IIFA –FICCI பாலிவுட் திரைபட விருது விழா எதிர்ப்பு போராட்டம் Airtel சேவையை ஏன் புறக்கணிக்க வேண்டும்?


இந்துஸ்தான் பத்திரிக்கையில் ஜுன் 01 ம் தேதி வெளிவந்த கட்டுரையில் போர் காலத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு மருத்துவம் செய்ய இந்தியாவினால் அனுப்பபட்ட மருத்துவரின் பேட்டி ஒன்றில் “ இலங்கையில் நாங்கள் சந்தித்த ஒவ்வொருவரும் அவர்கள் குடும்பத்தில் ஒருவரை போரில் இழந்து இருந்தார்கள், கிட்டதட்ட 80% இப்படியாகதான் இருந்தது… 40,000 காயம்பட்டவர்களுக்கு நாங்கள் மருத்துவம் பார்த்தோம்”…இவரின் கூற்றுபடி 30,000 தமிழர்கள் இறந்து இருப்பார்கள் என்று அந்த பத்திரிக்கை கூறுகிறது. இந்தியாவினால் அனுப்பபட்ட ஒரு மருத்துவரே கூறியது கவனிக்க வேண்டியது இங்கு மிக அவசியமாகிறது.

மேலும் இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் திரு.குல்தீப் நய்யார் “… இலங்கை ரானுவம் கொலை, பாலியல் வன்முறை மற்றும் அப்பாவிமக்கள் மீதான கொலைகள் அந்த அரசை ஜனீவா ஒப்பந்தத்தை மீறிய அரசாக, ஒரு போர் குற்றவாளியாக பார்க்கவேண்டும் என்கிறார்…” (http://transcurrents.com/tc/2010/05/what_is_the_agenda_of_india_on.html)

இவ்வாறு இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு எதிராக ஒரு வருடத்திற்கு பிறகு விமர்சனங்கல் வரும் வேளையில் ஒரு குற்றவாளி அரசுடன் வணிகம் செய்வது மானுட விரோதசெயல் ஆகும்.

IIFA –FICCI இலங்கையில் நடத்துகின்ற பாலிவுட் திரைபட விருது வழங்கும் விழா இந்திய தொழில்நிறுவனங்கள் முதலீடு செய்யும் வர்த்தக ஒப்பந்தங்களொடு சேர்த்து நடைபெர இருக்கிறது. இந்த விருது விழா மற்றும் வர்த்தக ஒப்பந்த விழா இரண்டும் இலங்கை அரசின் இனபடுகொலை, போர் குற்றச்சாட்டுகளில் இருந்து காப்பற்றப்படுவது மட்டும் அல்லாமல் இலங்கையை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்கவும் நடைபெறுகிறது.
மேலும் ஈழத்தமிழர்களை பொழுதுபொக்கு போதைகளில் சிக்கவைப்பது, வணிகம் சார்ந்த விளையாட்டு துறைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் தமிழீழ போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்வது உட்பட பல்வேறு சதிகளுடன் இந்திய நிறுவனங்கள் அரசுகளுடன் கூட்டு சேர்ந்துள்ளன..

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, தெற்காசிய வல்லாதிக்கங்களுடன் இணைந்து இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை கொன்றொழித்த சிங்கள பெளத்த இன வெறி ராஜபக்ச அரசை போர்க் குற்றவாளி என்றும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தவர் என்றும் டப்ளினில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் உறுதியாகத் தெரிவித்தது மட்டுமின்றி, தமிழினத்திற்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திய அந்தப் போரில் தமிழினப் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாற்றின் மீது ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.விற்கும், உலக நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைப் போரில் அப்பாவி மக்களுக்கு எதிராக இழைத்த போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்து என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஐரோப்பிய ஒன்றியம், சிறிலங்க அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காததைக் கண்டிக்கும் வகையில், அந்நாட்டிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களுக்கு அளித்துவந்த வரிச் சலுகையை (General System of Preferences +) நிறுத்தியுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு போர் முடிந்த பிறகு இலங்கை சென்ற ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், சிறிலங்க அதிபர் ராஜபக்சவிடம் வலியுறுத்தினார். ஆனால் அப்படி எந்த நடவடிக்கையையும் ராஜபக்ச எடுக்கவில்லை. இதனால் ஐ.நா. ஏன் அமைதி காக்கிறது என்ற கேள்வியும் எழுந்தது. அந்த நிலையில்தான் அப்பாவித் தமிழ் இளைஞர்களை சிங்கள இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்யும் காண்பொளிக் காட்சி வெளியாகி, அது உண்மையானதுதான் என்பது நிரூபனமானது. டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஆழமான விசாரணை நடத்தி சிறிலங்க அரசை போர்க் குற்றவாளி என்று அறிவித்தது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியினால், இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவும், அதன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கவும் நிபுணர் குழு ஒன்றை அமைப்பதாக ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அறிவித்தார்.

