தமிழின உணர்வாளர்களை காசு கொடுத்து கூட்டிய கூட்டம் என்று அவமானப்படுத்தியது IIFA- சபாஸ் ஜோசப்

நேற்று இரவு டைம்ஸ்நவ் (TimesNow) தொலைக்காட்சியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய IIFA விழாவை நடத்தும் விஸ்கிராப்ட் (Wizcraft) நிறுவனத்தின் இயக்குனரும் இந்த நிகழ்வின் முக்கிய காரணகர்த்தாவுமான சபாஸ் ஜோசப் தான் இப்படி திமிர்த்தனமாக பேசினார்.

மும்பையில் பாலிவுட் இன் முக்கிய நடிகரும் IIFA இன் தூதுவருமான திரு.அமிதாப் வீட்டின் முன் முற்றுகை போராட்டமும் பிறகு குடும்பமாக குழந்தைகளுடன் உண்ணாவிரதமும் நடத்தி இலங்கையில் நடக்கும் ஐபா விழாவை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களுக்கு ஆரம்பமாக வித்திட்ட மும்பை தமிழின உணர்வாளர்களை தான் சபாஸ் ஜோசப் இலங்கையில் இருந்துகொண்டு ராஜபக்சேவின் அரவணைப்பில் இப்படி வாய் கொழுப்பு எடுத்து பேசி உள்ளார்.

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐபா விழாவில் கலந்துகொள்ள இலங்கை செல்லும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தென்னிந்தியாவில் தடை செய்வோம் என்று தமிழினத்திற்காக மனிதாபிமான குரல் கொடுத்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் செயலாளர் மதிற்பிற்குரிய திரு.சுரேஷ் குமார் அவர்களுடன் நடைபெற்ற வாக்குவாதத்தின் போது தான் சபாஸ் ஜோசப் இப்படி தமிழின உணர்வை கொச்சைபடுத்தி பேசினார்.

ஐபா வை இலங்கையில் நடத்தகூடாது என்று போராடிய தமிழர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது என்றால், இலங்கையின் இனப்படுகொலையை மறைக்க நடக்கும் இவ்விழாவை தமிழர்களின் உணர்வை மதித்து தாமாக முன்வந்து புறக்கணித்த எண்ணற்ற திரைத்துறையினர் அமிதாப் உட்பட எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்று சொல்வாரா இந்த ஜோசப். ???

இராஜபக்சேவின் சதிநாடகத்தை செயல்படுத்தி தமிழர் நிலங்களை இந்திய பெரு முதலாளிகளுக்கு கூறு போட்டு விற்க துடிக்கும் இந்த தரகர் குள்ளநரி நம் அனைவரையும் அவமானப்படுத்துகிறது தமிழன் விழிக்கமாட்டான் என்று நினைப்பா? .

இதற்கு ஆதாரமாக சபாஸ் ஜோசப் பேசியதன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

Comments