கோத்தபாய மற்றும் கேபியை சந்தித்து திரும்பிய குழுவினர் பெயர் விபரம்

சிறீலங்காவின் எல்லைகடந்த பயங்கரவாதத்துக்கு துணைபோவதற்கு கேபி குழுவினர் தயார்

புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து அண்மையில் குமரன் பத்மநாதனின் ஏற்பாட்டில் கொழும்புக்கு விஜயம் செய்த குழுவினர்களின் பெயர் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த 12ம் நாள் முதல் 18ம் நாள் வரையான காலப்பகுதியில் சிறீலங்கா அரசு மறறும் கே.பியுடனான சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த சந்திப்புக்களில் முழுமையாக கே.பி மற்றும் கோத்தபாய உடனிருந்ததாகவும், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள சிறீலங்காவுக்கான எதிர்ப்புக்களை அகற்றுவது தொடர்பாகவும் இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இது விடயமாக கோத்தபாய மற்றும் கே.பியினால் அழைத்து பேசப்பட்டவர்களிடம் அப்பொறுப்பை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வெளிநாடுகளில் இயங்கும் கேபி குழுவினருடன் இணைந்து எதிர்வரும் காலங்களில் செயற்படுவார்கள் என்றும் தெரியவருகின்றது. இந்நிலையில், சிறீலங்காவுக்கு விஜயம் செய்த குழுவினர் சிறீலங்காவின் சனாதிபதி மகிந்தவையும் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இதன் போது வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிறுவனத்தின் ஆதரவு அமைப்புக்கள் அண்மையில் புலம்பெயர் நாடுகளில் இரகசியமாக உருவாக்கம் பெற்றுள்ளதுடன், அவற்றை எதிர்வரும் காலங்களில் புலம்பெயர் மக்கள் மத்தியில் செயல்படுத்த கேபி குழுவினர் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

ஏற்கனவே மக்கள் மத்தியில் தேசவிடுதலைக்கு பணியாற்றும் அமைப்புக்களை அந்நியப்படுத்தி அவற்றை செயல் இழக்கவைத்து சிறீலங்காவின் எல்லைகடந்த பயங்கரவாதத்துக்கு துணைபோவதற்கு கேபி குழுவினர் துணைபோகின்றனர். எனவே புலம்பெயர்ந்த மக்கள் மிகக்கவனமாக நிலமைகளை அவதானிக்கும் வண்ணம் தேசநலன்விரும்பிகள் கேட்டுக்கொள்கின்றனர்.

கோத்தபாய மற்றும் கேபியை சந்தித்து திரும்பிய குழுவினர் பெயர் விபரம்

1. மருத்துவ கலாநிதி ரூபமூர்த்தி - அவுஸ்திரேலியா

2. திருமதி சந்திரா மோகன் ராஜ் - சுவிற்சலாந்து

3. சிறிபதி சிவனடியார் - யேர்மனி

4. பேரின்பநாயகம் - கனடா

5. விமலதாஸ் - பிரித்தானியா

6. சார்ல்ஸ் - பிரித்தானியா

7. மருத்துவர் அருட்குமார் - பிரித்தானியா

8. கங்காதரன் - பிரான்ஸ்

9. சிவசக்தி - கனடா

------------
கே.பிக்கு ஒத்துழைக்க முன்வந்தவர்கள் இன்று விடுதலை
திகதி: 26.06.2010 // தமிழீழம்
வவுனியா - பம்பைமடு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலி உறுப்பினர்களில் 25 பேரை அரசு இன்று விடுதலை செய்கின்றது.

இவர்கள் குமரன் பத்மநாதனின் (கே.பி) சிபாரிசின் பேரில் விடுவிக்கப்படுகின்றார்கள்.

குமரன் பத்மநாதன் எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடப்போகின்றார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கே.பி இத்தடுப்பு முகாமுக்கு அண்மையில் சென்றிருந்தபோது, தனது அரசியல் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக அமையக்கூடிய சிலரின் உதவியை அங்கு கோரி இருக்கின்றார்.

இந்நிலையில், கே.பிக்கு ஒத்துழைக்க முன்வந்தவர்களை இன்று விடுவிக்கின்றது.

Comments