ஐ.நா.பொதுச் செயலரின் இந்த அறிவிப்பைக் கண்டு அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கும் சிறிலங்க அரசு, அப்படிப்பட்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டாம் என்று தனது அயலுறவு அமைச்சர் ஜி.எல். பெய்ரீஸை அனுப்பி பான் கி மூனிடம் நேரிடையாக கேட்டுக்கொண்டது. ஆனால், பான் கி மூன் மறுத்துவிட்டார்.

இப்படி உலக நாடுகளும், ஐ.நா.வும் சிறிலங்க அரசு இழைத்த போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிராக இழைத்த அநீதிகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை விசாரிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், அதன் இனப் படுகொலை குற்றத்தை மறைக்கும் வகையில் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழாவை நடத்த இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கி (Federation of Indian Chambers of Commerce & Industry – FICCI), இந்தி திரையுலகத்துடன் இணைந்து அங்கு விருது வழங்கு விழாவை நடத்தும் முடிவை இரகசியமாக எடுத்து செயல்படுத்தி வருகிறது.

ஜூன் 3,4,5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் ஐஃபா விருது வழங்கு விழா நடைபெறுகிறது. முதல் நாள் பாலிவுட் திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கு விழாவை பெரும் கலை விழாவாக நடத்துவது, மறுநாள், 4ஆம் தேதி உலக வணிக மாநாடு நடத்துவது, 3வது நாள் சிறிலங்க கிரிக்கெட் அணியுடன், பாலிவுட் நட்சத்திரங்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியே மிக முக்கியமானதாகும். அன்று இலங்கையில் தங்களுடைய தொழில், வர்த்தக நிறுவனங்களைத் தொடங்க பல ஒப்பந்தங்கள் செய்யப்படவுள்ளன. இந்த வணிக மாநாட்டை திட்டமிட்டு நடத்துவது ஃபிக்கி அமைப்பாகும்.

இதற்காக அந்த நிறுவனம் அமித் குமார் என்பவரை நியமித்துள்ளது. இந்த வணிக மாநாட்டில் ரூ.10,000 செலுத்தி கலந்து கொள்ள வருமாறு பல இந்திய வர்த்தக நிறுவனங்களுக்கு ஃபிக்கி அழைப்பு விடுத்துள்ளது. இந்த வணிக மாநாட்டில் பங்கேற்க வருமாறு தனது இணைய தளத்தில் அழைப்பு விடுத்துள்ள ஃபிக்கி, இலங்கையை புதிய நாடு என்றும், வர்த்தக விரிவுபடுத்தலுக்கும், முதலீட்டிற்கும் வாய்ப்பளிக்கும் உற்சாகமாக நாடு என்றும் வர்ணித்துள்ளது.

உலகமே இலங்கையை போர்க் குற்றவாளியாகும், மனித உரிமை மீறல்களில் முன்னணியில் இருக்கும் நாடாகவும் குற்றம் சாற்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அந்நாட்டை ‘புதிய இலங்கை’ என்று புளங்காகிதத்துடன் வர்ணிக்கிறது ஃபிக்கி. பத்திரிக்கையாளர்களுக்கு மிக அபாயகரமான நாடு என்று கூறுகிறது எல்லையற்ற பத்திரிக்கையாளர்கள் அமைப்பு. ஆனால் அதனை வணிக வாய்ப்புகளை அள்ளித்தரும் உற்சாக பூமி என்கிறது ஃபிக்கி.

