸ் ஒருவர் "நாங்கள் சின்ன புழை வுட்டா நீங்க பெரிசாக்கி கத்துறது அனால் புலி வுட்டா சதம் போடுறது இல்லை !" என்று உரக்க கூறிய பொது எனக்குள் ஒன்று தோன்றியது . புலிகள் வேறு வரும் இல்லையடா , நாங்கள் தான் . நானும் ஒரு முன்னாள் போராளி தான் . இப்ப எங்கட சனம் வெளிநாட்டில போராடுரத கண்டு வெருண்டு பொய் நிற்கிறாங்கள் !

அய்யா பெரியோரே , அக்கமரே , தம்பி மாரே கோசம் குரல் கொண்டுங்கோ. யாழ்ப்பாணத்தில் நீங்க வந்து காண்பது எல்லாம் போலி நாடகம். உண்மையில் ஒரு வேதனையை புரி வேண்டும் என்றால் உங்கள் மகளை எங்கள் மண்ணில் வளர்த்து பாருங்கள் புரியும் . இதை உண்மை பெயர்களோடு ஆதார பூர்வமாக எழுத ஒருநாள் வரும். இன்றைக்கு எனது நண்பன் ஊடாக இதை அனுப்புகிறேன். ஒருநாள் வரும் நானும், உங்களை போல மைந்தனாக சுதந்திர கற்றை அனுபவிக்க .

வெளிநாட்டு உறவுகளே கொஞ்சம் இதை வெளி உலகுக்கு கொண்டு வாருங்கள் இல்லயேல் இன்னும் பத்து வருங்களில் எங்கள் ஊர் ஒரு காம களியாட்ட ஊராக மாற்றப்படும் என்பதில் ஐயமில்லை !

நீங்கள் தான் இன்று எங்கள் காவலரண் , உங்கள் குரல் தான் எங்கள் பெண்களின் கற்புக்கு கவசம் !

இவ்வாறு அந்த முன் நாள் பெண்போராளி எழுதியுள்ளார்.

Comments