இந்தியாவில் கோயம்புத்தூர் பகுதியில் நடைபெற்றுவரும் உலகத் தமிழர் மாநாட்டில் ஈழத்தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், அதனை உருவாக்கியவர்களும் முற்றாக புறம்தள்ளப்பட்டு வரலாற்றை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறீலங்காவில் இரண்டாவது பெரிய இனமாக உள்ள தமிழ் மக்கள் இந்தியாவில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் கருணாநிதியின் துதிபாடும் ஒரு சிலர் அழைக்கப்பட்டபோதும், ஏனைய தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
பேராசிரியர் சிவத்தம்பியை மட்டும் முதன்மைப்படுத்திய தமிழக அரசு ஈழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஏனைய தமிழ் அறிஞர்களை புறக்கணித்துள்ளதாக சிறிலங்காவில் இருந்து சென்ற முஸ்லீம் தலைவரான ஏச் எம் அஷ்வர் இந்திய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களையோ, சிலோன் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானையோ கூட தமிழக அரசு அழைக்கவில்லை.
ஈழத்தமிழரான வண சவியர் எஸ் தனிநாயகம் (1913 – 1980) என்பவரால் உலகத்தமிழர் மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது என்பதை கருணாநிதி நினைவில் கொள்ளல் வேண்டும்.
அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு ஒருவர் அனைத்துலக தமிழர் ஆராட்சி அமைப்பை ஆரம்பித்திருந்தார். பிரபலம் பெற்ற ஈழத்தமிழரான தனிநாயகம் அடிகளார் என்பவரே சென்னையிலும், பாரீசிலும், யாழ்ப்பாணத்திலும், மதுரையிலும் உலகத் தமிழர் மாநாட்டை நடத்தியிருந்தார். அவரை நினைவுகூரும் முகமாகவே மதுரையில் அவருக்கு சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
போப்பாண்டவர், கட்வெல் மற்றும் பெஸ்சி ஆகியவர்களை விட தனிநாயகம் தமிழ் மொழியை அனைத்துலகத்தில் கொண்டு சென்றதில் முதன்மையானவர் என ஸ்கொட்லாந்தின் தலைநகரில் உள்ள எடின்பரோ பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியரான ஆர் ஈ அசெர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய மொழிகளில் பலவற்றில் புலமை கொண்ட அவரால் அது முடிந்துள்ளது.
கோயம்புத்தூர் மேடையில் தனிநாயகம் அடிகளின் புகைப்படம் வைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவாரின் பெயருக்கு இடமாவது விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவும் அங்கு நிகழவில்லை என அஷ்வர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் உள்ள முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த ராவூப் ஹக்கீம் உட்பட மூவர் அழைக்கப்பட்டபோதும், முதலாவது இஸ்லாமிய தமிழ் ஆராட்சி மாநாட்டை நடத்திய எம் எம் உவைஸ் என்பவரை கௌரவிக்க கோயம்புத்தூர் மாநாட்டில் தவறிவிட்டனர்.
தமிழ் ஆராட்சி மாநாட்டை நடத்துவதற்காக ஈழத் தமிழ் மக்கள் மிக உயர்ந்த தியாகத்தை செய்திருந்தனர். 1974 ஆம் ஆண்டு யாழில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 9 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்திருந்தனர். சிறீலங்கா காவல்துறையினரே இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
இந்த மநாட்டை யாழில் நடத்தினால் அங்கு அரசியல் புரட்சிகள் ஏற்படும் என அன்றைய சிறீலங்கா பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவும், யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவும் மறுப்பு தெரிவித்திருந்தனர். அதனை கொழும்பில் நடத்த அவர்கள் திட்டமிட்டனர். ஆனாலும் அது யாழில் நடத்தப்பட்டபோது அதன் மீது சிறீமா பண்டாரநாயக்கா மற்றும் துரையப்பா ஆகியோரின் வழிகாட்டலில் காவல்துறையினர் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்தே துரையப்பாவை கொல்வதற்கு தியாகி சிவகுமாரன் தேடியலைந்தார். துரையப்பாவின் காரில் குண்டு பொருத்திய சம்பவத்தில் அவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார்.
அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிவகுமாரனின் கனவை நிறைவேற்றியதுடன், உலகத் தமிழாராட்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதியையும் நிலை நிறுத்தியிருந்தார்.
பொன்னாலையில் கிருஷ்ணபரமாத்மாவின் காலடியில் இருந்து தீயவர்களை ஒழிக்கவும், அப்பாவிகளை காப்பதற்குமான பாரதப்போரின் அடுத்த கட்டம் ஆரம்பமாகியது.
ஆனால் இன்று வரலாற்றை திரிப்பது, அதனை அழிப்பது என்ற செயல்களை சிறீலங்கா அரசு மட்டுமல்ல தமிழக அரசும் மேற்கொண்டு வருவதாகவே தமிழ் ஆவலர்கள் கவலை தெரிவத்து வருகின்றனர். அதன் முதற்படியாகவே உலகத்தமிழாராட்சி மாநாட்டின் ஆரம்பகால தலைவர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதடன் கருணாநிதியை தலைவராக்கும் வரலாற்று சிதைவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் தனது குடும்பத்தின் நலனைத் தவிர தமிழர் என்றால் என்ன என தெரியாத கருணாநிதியையும், அவருக்கு பல்லாக்கு தூக்குபவர்களும் மேற்கொள்ளும் வரலாற்று திரிபுகள் ஒருபோதும் நிலைக்கப்போவதில்லை. 75,000 தமிழ் மக்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்ட தடையங்கள் அழியவில்லை, கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் எழும்பும் மரண ஓலங்களும் அடங்கவில்லை, ஆனால் சினிமா விழாவாக கோயம்புத்தூர் மாநாடு கொண்;டாடப்பட்டு வருகின்றது.
பல ஆயிரம் தமிழ் மக்கள் சிறையில்வாட கோயம்புத்தூரில் வரலாற்றை திரிக்கும் இவர்களின் இந்த மாநாட்டின் நினைவுகள் ஒருபோதும் வரலாற்றிலும், தமிழர் மனங்களிலும் நிலைக்கப்போவதில்லை.

Comments