சிறிலங்க அரசைப் பொறுத்தவரை, இனப் படுகொலை குற்றச்சாற்றால் பொருளாதார வளர்ச்சியை முற்றிலும் இழந்துவிட்ட நிலையில், தனது நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை மேம்படுத்திக்கொள்ள இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து செயலாற்றி வருகிறது. இந்த விழாவை ஃபிக்கியுடன் இணைந்து அங்கு நடத்துவது சிறிலங்க சுற்றுலா அமைச்சகம் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவேதான், தமிழின அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன. தமிழ் திரைப்பட உலகும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் கொழும்பு ஐஃபா விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.ஆனால் ஃபிக்கி விழாவை நடத்தியே தீருவது என்பதில் உறுதியாகவுள்ளது. எனவே இதுவரை கண்டன, எதிர்ப்பு இயக்கங்களை நடத்திவந்த தமிழின அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

எனவேதான், ஃபிக்கி அமைப்பின் தலைவராக உள்ளவர் ராஜன் பார்த்தி மிட்டல். இவருடைய நிறுவனம்தான் ஏர்டெல். இந்த ஏர்டெல் நிறுவனம் இன வெறி சிறிலங்க அரசுடன் கைகோர்த்து தனது வணிக நலன்களை மேம்படுத்திக்கொண்டு வருகிறது. 2008ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கையின் ஒரு பகுதியில் – கொழும்புவிலிருந்து புத்தளம் வரை – செல்பேசி சேவையை நடத்த அனுமதி பெற்ற ஏர்டெல், தற்கோது 12 இலட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் முதன்மையான செல் பேசி நிறுவனங்களில் ஒன்றாக இயங்கிவரும் ஏர்டெல்லிற்கு 13 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் 1.25 கோடி வாடிக்கையாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். தமிழனைக் கொல்லும் அரசுடன் உறவு வைத்துக் கொண்டு, தமிழினடே வணிகமும் செய்யும் மனிதாபிமானமற்ற ஏர்டெல் நிறுவனம், ஈழத் தமிழினத்தை அழித்த சிறிலங்காவின் இனப் படுகொலைப் போரில் அந்நாட்டிற்கு உதவியதாகவும் குற்றச்சாற்று உள்ளது.

அந்த உதவிக்கு கைமாறாக்கத்தான் அங்கு செல்பேசி சேவை நடத்த அனுமதி பெற்றதென்றும் கூறுகின்றனர்.

ஆக, ஒரு நிறுவனத்திற்கு இருக்க வேண்டிய மனிதாபிமான பார்வை சற்றும் இல்லாமல், வெறும் இலாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது மட்டுமின்றி, தமிழின எதிர்ப்பில் ஆழமாக வேரூன்றிய நிறுவனமாக ஏர்டெல் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் தலைவர் ஃபிக்கியின் தலைவராக இருந்துகொண்டு சிறிலங்க அரசின் இனப் படுகொலை குற்றத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

எனவேதான், நம்மினத்தை அழித்த இன வெறி சிறிலங்க அரசை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் ஃபிக்கியை கண்டித்தும், ஒரு நிறுவனத்திற்கு இருக்க வேண்டிய சமூக பொறுப்பை தட்டிக்கழித்து செயலாற்றிவரும் ஏர்டெல் சேல் பேசி சேவையை தமிழர்களையாக நாம் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க இன வெறி அரசுடன் கைகோர்த்து வணிகம் செய்யும் ஏர்டெல் செல் பேசிச் சேவையை புறக்கணிப்போம்.

இன வெறி சிறிலங்க அரசின் பொருளாதார முதுகெலும்பை முறிப்போம்.

