எலும்புக்கூட்டு நகரமாக மாறும் கிளிநொச்சி

அண்மையில் கிளிநொச்சியின் கணேசபுரம் பகுதியில் மனித உடல்கள் மலசலகூட கழிவு குழிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இன்நிலையில் அடுத்த சில நாட்களுக்குள் கிளிநொச்சியின் பாடசாலை ஒன்றின் துப்பரவு பணியினை மேற்கொண்ட மக்களால் பல எலும்புக்கூடுகள் இனம்காணப்பட்டுள்ளன.

இவ்வாறுதான் தற்போது கிளிநொச்சி ஓர் எலும்புக்கூட்டின் நகரமாக மாறிக்கொண்டிருக்கின்றது என்றால் இது புதிதல்ல. அன்று தொட்டு வந்த வழிதான். இது இன்றும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

சந்திரிக்கா ஆட்சிக்காலப்பகுதியில் சிறீலங்காப்படையினரால் யாழ்ப்பாணத்தில் கிருசாந்தி படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைகுழியில் புதைக்கப்பட்டார். இவ்வாறு அந்த செம்மணி மண்ணில் இன்னும் பல புதைகுழிகள் காணப்படுகின்றன.

ஆனால அப்பகுதியில் தமிழ் மக்கள் வாழமுடியத பகுதியானதால் அங்கு சிறீலங்காப்படையினரே நிலைகொண்டுள்ளார்கள். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் தற்போது பதினையாயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் காணமல் பேயுள்ளதாக புள்ளிவிபரம் ஒன்று வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சியில் மனித புதைகுழிகள் தோண்டி எடுக்கப்படும் நிகழ்வுகளும் மக்களை அச்சத்தில் ஆழ்தியுள்ளது.

முன்னைய காலத்தில் சத்ஜெய படை நடவடிக்கை மூலம் கிளிநொச்சியை வல்வளைத்த சிறீலங்காப்படையினர் அங்கு நிலைகொண்ட காலங்களில் அங்கு சென்று காணிபார்க்க, தேங்காய் பிடுங்க, மாங்காய் பறிக்க சென்றவர்கள் எல்லாம் எலும்கூடுகள் ஆனார்கள்.

பின்பு ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கை மூலம் விடுதலைப்புலிகளால் கிளிநொச்சி வெற்றிகொள்ளப்பட்ட பின்பு காணிகளை பார்க்கசென்ற மக்களின் காணிகளுக்குள் பாழடைந்த கிணறுகள், பாழடைந்த வீடுகள், கிடங்குகள் போன்றவற்றில் இருந்து மக்களால் இனம்கண்டு எடுக்கப்பட்டு பின்பு அiடாயளம் காண்பதற்காக கிளிநொச்சி பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இவ்வாறுதான் தற்போதும் கிளிநொச்சி நகரில் புதைகுழிகளின் வரலாறு தொடர்ந்துகொண்டே செல்கின்றது.

அதாவது 2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் கிளிநொச்சி பகுதியில் 354 மனித உலும்புக்கூடுகள் மக்களால் மீட்கப்பட்டன.

அதன் வரலாறு தற்போது 2010 ஆம் ஆண்டும் புதுப்பிக்கப்படுகின்றது.

போர்முடிந்துள்ளதாக சிறீலங்கா அரசு கூறிவரும் நிலையில் போரின் விளைவான துன்பமும் துயரமும் அச்சமும் இன்னும் நீங்காத நிலையில் மக்கள் வாழ்கின்றார்கள்.

இருந்தும் வன்னி மண்ணில் இன்னும் எங்கொங்கோ எவ்வளவு படுகொலையின் மனித உடலங்கள் இருக்கும் என்று தெரியவில்லை.

தெற்காசியாவின் மனிபுதைகுழி நகரமாக தற்போது கிளிநொச்சி உருப்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

ரஸ்யாவில் சோவியத் சர்வதிகாரி ஜோசப் ஸ்டாலினின் காலத்திற்குரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் வன்னியில் மகிந்தவின் காலந்து மனித புதைகுழிகள் தோண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

- சங்கதிக்காக சுபன்

Comments