தோழர். விடுதலை ராசேந்திரன் (பொதுச் செயளாலர். பெரியார் திராவிட கழகம்)
தோழர். தியாகு (தலைவர். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்)
தோழர். அய்யநாதன் (ஒருங்கிணைப்பாளர், தமிழினப் பாதுகாப்பு கூட்டமைப்பு)
தோழர். வழக்கறிஞர். பா. புகழேந்தி (ஒருங்கிணைப்பு செயலாளர். தமிழக மக்கள் உரிமை கழகம்) தோழர். புகழேந்தி - இயக்குனர்.
தோழர். TSS மணி – பத்திரிக்கையாளர்.
தோழர். கயல் (ஒருங்கிணைப்பாளர், தமிழக பெண்கள் செயற்களம்)
தோழர். அருணபாரதி (ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழர் இயக்கம்)
தோழர். திருமுருகன் (மே பதினேழு இயக்கம்)

மே 17 இயக்கம், தமிழினப் பாதுகாப்பு கூட்டமைப்பு

-----------

இந்திய திரைப்பட விழா – எதிர்ப்பு போராட்டம் வலுக்கிறது! ஏயர்டெல்லை புறக்கணிக்க முடிவு!!


தமிழ் திரைப்பட உலகும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் கொழும்பு ஐஃபா (IFFA) விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. ஆனால் ஃபிக்கி(FICCI) விழாவை நடத்தியே தீருவது என்பதில் உறுதியாகவுள்ள நிலையில் இதற்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழின அமைப்புகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

ஃபிக்கி அமைப்பின் தலைவராக உள்ளவர் ராஜன் பார்த்தி மிட்டல். இவருடைய நிறுவனம்தான் ஏர்டெல். இந்த ஏர்டெல் நிறுவனம் இன வெறி சிறிலங்கா அரசுடன் கைகோர்த்து தனது வணிக நலன்களை மேம்படுத்திக்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய திரைப்பட விழாவிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வரும் மே 17 இயக்கம் மற்றும் தமிழினப் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகியன தமது அடுத்த கட்ட நடவடிக்கையாக, ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிக்க கோரும் வேண்டுகோளை விடுத்துள்ளன.

இது தொடர்பாக மே 17 இயக்கம் மற்றும் தமிழினப் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகியன விடுத்துள்ள அறிக்கையின் சில பகுதிகளை இங்கு தருகிறோம்.

இலங்கையில் நடக்கின்ற பாலிவுட் திரைப்பட விருது வழங்கும் விழா இந்திய தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யும் வர்த்தக ஒப்பந்தங்களோடு சேர்த்து நடைபெற இருக்கிறது. இந்த விருது வழங்கும் விழா மற்றும் வர்த்தக ஒப்பந்த விழா (Global Business Conclave) இரண்டும் இலங்கை அரசின் இனபடுகொலை, போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து அதனை காப்பற்றுவது மட்டும் அல்லாமல் இலங்கையை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்கவும் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.

ஜூன் 3,4,5 ஆம் தேதிகளில் கொழும்பில் ஐஃபா விருது வழங்கு விழா நடைபெறுகிறது. முதல் நாள் பாலிவுட் திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவை பெரும் கலை விழாவாக நடத்துவது, மறுநாள், 4 ஆம் தேதி உலக வணிக மாநாடு நடத்துவது, 3 வது நாள் சிறிலங்கா கிரிக்கெட் அணியுடன், பாலிவுட் நட்சத்திரங்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியே மிக முக்கியமானதாகும். அன்று இலங்கையில் தங்களுடைய தொழில், வர்த்தக நிறுவனங்களைத் தொடங்க பல ஒப்பந்தங்கள் செய்யப்படவுள்ளன. இந்த வணிக மாநாட்டை திட்டமிட்டு நடத்துவது ஃபிக்கி அமைப்பாகும்.

இதற்காக அந்த நிறுவனம் அமித் குமார் என்பவரை நியமித்துள்ளது. இந்த வணிக மாநாட்டில் ரூ.10,000 செலுத்தி கலந்து கொள்ள வருமாறு பல இந்திய வர்த்தக நிறுவனங்களுக்கு ஃபிக்கி அழைப்பு விடுத்துள்ளது. இந்த வணிக மாநாட்டில் பங்கேற்க வருமாறு தனது இணைய தளத்தில் அழைப்பு விடுத்துள்ள ஃபிக்கி, இலங்கையை புதிய நாடு என்றும், வர்த்தக விரிவுபடுத்தலுக்கும், முதலீட்டிற்கும் வாய்ப்பளிக்கும் உற்சாகமாக நாடு என்றும் வர்ணித்துள்ளது.

உலகமே இலங்கையை போர்க் குற்றவாளியாகவும் மனித உரிமை மீறல்களில் முன்னணியில் இருக்கும் நாடாகவும் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அந்நாட்டை ‘புதிய இலங்கை’ என்று புளகாங்கிதத்துடன் வர்ணிக்கிறது ஃபிக்கி. பத்திரிகையாளர்களுக்கு மிக அபாயகரமான நாடு என்று கூறுகிறது எல்லையற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு. ஆனால் அதனை வணிக வாய்ப்புகளை அள்ளித்தரும் உற்சாக பூமி என்கிறது ஃபிக்கி.

சிறிலங்கா அரசைப் பொறுத்தவரை, இனப் படுகொலை குற்றச்சாட்டால் பொருளாதார வளர்ச்சியை முற்றிலும் இழந்துவிட்ட நிலையில், தனது நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை மேம்படுத்திக்கொள்ள இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து செயலாற்றி வருகிறது. இந்த விழாவை ஃபிக்கியுடன் இணைந்து அங்கு நடத்துவது சிறிலங்க சுற்றுலா அமைச்சகம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவேதான், ஃபிக்கி அமைப்பின் தலைவராக உள்ளவர் ராஜன் பார்த்தி மிட்டல். இவருடைய நிறுவனம்தான் ஏர்டெல். இந்த ஏர்டெல் நிறுவனம் இன வெறி சிறிலங்க அரசுடன் கைகோர்த்து தனது வணிக நலன்களை மேம்படுத்திக்கொண்டு வருகிறது. 2008ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கையின் ஒரு பகுதியில் – கொழும்பிலிருந்து புத்தளம் வரை – செல்பேசி சேவையை நடத்த அனுமதி பெற்ற ஏர்டெல், தற்போது 12 இலட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் முதன்மையான செல் பேசி நிறுவனங்களில் ஒன்றாக இயங்கிவரும் ஏர்டெல்லிற்கு 13 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் 1.25 கோடி வாடிக்கையாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். தமிழனைக் கொல்லும் அரசுடன் உறவு வைத்துக் கொண்டு, தமிழனோடு வணிகமும் செய்யும் மனிதாபிமானமற்ற ஏர்டெல் நிறுவனம், ஈழத் தமிழினத்தை அழித்த சிறிலங்காவின் இனப் படுகொலைப் போரில் அந்நாட்டிற்கு உதவியதாகவும் குற்றச்சாட்டும் உள்ளது. அந்த உதவிக்கு கைமாறாக்கத்தான் அங்கு செல்பேசி சேவை நடத்த அனுமதி பெற்றதென்றும் கூறுகின்றனர்.

ஆக, ஒரு நிறுவனத்திற்கு இருக்க வேண்டிய மனிதாபிமான பார்வை சற்றும் இல்லாமல், வெறும் இலாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது மட்டுமின்றி, தமிழின எதிர்ப்பில் ஆழமாக வேரூன்றிய நிறுவனமாக ஏர்டெல் செயல்பட்டு வருகிறது.

அந்நிறுவனத்தின் தலைவர் ஃபிக்கியின் தலைவராக இருந்துகொண்டு சிறிலங்கா அரசின் இனப் படுகொலை குற்றத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

எனவேதான், நம்மினத்தை அழித்த இன வெறி சிறிலங்க அரசை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் ஃபிக்கியை கண்டித்தும், ஒரு நிறுவனத்திற்கு இருக்க வேண்டிய சமூக பொறுப்பை தட்டிக்கழித்து செயலாற்றிவரும் ஏர்டெல் சேல் பேசி சேவையை தமிழர்களாகிய நாம் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தமிழினப் படுகொலை செய்த சிறிலங்கா இன வெறி அரசுடன் கைகோர்த்து வணிகம் செய்யும் ஏர்டெல் செல் பேசிச் சேவையை புறக்கணிப்போம்.

இன வெறி சிறிலங்க அரசின் பொருளாதார முதுகெலும்பை முறிப்போம்.

தமிழர்கள் நாம் ஒன்றுபடுவோம்……தமிழீழ விடுதலையை வென்று காட்டுவோம். நாம் வெல்வோம்

என இவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments